சனிப்பெயர்ச்சி: மேஷ ராசிக்கு ஏழரை சனி ஆரம்பம்.. பலன்கள், பரிகாரங்களின் முழு விவரம் இதோ
சனிப்பெயர்ச்சி: சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார். இந்த சனிப்பெயர்ச்சியில் மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது. இந்த சனிப்பெயர்ச்சியில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
மக்கள் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீன ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருக்கும் கிரகம் என்றால் அது சனி பகவான்தான்.

நீதிமான், தர்மக்காரகன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் கொடுப்பவர். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள்.
அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் மேஷ ராசிக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷத்திற்கு விரைய சனி. கழுத்து மற்றும் தலைப் பகுதிகளில் அதீத கவனமாக இருப்பது நல்லது. விரைய சனியாக இருந்தாலும் ஏழரை சனிக்குள் வருகிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எல்லோருக்காகவும் வேலை செய்வீர்கள். மற்றவர்களுக்காக கடின உழைப்பை கொடுப்பீர்கள். அனைத்துப் பிரச்சனைகளையும் தாங்குவீர்கள்.
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்லது. உடற்பயிற்சி, தியானம் செய்வதே சனிப்பெயர்ச்சியில் உங்களுக்கு மிகப்பெரிய பரிகாரமாக இருக்கும். சனிப்பெயர்ச்சி ஆரம்பித்த மூன்று மாதங்களுக்குள் திருவெங்காடு புதன் ஸ்தலத்துக்குச் சென்று வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். ஒரு கிலோ பசு நெய், திருநீறு, குங்குமத்தை கோயிலில் வைத்து வழிபட்டு அதை வீட்டிற்கு எடுத்து வந்து தினந்தோறும் பயன்படுத்துவது நல்லது. எல்லாவிதமான எதிர்ப்பு, சத்ரு, நோய் போன்றவை உங்களை விட்டு விலகிவிடும்.
சனிப்பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு லாபத்தை தரும். குரு 3 ஆம் இடத்துக்குப் போகிறார். தைரியத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சனைகளைச் சந்திப்பீர்கள். ஊருக்கெல்லாம் பிரச்சனைக்கான தீர்வு கொடுக்கும் உங்களுக்கு உங்களுடைய பிரச்சனைக்கான தீர்வு கிடைக்காமல் பாதிக்கப்படுவீர்கள். நிறைய பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும். 11 இல் ராகு வருவதால் பெரும் பணம் வரும். அதிக வண்டி, வாகனம் மாற்றங்கள், நிலம் வாங்குவது, வீடு வாங்குவது, திருமண காரியங்கள் கைகூடும் யோகம் உண்டாகும்.
புத்திர சந்தானம் ஏற்படும். குடும்பத்தில் அனுகூலம் ஏற்படும். பெற்றோருடன் இருந்து வந்த மனத் தாங்கல்கள் மாறும். அவர்களுடன் அந்நியோன்யமாக இருப்பீர்கள். பெரும் பணத்தை பார்ப்பதற்கான வாய்ப்புண்டு. அடிமைத் தொழில் இவ்வளவு காலமாக இருந்திருப்பீர்கள். இனி மாறும். தொழில், அறக்கட்டளை, கோயில் கட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவீர்கள்.
பிள்ளைகளுக்கான விஷயங்களை செய்து கொடுப்பீர்கள். அவர்களுக்கு அனுகூலத்தை ஏற்படுத்திக் கொடுத்து மகிழ்வீர்கள். அபிராமி அந்தாதியில் இருக்கும் பாடல்களை கேட்பது நன்மை பயக்கும். கேது 5 ஆம் இடத்தில் வருவதால் பூர்வ புண்ணிய தோஷம் ஏற்படாமல் தடுக்க 40, 59, 75 ஆவது பாடலை கேட்பது நல்லது. அனுமன், செவ்வாய்க்கான பாடல், கணபதி காயத்ரி, அனுமன் சாலிஷா கேட்பது மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கும்.
காலையில் எழுந்தவுடன் விளக்கேற்றுவது, ஆயில் புல்லிங் செய்வது, உடற்பயிற்சி செய்து உங்கள் நாளை ஆரம்பிப்பது உங்களுக்கு அதிர்ஷ்டங்களையும், நற்பலன்களையும் உண்டாக்கும்.












Click it and Unblock the Notifications