Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப்பெயர்ச்சியில் ராஜயோகம் பெறும் 'துலாம் ராசி'.. சொந்த வீடு, வாகனம், செல்வம்னு ராஜவாழ்க்கை ஆரம்பம்

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி 2025: மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சியானது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், துலாம் ராசியினர் இந்த சனிப்பெயர்ச்சியில் எந்தவிதமான அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். இந்த சனிப்பெயர்ச்சியில் துலாம் ராசியினர் பெறும் பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு ராசியிலும் சனி பகவான் இரண்டரை வருடம் சஞ்சரிக்கிறார். அனைத்து ராசிகளையும் கடந்து வர கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகும். அந்த வகையில், மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் மகர ராசியை விட்டு பெயர்ந்து கும்பத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், தற்போது சனி மீனத்துக்குப் பெயர்ச்சியாகிறார்.

sani peyarchi 2025 Libra

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியான 12 ராசிகளில் ஜாக்பாட் அடிக்கக்கூடிய ராசிகளில் முதல் ராசி துலாம் ராசிதான். 6 ஆம் இடத்தில் சனி பகவான் வருகிறார். 6 இல் இருக்கக்கூடிய ராகு 5க்கு வருகிறார். கேது பகவான் லாபத்துக்கு வந்து போகிறார். குரு பகவானின் மாற்றம் 9 ஆம் பார்வையாக இருப்பதால் துலாம் ராசியில் 6 ஆம் இடத்துக்குப் போகக்கூடிய சனி பகவான் நிறைய தன லாபத்தை தருவார். கை நிறைய சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கைகூடி வரும். வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம் அபரிமிதமான பலன்களைப் பெறுவீர்கள்.

கோர்ட், வழக்கு, எதிரிகளால் ஏற்பட்டு வந்த துன்பங்கள், விவாகரத்து போன்ற அலைக்கழித்த காலங்கள் உங்களை விட்டு விலகும். வழக்குகளில் தீர்வு கிடைக்கும். அது சாதகமாக இருந்தாலும், பாதகமாக இருந்தாலும் அடுத்தகட்ட நடவடிக்கையை நோக்கிச் செல்வீர்கள். சித்திரை நட்சத்திரக்காரர்கள் சொத்து பிரச்சனை, சகோதர பிரச்சனைகளில் முழுமையான சாதக விஷயங்கள் கிடைக்காவிட்டாலும், ஒரு பாதியாவது கிடைக்கும்.

ஸ்வாதி நட்சத்திரக்காரர்கள் 6 ஆம் இடத்தில் சனி பகவான் இருப்பதால் கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்தாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்துக்குச் செல்வது நல்லது. கூட்டுத்தொழில் முயற்சியில் பங்கேற்கலாம். விசாக நட்சத்திரக்காரர்களுக்கு இதுவரையில் நமக்கு விற்றுப்போகாத வீடு, சொத்துகள் விற்று போகும். கடனை அடைக்கக்கூடிய சூழல் உண்டாகும்.

6 ஆம் இடத்தில் சனி வருவதால் பண வரவு உண்டாகும். பாக்கியத்தில் குரு பகவான் மே மாதத்தில் வருகிறார். மார்ச் மாதம் 30 ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதி வரை அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். சனி பகவானும். ராகு பகவானும் ஒன்றாக 6 ஆம் இடத்தில் இருக்கிறார்கள். அதிகமாக கடனை வாங்கக்கூடிய வாய்ப்பை உண்டாக்கித் தரும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கடன் வாங்குவது குறித்து சிந்திக்கலாம்.

வீடு, வண்டி, வாகனங்கள் வாங்கக்கூடிய யோகங்கள் உண்டாகும். பெண்களுக்கு மன நிம்மதியும், குடும்பத்தில் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் மாறக்கூடும். உடன் பிறந்தவர்களால் நமக்கு நன்மைகள் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு நல்ல ஒரு முன்னேற்றமான காலமாக இருக்கும். வெளிநாட்டிற்குச் சென்று உயர்கல்வி படிப்பவர்களுக்கு இருந்து வந்த தடைகள் அனைத்தும் தீரும்.

ராகு கேதுவின் மாற்றம், குருவின் மாற்றமானது துலாம் ராசியினருக்கு குழந்தை பாக்கியத்தை உருவாக்கி கொடுக்கும். துலாம் ராசியினருக்கு செப்டம்பர் மாதத்துக்கு மேல் படிப்படியான முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடிய காலமாக இருக்கும். ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மே கடைசி வரை ஒன்றரை மாத காலம் துர்கை வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும்.

பரிகாரம் - செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தோறும் ராகு காலத்தில் எலுமிச்சை மாலை சாற்றி துர்கையை வழிபடுவது இந்த கிரக மாற்றங்கள் சாதமான பலன்களைத் தரும். துலாம் ராசியினருக்கு எந்தவிதமான மனசஞ்சலமோ, அச்சமோ தேவையில்லை. மருத்துவ செலவுகள் இருந்து வந்தவர்களுக்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.

தெளிவான சிந்தனையுடன் எந்தவொரு செயலையும் ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு செய்யலாம். மாணவர்கள் படிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. மனதில் சஞ்சலங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. விநாயக பெருமான், சரஸ்வதி, ஹயக்ரீவர் ஸ்லோகத்தை சொல்லி வருவது நல்ல பலன்களைத் தரும். ராகு கேது பெயர்ச்சிக்குப் பின்னர் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

பெண்கள், குழந்தைகள் 6 ஆம் இடத்தில் சனி பகவான் இருக்கும்போது உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். விநாயகர் அகவல் படிப்பது நல்ல பலன்களைத் தரும். எடுத்த காரியங்களில் வெற்றியைப் பெறுவீர்கள்.

உத்தியோக பிரச்சனைகள் தீர சனிக்கிழமை தோறும் பைரவருக்கு தீபமேற்றுவது நல்லது. வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வருமானங்கள் அதிகரித்தாலும் செலவுகளும், குழப்பங்களும் உண்டாகும். சனிக்கிழமைதோறும் காகத்திற்கு அன்னமிடுவது, ஆலயங்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்வது நற்பலன்களை அள்ளிக் கொடுக்கும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+