Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப்பெயர்ச்சி: சனி பகவான் பிடியில் சிக்கும் 6 ராசிகள்.. கவனம்.. கவனம்..!

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2025 ஆம் ஆண்டில் நிகழவுள்ள முக்கிய கிரக பெயர்ச்சிகளில் சனிப் பெயர்ச்சி மிக மிக முதன்மையானது. மற்ற கிரகங்களை விட ராசியில் அதிக காலம் பயணிப்பது சனி பகவான் தான். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். இந்த சனிப்பெயர்ச்சியில் கவனமாக இருக்க வேண்டிய 6 ராசிகள் குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.

சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த தொகுப்பில் சனிப்பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ஆறு ராசிகள் குறித்து விவரிக்க போகிறோம்.

மேஷம் - சனிப்பெயர்ச்சியில் முதல் நிலையான விரயச்சனி தொடங்க உள்ளது. இதனால் மனதில் அவ்வப்போது சஞ்சலங்கள் வந்து செல்லும். உடல்நலம் மற்றும் மனநலம் ஆகிய இரண்டிலும் கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் மந்த நிலை உருவாகும். உத்யோகத்திலும் சின்ன சின்ன பிரச்னைகள் வந்து செல்லும்.

sani-peyarchi-6-zodiac-signs-should-be-careful-due-to-saturn-transit

எதிலும் கவனத்துடன், நிதானமாக முடிவு எடுக்க வேண்டும். வீண் விரயம் ஏற்படும். பணிச்சுமை அதிகரிக்கும். மனக்கவலைகள் இருந்து கொண்டே இருக்கும். வார்த்தைகளில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொழிலில் நிதிப் பிரச்னையால் சவாலான சூழ்நிலையை எதிர்கொள்வீர்கள்.

சிம்மம் - அஷ்டமத்து சனி தொடங்குகிறது. இதனால் புதிய புதிய பிரச்னைகள் உருவாகும். உங்கள் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். வாழ்க்கை துணையிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்யோகத்திலும் சிக்கல்கள் உருவாகும். பணியிடத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.

காரியங்களில் தடைகள் உருவாகும். புதிய தொழில் தொடங்குவதற்கு இது சரியான காலம் இல்லை. உத்யோகம் மற்றும் தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது. பணிச்சுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படும்.

கன்னி - உங்களுக்கு கண்டக சனி தொடங்குகிறது. எதிலும் நிதானம் அவசியம். குடும்பத்தில் ஏராளமான பிரச்னைகள் வந்து செல்லும். வண்டி, வாகனத்தில் அதிக கவனம் தேவை. உத்யோகத்தில் பணியிட மாற்றம் இருக்கும். கடன் மற்றும் முதலீடு சார்ந்த விஷயங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியத்திலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தனுசு - அர்த்தாஷ்டம சனி தொடங்குகிறது. சுக ஸ்தானத்தில் சனி நுழைவதால் மனதில் எதிர்மறையான சிந்தனைகள் மேலோங்கும். குடும்பத்தில் அவ்வப்போது பிரச்னைகள் தலை தூக்கும். வீண் விவாதங்களை தவிர்த்து பொறுமையாக செல்வதால் பிரச்னைகளை தவிர்க்கலாம். தவறான நபர்களிடம் இருந்து விலகி நிற்பது நல்லது. பணிச்சுமையால் உடல் சோர்வு அதிகரிக்கும்.

கும்பம் - ஜென்ம சனி விலகினாலும் பிரச்னைகள் ஓயப்போவதில்லை. உத்யோகம், தொழிலில் பெரிய லாபம் இருக்காது. சில நேரம் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். எதிலும் தெளிவாக திட்டமிட்டு செயல்பட வேண்டும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது.

மீனம் - ஜென்ம சனி தொடங்குகிறது. நிறைய சவால்கள், பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எதிலும் நிதானமாக முடிவு செய்ய வேண்டும். பொருளாதாரத்தில் பின்னடைவு இருக்கும். உழைப்புக்கு உரிய அங்கீகாரம் இருக்காது. காரியங்களில் தடைகள் ஏற்படும். வாழ்க்கை துணையை அனுசரித்து செல்வது நல்லது. பணிச்சுமை அதிகரிக்கும்.

பரிகாரம் - விநாயகர் மற்றும் ஆஞ்சிநேயர் கோயில்களில் வழிபாடு நடத்தலாம். ஒவ்வொரு வாரமும் மாற்றுத்திறனாளிகளுக்கு அன்னதானம் செய்வதால் நன்மை உண்டாகும். பிரச்னைகள் அதிகம் சூழும்போது ஓம் நமச்சிவாயா என்ற மந்திரத்தை உச்சரிப்பதால் மனதில் தெளிவு பிறக்கும். வாய்ப்பு இருந்தால் திருநள்ளாறு சென்று தரிசனம் செய்வது வருவது மிகவும் நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+