2025 சனிப்பெயர்ச்சி எப்போது?.. ராஜயோகம் பெறும் ராசியினர் யார் தெரியுமா?.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா
Sanipeyarchi palangal: 2025 ஆம் ஆண்டின் சனிப்பெயர்ச்சியானது மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒன்பது கிரகங்களில் வலிமையான கிரகம் என்பது சனி பகவான்தான். ஒரு கிரகம் ஒரு பாவத்தில், ஒரு வீட்டில், அல்லது ஒரு ராசியில் அதிக காலம் சஞ்சரிக்கக் கூடிய கிரகமாக சனி பகவான் உள்ளது. சந்திரன் இரண்டரை நாள், மாத கோள்கள் என்று சொல்லும் புதன், செவ்வாய், சூரியன் ஆகிய கிரகங்கள் ஒரு மாதம், இரண்டு மாதம் இருக்கும். ராகு கேது கிரகம் ஒன்றரை வருடமும், குரு பகவான் ஒரு வருடம் ஒரு ராசியில் இருப்பார்.

ஆனால், சனி பகவான் மட்டும்தான் ஒரு ராசியில் அதிக காலமாக இரண்டரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்வார். 2025 ஆம் ஆண்டில் சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். 7, 8 வருடங்கள் முழுவதுமாக பாவ கிரகங்களின் வீட்டில் சனி பகவான் சஞ்சரித்து வந்த நிலையில், தற்போது குரு பகாவனின் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். மீனத்துக்கு போகக்கூடிய சனி பகவான் குழுமையாக, இனிமையாக மாறி அனைத்து ராசிகளுக்கும் நல்ல பலன்களை கொடுக்கப் போகிறார்.
பொதுவாக சனி பகவான் என்றாலே மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு இருக்கும். அசுப பலன்களை மட்டுமே தருபவர் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், சனி பகாவன் மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களை அள்ளித் தருபவராவர். நீதிக்காரகன், தர்மக்காரகன் என்று அழைக்கப்படும் சனி பகவான் தராசில் வைத்தது போல அனைத்து விதமான பலன்களையும் சரிசமமாக தரக்கூடிய நீதிமானாக செயல்படக் கூடியவராவார்.
அந்த வகையில், மார்ச் மாதம் நடைபெறவுள்ள இந்த சனிப்பெயர்ச்சியின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் காணப்படும். ஆனாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கும். இதில், 6 ராசிக்காரர்கள் யோகமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அதன்படி, ராஜயோகத்தை அனுபவிக்கும் ராசிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு 11 ஆம் இடத்தில் சனி பகவான் வருவதால் அற்புதமான ராஜ யோகங்களை ரிஷப ராசியினர் அனுபவிக்கப் போகின்றனர். 9க்கும் பத்துக்கும் அதிபதி. இயல்பிலேயே ராஜயோகாதிபதி 11 ஆம் இடத்தில் இருக்கும்போது அபரிமிதமான செல்வ பலன்களைக் கொடுக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனை, திருமணம் என அனைத்துப் பிரச்சனைகளும் சரியாகும். மனிதனுக்குத் தேவையான அனைத்து செல்வத்தையும், பொருளாதாரம், குடும்பம், மன அமைதி என அனைத்து விஷயங்களையும் தரப்போகிறார். 11 ஆம் இடத்தில் லாபஸ்தானத்தில் சனி பகவான் வருவதால் அடுத்த மூன்று வருடம் மிகச் சிறந்த பலன்களை அனுபவிப்பார்கள்.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு இதுவரை 9 ஆம் இடத்தில் சஞ்சரித்து வந்தார். தற்போது பத்தாம் இடத்துக்கு வருகிறார். இதுவரை இழுபறியாக இருந்து வந்த பாக்கிய தடைகள் அனைத்தும் நீங்கும். தொழில், வேலையில் வேகமெடுக்கும். கடின உழைப்பால் முன்னேற்றத்தைக் காண்பீர்கள், தொழில், வியாபாரம், வேலையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
கடகம் - இந்த சனிப்பெயர்ச்சியின் நாயகர்களே கடக ராசிக்காரர்கள்தான். அந்த அளவுக்கு யோக பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். கடந்த இரண்டரை வருடம் கஷ்டம், துன்பம், தடங்கல், தாமதம் அனுபவித்து வந்திருப்பீர்கள். சனி பகவான் தற்போது 9 ஆம் இடத்துக்குப் போகப் போகிறார். அஷ்டமத்து சனி உங்களை விட்டு விலகுகிறது. அடுத்த 6 மாதங்கள் அனைத்துப் பிரச்சனைகளும் நீங்கும்.
துலாம் - துலாமிற்கு 6 ஆம் இடத்திற்கு சனி பகவான் வருகிறார். கடன், நோய், எதிரிகள், தாமதம் ஆகிய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுதலை அடையப் போகிறீர்கள். சுப கிரகத்தின் வீடு, சனி பகவான் வருவது என அனைத்தும் சுபமாக இருப்பதால் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். யோக பலன்களைப் பெறுவீர்கள்.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி முடிகிறது. நான்காம் இடத்தில் இருந்து ஐந்தாம் இடத்துக்கு சனி பகவான் வருகிறார். இதுவரை இருந்து வந்த சொத்து தொடர்பான பிரச்சனைகள், ஆரோக்கியம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் உங்களை விட்டு அகலும். நல்ல முன்னேற்றத்தை அடையும் காலமாக இருக்கும்.
மகரம் - மகர ராசியினருக்கு 2015 முதலே ஏழரை ராசியினால் படாத பாடு பட்டிருப்பீர்கள். எல்லா வகையான பிரச்சனைகளும் நீங்கும். விடிவு காலம் பிறக்கப் போகிறது. இன்பங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஆடம்பர வாழ்க்கை, வேலை, லாபம், புதிய வாப்புகள், தொழில் எல்லாமே அமையும். 3 ஆம் இடத்திற்கு வரக்கூடிய சனி பகவான் உங்களுடைய முயற்சி மற்றும் சிந்தனையை அதிகரிப்பார். திறமைகள் கைகொடுக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications