அர்த்தாஷ்டம சனி.. அஷ்டம சனி.. மறந்தும் இந்த தவறை செய்யாதீர்கள்.. பாதிப்புக்கு பரிகாரம்
சென்னை: கும்ப ராசியில் பயணம் செய்யும் சனி பகவானால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி.. கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி காலமாக உள்ளது. இந்த சனிபகவானின் பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும். அதே நேரத்தில் சனியால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு.

சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்கிறார். கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவானால் கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனி ஆட்டிப்படைத்துக்கொண்டு உள்ளது. அஷ்டமத்து சனி காலம் என்பதால் ஆட்டி வைக்குமே என்று அச்சப்பட வேண்டாம். எந்த விசயத்திலும் கவனம் தேவை. அகலக்கால் வைக்க வேண்டாம். பண இழப்பு, பொருள் இழப்பு ஏற்படும். புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டாம். வேலையில் சில பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை.
சனி பகவான் எட்டாம் வீட்டில் பயணம் செய்து விபரீத ராஜ யோகத்தை தருவார். எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமரும் சனி பகவான் நிறைய வேலை பளுவை தரப்போகிறார். கவனமாக கையாளுங்கள் யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். அதுவே உங்களுக்கு சிக்கலாகி விடும்.
இந்த கால கட்டத்தில் வேலை வேலை என்று ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருப்பீர்கள். உயரதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். திருமண வாழ்க்கையில் இருப்பவர்கள் விட்டுக்கொடுத்துசெல்வது நல்லது. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் வந்து போகும். எந்த காரியம் செய்வதற்கு முன்பாகவும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்து மாட்டிக்கொள்ள வேண்டாம். கால்கள், எலும்புகளில் பிரச்சினை வரக்கூடும் கவனம் தேவை. உடற்பயிற்சியும் சூரிய நமஸ்காரமும் செய்வது அவசியம்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனியாக உள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. புதிய விஷயங்களைக் கற்க சந்தர்ப்பம் அமையும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். புதிய ஆடை, ஆபரணங்கள், வண்டி வாகனங்கள் வந்து சேரும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.
வேலைக்கு ஏற்ற ஊதிய உயர்வும் கிடைக்கும். கையில் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பும், லாபமும் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, தகவல் தொடர்பு துறைகளில் லாபம் அதிகரிக்கும். தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள். குழந்தைகளின் வருங்காலம் குறித்து ஒரு வித பயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களைக் ஆலோசிக்காமல் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம். பாதிப்புகள் குறைய அனுமனை வணங்க நன்மைகள் நடைபெறும்.
சிலருக்கு காகம் விரட்டி விரட்டி கொத்தும். சிலருக்கோ குப்பை மேலே வந்து விழும். இது எல்லாமே சனி பகவான் செய்யும் லீலைகள்தான். தினமும் உலர் திராட்சையை ஒரு கைப்பிடி அளவுக்கு எடுத்து காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும். உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும் , அதையே மாற்றக் கூடிய சக்தி இதற்கு உண்டு என்று சித்தர் கூறியுள்ளார். அதே போல வன்னிமரத்தடி விநாயகருக்கு நாம் பச்சரிசி குருணை, பச்சரிசி மாவு கோலம் போடலாம். எறும்புகளுக்கு பச்சரிசியை உணவாக கொடுக்க சனியால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.
காக்கை சனி பகவானின் வாகனம். காக்கைக்கு உணவு அளிப்பது சனி பகவானுக்கு மகிழ்ச்சி தருமாம். சனிக்கிழமையில் சாதத்தில் தயிர் எள் சேர்த்து காகத்திற்கு உணவு கொடுக்கலாம். இதனால் நம்முடைய முன்னோர்களும் மகிழ்ச்சி அடைவார்களாம். ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனியால் பாதிப்புக்கு ஆளானவர்கள் இந்த பரிகாரங்களை மறக்காமல் செய்தால் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.












Click it and Unblock the Notifications