நவகிரகங்களையும் ஒரே கட்டத்தில் அடக்க நினைத்த ராவணன்.. சனியின் கால் முடமானது ஏன் தெரியுமா?
மதுரை: ராவணனின் மகன் மேகநாதன் பிறக்கும் நேரம் வந்த போது நவகிரகங்களையும் 11ஆம் வீட்டில் இருக்கும்படி கூறினார். அதன் மூலம் மேகநாதன் சாகாவரத்தை அடைய முடியும் என்று இராவணன் எண்ணினான். சனிபகவான் இங்கதான் விளையாடினார் 12ஆம் வீட்டில் ஒரு காலை மாற்றி வைத்தார், அந்த காலை வெட்டினார் ராவணன்.
சனிபகவான் யார்: சனிபகவான் ஒரு நீதிமான். நீதிபதியானவர். ஒருவன் செய்த குற்றங்களுக்குத் தக்கப்படி தண்டனை அளிக்கிறாரோ அதே மாதிரி சனிபகவானும் அவரவர் முற்பிறவியில் செய்த கர்மாக்களுக்குத் தக்கவாறு தண்டனை வழங்குகிறார். எனவே தான் சனி என்றாலே நாம் எல்லோரும் அச்சத்துடனே இருந்து வருகிறோம். சனி பகவானை நினைத்தாலே நம் நெஞ்சும் பதறுகிறது. பயமும் பீதியும் ஏற்படுகிறது. சனைஸ்வரன் என்று கூறப்படும் சனிபகவானுக்கு ஒரு கால் கிடையாது அதற்கு ஒரு புராண கதை உண்டு. அவரது கால் முடமானதற்கு ராவணன்தான் காரணம் என்று கூறுகின்றனர். எப்படி என்று பார்க்கலாம்.

ஆயுள்காரகன் சனி: நவகிரகங்களில் சனி பகவான் மனிதர்களுக்கு நீண்ட நாள் வாழும் ஆயுள் தரும் ஆயுள்காரகனாக இருக்கிறார். எனவே சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் சனீஸ்வரனின் அருள் பெற்று நீண்ட நாட்கள் வாழும் ஆயுளை வழங்குகிறார். மேலும் சுலபத்தில் நோய்கள் பிடிக்காத பலம் வாய்ந்த உடலையும், எந்த சூழ்நிலையிலும் குலையாத மனஉறுதியையும் கொடுக்கிறார். தொழில், வியாபாரங்களில் நிலையான வருமானத்தையும், தொழில் விருத்தியும் உண்டாகும். அரசு மற்றும் தனியார் துறைகளில் இருப்பவர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்க பெறுவார்கள். எதிரிகளால் வெல்ல முடியாத நிலையும் உண்டாகும்.
சனி கால் முடமான கதை: ஒன்பது கிரகங்களில் சந்திரன்தான் மிக வேகமாகச் சுற்றுகிறார். சனி மெதுவாகத்தான் சுற்றுகிறார். அதனால்தான் அவர் பெயர் மந்தன். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகாலம் தங்குகிறார் சனி பகவான். சனிக்கு ஒருகால் கிடையாது. அவர் நொண்டி ஆகவேதான் அவர் மெதுவாக வலம் வருகிறார். சனி நொண்டியானதற்கு ஒரு கதை உண்டு. இராவணன் தன்மகன் மேகநாதன் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற வேண்டும் என விருப்பினான். எனவேதான் நவகிரகங்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான் ராவணன். நவ கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அடைத்து வைக்கிறார் ராவணன். ஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்கும். அதில் எல்லா கிரகங்களும் இருக்குமேயாகில் அவருக்குத் தோல்வியே கிடையாது. இதை மனதில் கொண்டு இராவணன் மகனின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டான்.
