சனி பெயர்ச்சி பலன் 2023..வேலையில் புரமோசன் யாருக்கு? சிக்கல் யாருக்கு..சனி ஆடும் ஆட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனி பகவானின் ஆட்சி வீடு கும்ப ராசி. மகர ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் சனிபகவான் கும்ப ராசிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி ஜனவரி 17ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த சனி பெயர்ச்சியால் மேஷம் மற்றும் ரிஷப ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது, வேலை தொழில் எப்படி இருக்கும், பொருளாதார நிலைமை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

சனிபகவான் 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார். ஜனவரி 30ஆம் தேதி சனி பகவானுக்கு அருகில் சூரியன் வரும் போது அஸ்தமனம் அடைகிறார். மார்ச் மாதம் 6ஆம் தேதி சனி பகவான் உதயமாகிறார். 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதி வக்ர மடையும் சனிபகவான் நவம்பர் 4ஆம் தேதி மீண்டும் நேர்கதியில் பயணம் செய்வார்.

கும்ப ராசியில் இடப்பெயர்ச்சியாகும் சனிபகவான் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரப்போகிறார். பொதுவாகவே சனி பகவான் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி காலங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த சனி பெயர்ச்சியால், மேஷம், ரிஷப ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது தொழிலில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

சனி பகவான் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில், ஜீவன கர்ம ஸ்தான அதிபதி மற்றும் லாப ஸ்தான அதிபதி. ஜனவரி 17ஆம் தேதி வரைக்கும் பத்தாம் வீட்டில் அமர்ந்து சனிபகவான் உங்கள் ராசிக்கு 12, 4,7ஆம் வீடுகளை சனிபகவான் பார்வையிடுகிறார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உணவு விசயத்தில் கவனம் தேவை. 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி முதல் சனி பகவான் லாப ஸ்தானமான கும்ப ராசிக்கு வருகிறார். சனி பகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழப்போகிறது. எந்த பிரச்சினைகளையும் எளிதில் சமாளிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் ஸ்மார்ட் ஆக வேலை செய்வீர்கள். உயரதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

பண வரவு

பண வரவு

திடீர் வருமானம் அதிகரிக்கும் கூடவே செலவுகளும் அதிகரிக்கும். ஜனவரி இறுதியில் அஸ்தமனமாகும் சனிபகவன் மார்ச் 6ஆம் தேதி உதயமாகிறார். உங்களின் தொழில் வளர்ச்சி மளமளவென அதிகரிக்கும். பண வருமானமும் பொருளாதார நிலையும் திருப்திகரமாக இருக்கும். மார்ச் மாதத்தில் சனி பகவான் உதயம் நிறைய நன்மைகளை செய்யப்போகிறது. சனிபகவானின் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டின் மீதும் 8 ஆம் வீடான அஸ்டம ஸ்தானத்தின் மீதும் விழுகிறது. பூர்வீக சொத்து பிரச்சினைகள் நீங்கும். நோய்கள் நீங்கும் கண்டங்கள் விலகும்.

பணம் சேமிப்பு கூடும்

பணம் சேமிப்பு கூடும்

2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதி முதல் சனிபகவான் வக்ர நிலையில் பயணம் செய்வார். அலுவலகத்தில் உயரதிகாரிகளிடம் பேசும் போது கவனமும் நிதானமும் தேவை. எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேச வேண்டாம். நவம்பர் 4ஆம் தேதி வரைக்கும் சனிபகவான் வக்ர நிலையில்தான் பயணம் செய்வார். பண விவகாரங்களில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் நிதானம் அவசியம். நவம்பர் 4ஆம் தேதி சனிபகவான் மீண்டும் நேர்கதியில் பயணம் செய்யும் காலத்தில் பண வருமானம் அபரிமிதமாக இருக்கும். வங்கி சேமிப்பும் உயரும்.

ராகு கேது பெயர்ச்சியும் சாதகமாக இருப்பதால் 2023ஆம் ஆண்டு பொருளாதார உயர்வும் மன மகிழ்ச்சியும் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. சனிக்கிழமையும் செவ்வாய்கிழமையும் அனுமனை வழிபட சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும்.

ரிஷபம்

ரிஷபம்

சனி பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பது மற்றும் பத்தாம் வீட்டு அதிபதி. கர்ம ஸ்தான அதிபதி கர்ம ஸ்தானம், தொழில் ஜீவன ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். உங்களுக்கு சச மகா யோகம் கைகூடி வரப்போகிறது. அதிர்ஷ்டம் வேலை செய்யப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் சில நேரங்களில் திருப்தியற்ற நிலை உண்டாகும்.

இலக்குகளை அடைய நிறைய போராட வேண்டும்.

வேலையில் கவனம்

வேலையில் கவனம்

தொழில் ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சனிபகவானால் சில சங்கடங்களை சந்திக்க நேர்ந்தாலும் பொறுமை அவசியம். நிதானமாக செயல்பாடுகளே உங்களை உற்சாகமாக செயல்பட வைக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் செயல்பாடுகள் பொறுமையை சோதிக்க வைக்கும். வேலையில் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகும். வேலையில் ஏற்படும் தொடர் பிரச்சினைகள் ஒருவித மன அழுத்தத்தை உண்டாக்கும்.

வேலையில் பிரச்சினை

வேலையில் பிரச்சினை

பிப்ரவரி மாதம் சூரியனும் சனிபகவானும் பத்தாம் வீடான கும்ப ராசியில் இணையும் போது அலுவலகத்தில் பிரச்சினைகளும் உயர் அதிகரிகளுடனான மோதல் போக்கும் அதிகரிக்கும். அப்பாவிற்கு உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. அதே நேரத்தில் மார்ச் மாதம் முதல் வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

வேலையில் சிரமம்

வேலையில் சிரமம்

ஜூன் மாதம் 17ஆம் தேதி முதல் சனிபகவான் வக்ர நிலையில் பயணம் செய்யும் காலத்தில் எந்த வேலையாக இருந்தாலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்வதை தவிர்க்க வேண்டும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து நிதானமாக செய்வது நல்லது. வாகன பயணங்களிலும் நிதானமும் கவனமும் தேவை. பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. வேலையில் அழுத்தம் அதிகரிக்கும். நவம்பர் 4ஆம் தேதி முதல் சனிபகவான் நேர்கதியில் பயணம் செய்யும் காலத்தில் உங்களின் சிரமங்கள் முடிவுக்கு வரும். உணவுக்கட்டுப்பாடுகள் அவசியம். அதிகம் வறுத்த, பொரித்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+