Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப்பெயர்ச்சி: ஜென்ம சனியில் இருந்து விடுதலை.. கும்ப ராசிக்கு இனி அதிர்ஷ்டம் கொட்டப் போகுது

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. கும்பத்தில் இருந்து மீனத்துக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார். இந்த சனிப்பெயர்ச்சியில் கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் என்ன விதமான பலன்களை கொடுக்கப் போகிறார். எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

எல்லோரும் எதிர்பார்க்கும் சனிப்பெயர்ச்சி வரும் மார்ச் 29 ஆம் தேதி நடைபெறப் போகிறது. கும்பம் வீட்டில் இருக்கும் சனி மீனம் வீட்டிற்கு மாறுகிறார். பொதுவாக குருவின் வீட்டில் இருக்கக்கூடிய சனி பகவான் 12 ராசிகளுக்கும் பெரிதளவில் கெடுபலன்களை தர மாட்டார். 3, 6, 11 ஆம் இடங்களில் இருக்கும் சனி பகவான் மிகப்பெரிய யோக பலன்களைச் செய்வார். சிலருக்கு மட்டுமே சாதகமற்ற நிலை இருக்கும்.

Sani peyarchi Sani peyarchi palangal Kumbam

கிரகங்களில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நீதிமான், தர்மக்காரகன் என்று அழைக்கப்படும் சனி பகவான் மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் கொடுப்பவர். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும்.

சனீஸ்வரன் தான் மிகப்பெரிய கோடீஸ்வர யோகத்தை தரக்கூடிய வல்லமை வாய்ந்த கிரகம். முக்கியமான கிரகங்களில் வலிமை வாய்ந்த கிரகமாக சனி உள்ளது. பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருக்கும் கிரகம் என்றால் அது சனி பகவான்தான். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும்.

2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீன ராசியில் இருக்கப் போகிறார்.

அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் கும்ப ராசிக்காரர்களுக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

கும்ப ராசிக்காரர்கள் கூண்டு கிளி போல இதுவரை சிக்கி சின்னாபின்னமாகி இருப்பீர்கள். இளைய பருவத்தினருக்கு வேலையில் கெட்ட பெயர், வேலையே இல்லை, வேலை பார்த்தால் சம்பளம் இல்லை, ஆணுக்கு பெண்ணால் சிக்கல், பெண்ணால் ஆணுக்கு அழுகை போன்ற பிரச்சனைகள் உருவாகியிருக்கும். ஜென்ம சனியில் படாத பாடு பட்டிருப்பீர்கள்.

ஜென்ம சனி உங்களைவிட்டு விலகப் போகிறது. உங்களுடைய வாழ்க்கை திரும்ப கிடைக்கப் போகிறது. பண வரவு, நல்ல தொழில், அவரவர் வயதுக்கேற்ப என்னென்ன வேண்டுமோ அவை அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும் சுபமான காலகட்டமாக இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு இருக்கும். கடுமையான காலகட்டம் என சொல்லக்கூடிய கட்டத்தை நீங்கள் கடந்து விட்டீர்கள்.

பணம் என்றால் என்ன என புரிந்திருப்பீர்கள். உறவு, நட்புகளைப் பற்றி நன்றாகப் புரிந்து கொள்ளும் சூழல் ஏற்பட்டிருக்கும். இனிமேல் உலகமே பணத்தில்தான் இயங்குகிறது என்பதை கற்றுக் கொண்டிருப்பீர்கள். இதற்காக நீங்கள் கொடுத்த விலை அதிகம் என்பதால் இனிமேல் அதில் இருந்து விடுபட்டு நன்றாக இருக்கும் தன்மை உங்களுக்கு வந்துவிட்டது.

நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தொழில் நன்றாக இருக்கும். அகலகால் வைத்திருப்பவர்கள் கூட கவலைப்படாதீர்கள். இன்னும் கொஞ்சம் கடின உழைப்பை போட்டால் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். திருமணம் நடக்கும், நடந்த திருமணத்தில் சீரான நிலைமை உண்டாகும். கடுமையான மன அழுத்தங்களில் இருந்து விடுபடுவீர்கள்.

இழந்த கெளரவத்தை மீட்டெடுப்பீர்கள், பணம், திறமையை தொலைத்த இடங்களில் இருந்து இனி மீட்பீர்கள். இனி எந்தவொரு பெரிய சோதனையும் உங்களுக்கு இருக்காது. பணம் சார்ந்த விஷயங்களில் நல்ல வளர்ச்சி, முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றியைப் பெறும் யோகம் உண்டாகும். தன்னம்பிக்கை, தைரியம் உங்களுக்கு அதிகரிக்கும்.

திருமணம் நடக்கும், தொழில் நிலைக்கும், கனவுகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும். நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் இனி யோகமான காலகட்டமாகவும், சமுதாயத்தில் மதிப்பு மரியாதையுடன் வாழக்கூடிய காலகட்டமாக இருக்கும். பெண்களுக்கு ஆண்களால் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். வயதிற்கேற்ற வகையில் பெண்களுக்கு எல்லா பிரச்சனைளில் இருந்தும் விடுதலை அடைவீர்கள். உங்கள் திறமையை பட்டை தீட்டும் காலமாக இருக்கும். வாழ்க்கையில் அனைத்து விதத்திலும் வெற்றி பெறும் யோகங்கள் உங்களுக்கு உண்டாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+