Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப்பெயர்ச்சி 2025: சனியின் பார்வையில் சிக்கும் சிம்மம்.. நினைச்சாலே பதறுதே! ஆனாலும் அதிர்ஷ்டம்தான்

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி 2025: மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சியானது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், சிம்ம ராசியினர் இந்த சனிப்பெயர்ச்சியில் எந்தவிதமான அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். இந்த சனிப்பெயர்ச்சியில் ரிஷப ராசியினர் பெறும் பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு ராசியிலும் சனி பகவான் இரண்டரை வருடம் சஞ்சரிக்கிறார். அனைத்து ராசிகளையும் கடந்து வர கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகும். அந்த வகையில், மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் மகர ராசியை விட்டு பெயர்ந்து கும்பத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், தற்போது சனி மீனத்துக்குப் பெயர்ச்சியாகிறார்.

sani peyarchi 2025 Leo

சிம்ம ராசிக்காரர்கள் இந்த ஆண்டின் சனிப்பெயர்ச்சி மற்றும் ராகு கேது பெயர்ச்சி காலங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலகட்டமாகும். குரு லாபத்தில் வந்தாலும் சனி சாதகமற்ற நிலையில் இருப்பதால் அதன் தாக்கம் அதிக அளவில் இருக்கும். குரு லாபத்தில் வந்தாலும் 50 சதவீதம் மட்டுமே அதன் லாபம் கிடைக்கும். சனிப்பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு சில பாதிப்புகளைத் தரக்கூடும்.

வரும் ஏப்ரல் முதல் 2027 ஏப்ரல் மாதம் வரைக்கும் திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது. நிச்சயதார்த்தம் செய்தவர்கள் தனிப்பட்ட ஜாதகத்தை குடும்ப ஜோதிடரிடம் கேட்டு பரிகாரம் செய்து கொள்வது நல்லது. புதிதாக திருமணமான தம்பதிகள், காதலிப்பவர்கள் பிரிவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. பூரம், மகம், உத்திரம் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.

மகம் நட்சத்திரக்காரர்கள் எந்தவொரு முடிவையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எடுப்பார்கள். மிகுந்த நம்பிக்கையோடு என் வாழ்க்கையை நான் பார்த்துக் கொள்வேன் என்று சொல்பவர்கள் பின்னர் எதாவது தோல்வியை சந்தித்தாலும் அவர்களுடைய மனம் அதனை ஒத்துக் கொள்ளாது. திருமண விஷயத்தில் கண்டிப்பாக கவனமாக இருக்க வேண்டும்.

ராசியில் கேது, 7 இல் ராகு, 8 இல் சனி இருப்பதால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. உத்திரம் நட்சத்திரக்காரர்கள் தான் மற்றும் தனது தந்தையின் உடல் நலனில் கவனமாக இருக்க வேண்டும்.

லாபத்தில் குரு சாதகமாக இருப்பதால் வீடு வாங்குவதற்கு கடன் வாங்குவது, இருக்கும் நிலத்தில் வீடு கட்டுவது சாதகமான பலன்களைத் தரும். வீடு வாங்கக்கூடிய அமைப்பு சிம்ம ராசியினருக்கு உள்ளது. இளைஞர்கள் வாகனங்களை வாங்காமல் இருப்பது நல்லது. 15, 16 வயதில் இருப்பவர்கள் மிதிவண்டி ஓட்டினால் கூட காயங்களை சந்திக்க நேரிடும்.

உத்தியோகம், வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு நல்ல யோகமான காலமாக இருக்கும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்யலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றம் உண்டாகும். இடமாற்றத்தை ஏற்றுக் கொள்வது நல்ல முன்னேற்றத்தை உண்டாக்கும். குடும்பத்திடம் இருந்து சற்று விலகி இருந்தால் சனி பகவானால் எந்தவித பிரச்சனையும் குடும்பத்தில் ஏற்படுத்த முடியாது.

மகம் நட்சத்திரக்காரர்களுக்கு அனைத்துவிதமான நன்மைகளும் கிடைக்கும். இருப்பினும் முடிவெடுப்பதில் தவறு நிகழ்வதற்கான வாய்ப்புள்ளது. மாணவர்கள் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். விடுதியில் தங்கியிருப்பவர்கள், உயர் கல்விக்காக வெளியூர் சென்றுள்ளவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

குறிப்பாக, வயிறு, கால், எலும்பு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. புதிய தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சகிப்புத் தன்மை மற்றும் பொறுப்பு மிகவும் அவசியமாகும். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, மீன நட்சத்திர தந்தை இருந்தால் பரிகாரங்கள் செய்வது நல்லது.

பரிகாரங்கள் - வீட்டில் நவக்கிரக ஹோமம், மகா மித்ரும் ஜெய யோகம் செய்வது நல்லது. இதன் மூலம் சனியின் பார்வையுனுடைய கடுமை நமக்கு குறையும். ஒவ்வொரு சதுர்த்திக்கும் விநாயகரை வழிபாடு செய்யலாம். காணிப்பாக்கத்தில் உள்ள விநாயகர் கோயிலில் சதுர்ச்சியன்று கணபதி ஹோமத்தில் கலந்துகொள்வது கிரக சூழ்நிலைகளுக்கு நல்ல பரிகாரமாக இருக்கும்

பெண்கள் மிகவும் அமைதி, நிதானம் மற்றும் பொறுமையுடன் இருப்பது அவசியம். இந்த காலகடத்தில் உங்களுக்கு பெரிய மாற்றம் ஏற்படும். பூரம் நட்சத்திரக்காரர்கள் தோல் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அலர்ஜி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டம் சிம்ம ராசிக்கு சோதனை காலமாக இருந்தாலும் பொறுமை நிதானம் இருந்தால் அஷ்டம சனி கோச்சார காலத்தில் வெற்றிகரமாக இருக்கலாம்.

கடன் வாங்குவது, கொடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்கள், உறவினர்களிடத்தில் கடன் வாங்காமல் இருப்பது நல்லது. பிரதோஷ கால வழிபாட்டில் கலந்துகொள்வது நல்லது. சுருட்டப்பள்ளி சிவன் ஆலய வழிபாடு நல்ல பலனைக் கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான சிறந்த காலமாக

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+