சனியின் விளையாட்டு: மரணமே நேராத அளவிற்கு ஒரு அசுரன் பிறப்பதா என்று நினைத்த தேவர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. நாரதர் மூலம் சனியின் காதில் ஓதினர். உடனே சனிபகவான் தனது விளையாட்டை விளையாடினார். 11ஆம் வீட்டில் இருந்து ஒரு காலை 12ஆம் வீட்டில் வைத்தார். மேகநாதன் பிறக்கும் சமயத்தில் சனியின் இடது கால் 12ம் வீட்டில் இருந்தது. ஒருவர் ஜாதகத்தில் பனிரெண்டாம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகும். இந்தக் கட்டத்தில் இடது காலை சனி பகவான் வைத்து விட்டதால், மேகநாதன் ஜாதகத்தில் சனி பகவான் பனிரெண்டாம் இடத்தில் காணப்பட்டார், மற்ற கிரகங்கள் எல்லம் பதினொன்றாம் இடத்தில் இருந்தன.
முடமான சனிபகவான்: இராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தான், சனி 12ம் இடத்தில் காணப்பட்டார். தன் எண்ணம் நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டான். உடனே 12ம் இடத்தில் காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டான். அப்படி ஒரு கால் வெட்டப்பட்டதாலேயே சனிபகவான் முடமாக இருக்கிறார் என்கின்றன புராணங்கள். நவக்கிரங்களிலேயே சனி பகவான் வித்தியாசமானவர். மனிதனின் பிறப்பு நிலையில் அவரவர் முற்பிறவியில் செய்த பாவ புண்ணிய கணக்கின் அடிப்படையிலேயே அவர் இந்த ஜென்மத்தில் பலன்களை அளிக்கவல்லவராவர். சனிபகவான் அவரவர் கர்மாவிற்கு ஏற்ப ஒவ்வொரு மனிதனையும் அழவைத்து அவனை கஷ்டப்படுத்தி நீதி வழங்குகிறார்.

சனிக்கிழமைகளில் விரதம்: சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் சனிக்கிழமையில் வருகிற பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர தினங்கள் ஏதேனும் ஒன்றில் சனி பகவான் விரதம் மேற்கொள்ள தொடங்கி 21 சனிக்கிழமைகள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும் உங்கள் வீட்டின் பூஜையறையை கழுவி சுத்தம் செய்து, பீடம் வைத்து, அதன் முன்பாக அரிசி மாவில் தாமரை பூ கோலம் போட வேண்டும். பின்பு அக்கோலத்தின் நடுவில் ஒரு கலசத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும்.
ஊனமுற்றவர்களுக்கு தானம் : சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் காலை முதல் மாலை வரை ஏதும் உண்ணாமல், அருந்தாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். காலையில் சிறிது உணவை காகங்கள் உண்ண வைக்க வைக்க வேண்டும். காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் சனிபகவான் அம்சம் நிறைந்த வெங்கடாசலபதிக்கு பூஜைகள் செய்ய வேண்டும். மாலையில் பூஜை செய்து முடித்து, நைவேத்திய பிரசாதத்தை சாப்பிட்டு விரதம் முடித்ததும் வசதி குறைந்த, ஊனமுற்ற நபர்களுக்கு உங்களால் இயன்ற தானங்களை அளிப்பது மிகுந்த நன்மையை தரும். நீல நிற ஆடைகள், எள், நல்லெண்ணெய் போன்றவற்றை அளிப்பது உங்களின் சனி கிரக தோஷங்கள் நீங்கி சனி பகவானின் ஆசிகளை உங்களுக்கு பெற்றுத்தரும்.
மங்கள சனிபகவான்: ஆயுட் காரகன் என்று சொல்லப்படும், சனீஸ்வரபகவான் தனது இரண்டு மனைவிகளான மந்தா தேவி, ஜேஸ்டா தேவி இருவரோடும் தனது புதல்வர்களான காலத்தை நிர்ணயிக்கும் குளிகன், ஆயுளை நிர்ணயிக்கும் மாந்தி ஆகியோருடன் குடும்ப சமேதராய் அருள்பாலிக்கும் ஒரே இடம் திருநறையூர். இந்தியா முழுவதுமுள்ள கோயில்களில் இல்லாத சிறப்பாக தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் உள்ள திருநறையூர் நாச்சியார் கோயிலில் மங்களச் சனியாக குடும்பத்துடன் அருள்பாலிக்கிறார். அங்கு குடும்பத்தோடு சென்று வழிபட்டால் சனி தோஷம் நீங்கும்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications