சனி பெயர்ச்சி பலன் 2023: தை பிறந்தால் 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையை புரட்டிப்போடப்போகிறார் சனி
சென்னை: சனி பகவான் தை மாதத்திற்குப் பிறகு சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் சில ராசிக்காரர்கள் நிகழப்போகும் சனி பெயர்ச்சியால் பலரது வாழ்க்கையில் கஷ்டங்களும் கவலைகளும் மறையப்போகிறது. சிலரது வாழ்க்கையை புரட்டிப்போடப்போகிறார் சனி பகவான். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் பிறந்தவர்களுக்கு சனியால் யாருக்கெல்லாம் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

சனி பகவான் ஜனவரி 17ஆம் தேதி தை மாதம் 3ஆம் தேதி செவ்வாய்கிழமை மகர ராசியில் இருந்து தனது சொந்த வீடான கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். கோவில்களில் வாக்கிய பஞ்சாங்க முறை கடைபிடிக்கப்படுவதால் சனி பெயர்ச்சி மார்ச் 29ஆம் தேதி அதாவது பங்குனி மாதம் 15ஆம் தேதி நிகழ உள்ளது. சனி பெயர்ச்சி வந்தாலே பலருக்கும் பயம் வந்து விடும் நேர்மையாக இருப்பவர்கள் சனி பகவானைப் பார்த்து பயப்பட தேவையில்லை.
சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். ஏழரை சனி காலத்தில் சனிபகவான் விரையசனி, ஜென்மசனி, பாதசனி என படிப்பினைகள் கொடுப்பார். அர்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, என கஷ்டப்பட்டாலும் கடைசியில் நல்ல விசயங்களை கற்றுக்கொடுப்பார். சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களின் மீது விழுகிறது. கும்ப ராசியில் இருந்து சனி பகவான் மூன்றாம் பார்வையாக மேஷம் ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்ம ராசியையும், 10ஆம் பார்வையாக விருச்சிக ராசியையும் பார்வையிடுகிறார். நிகழ இருக்கும் சனிப்பெயர்ச்சியால் கண்டச்சனி, அஷ்டம சனியால் அவதிப்படபோகும் ராசிகள் யார் யார் என்று பார்க்கலாம்.
மேஷம் லாப சனி

சனி பகவான் மேஷ ராசிக்கு 11ஆம் வீட்டில் இடப்பெயர்ச்சி அடைகிறார். செய்யும் தொழிலில் வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்க ஆரம்பிக்கும். கடந்த காலங்களில் கையிருப்பு இன்றி கஷ்டப்பட்ட உங்களுக்கு இனி அள்ளித்தரப்போகிறார் சனி பகவான். ராகு ராசியில் பயணம் செய்கிறார். கூடவே லாப சனியின் பார்வையும் கிடைக்கும். திருமண சுப காரியங்கள் கைகூடும். வீட்டில் சுப செலவுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இரும்பு, எண்ணெய் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம். புதிய முயற்சிகளுக்கு லாபம் கிடைக்கும். ஏப்ரல் மாதம் புத்திர பாக்கியம் கிடைக்கும். புத்திரர்களால் பெருமை ஏற்படும். தடைகளைத் தாண்டி முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செருப்பு தானம் தரலாம். நீண்ட நாட்கள் போக வேண்டிய ஆலயங்களுக்கு தரிசனம் செய்து வரலாம்.
ரிஷபம் தொழில் சனி

எதையும் திறமையோடும் நேர்மையோடும் செய்யுங்கள். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் உண்டாகும். வாய்ப்புகள் தேடி வரும் அதை அனுபவிக்கத் தயாராகுங்கள். வெளிநாடு செல்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பழைய கடன்கள் அடைபடும். வங்கிகளில் புதிய லோன்கள் கிடைக்கும். ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் கிடைக்கப் போகிறது. சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும். பதவியில் புது உற்சாகம் கிடைக்கும்.
மிதுனம் பாக்ய சனி

அஷ்டமத்து சனி முடிவுக்கு வரப்போவதால் மிதுன ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் தீரப்போகிறது. பொருளாதார நெருக்கடிகள் நீங்கப்போகிறது. நோய்களால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு விடிவுகாலம் வரப்போகிறது. உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். உற்சாகமும் சுறுசுறுப்பும் அதிகரிக்கும். எத்தனையோ பிரச்சினைகளையும் அவமானங்களையும் சந்தித்த உங்களுக்கு இனி எல்லாம் நல்லதாகவே நடக்கப்போகிறது. பாக்ய சனியால் யோகங்கள் அதிகம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். வேலையில் சம்பள உயர்வு புரமோசன் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். நகை, பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். நிறைய தான தர்மங்களை செய்யுங்கள். ஏனெனில் இது தர்ம சனி காலம்.
கடகம் அஷ்டம சனி
சனிபகவான் இதுநாள் வரை கண்டச்சனியாக இருந்து கஷ்டங்களைக் கொடுத்தார் இனி எட்டாம் வீட்டில் அஷ்டம சனியாக அமரப்போகிறார். இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும். எட்டாம் வீட்டு அதிபதி சனி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். திடீர் பணவரவு வந்து திக்குமுக்காட வைக்கும். இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும். எட்டாம் வீட்டு அதிபதி சனி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். திடீர் பணவரவு வந்து திக்குமுக்காட வைக்கும். பணமுதலீடுகளை செய்ய வேண்டாம். வேலைகளை விடும் முன்பு ஒருமுறை இருமுறை யோசிக்கவும். புதிய தொழில் எதுவும் தொடங்கவேண்டாம். பேராசை படவேண்டாம். பங்குச்சந்தை முதலீடு தேவையே இல்லை. இருக்கிறதை வைத்துக்கொண்டு சிறப்புடன் வாழுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சனிக்கிழமைகளில் சனி ஹோரையில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபடுங்கள் பாதிப்புகள் குறைந்து நன்மைகள் அதிகம் நடைபெறும்.
சிம்மம் கண்டச்சனி

சனிபகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானத்தில் கண்டச்சனியாக பயணம் செய்யப்போகிறார்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு அற்புதமான பலன்கள் கிடைக்கப்போகிறது. இந்த சனி பெயர்ச்சியால் இந்த நிர்வாகத்தில் தலைமை பதவியை தருவார்.வெளிநாடு செல்பவர்களுக்கு யோகம் கிடைக்கும். வேலையில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உயர்வு கிடைக்கும். சச யோகமும் கை கொடுக்கப்போகிறது. பண வரவும் சேமிப்பும் அதிகரிக்கும். சனியின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் பாதிப்பு குறையும். ஏழுக்கு உடையவன் ஏழில் இருப்பதால் திருமணம் தடைகளை தாண்டி நடைபெறும். ஏப்ரல் 2025ஆம் ஆண்டு வரை ஏழாம் வீட்டில் பயணம் செய்வதால் மனைவி குடும்பத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் தேவையில்லாத பேச்சுக்களை பேச வேண்டாம் விட்டுக்கொடுத்து போக வேண்டும். சனிக்கிழமையன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். நல்லெண்ணெயில் செய்த உணவுகள், தயிர்சாதம் அன்னதானம் கொடுங்கள். சனிபகவானின் குருவான கால பைரவரை வணங்குங்கள் நன்மையே நடைபெறும்.
கன்னி ருண ரோக சத்ரு சனி
கன்னி ராசிக்காரர்களே.. சனி பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து சனி பகவான் முழு ராஜயோகத்தையும் தரப்போகிறார். ஆறாம் வீட்டு அதிபதி சனி பகவான் ஆறில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். சனி பகவான் தனது சொந்த வீட்டுக்கு வருவதால் நோய்கள் தீரும். கடன்கள் கட்டுப்படும். அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். புதிய தொழில்களை ஆரம்பிக்க லாபங்கள் கொட்டும். எதிரிகள் பிரச்சினை அடியோடு ஒழியப்போகிறது. உங்களின் வாழ்க்கையில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார் சனி பகவான். இனி இரண்டரை ஆண்டு காலம் உங்களுக்கு ராஜயோக காலம். சுகங்கள் தேடி வரும். தை மாதத்திற்குப் பிறகு கன்னி ராசிக்காரர்களின் செல்வமும் செல்வாக்கும் கூடும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications