ராஜ யோகாதிபதி அமைப்பு.. சனிப்பெயர்ச்சியில் இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்
சனிப்பெயர்ச்சி: கிரகங்களில் சனி பகவான் மிகவும் பலம் படைத்தவர். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு அவர் உச்ச பலத்தை கொண்டவர். அதனால் இந்தாண்டு நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சனிப்பெயர்ச்சி மகரம், ரிஷபம், துலாம் ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறது.
29.03.2025 சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். இந்த பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சனிப்பெயர்ச்சி சில ராசிகளுக்கு பிரச்னைகளை தரும். சில ராசிகளுக்கு பொருளாதார அதிர்ஷ்டம் மற்றும் நிம்மதியை தரும். பணவரவு இல்லாமல் இருந்த ராசிகள் கோடீஸ்வர யோகம் பெற உள்ளன. மனச்சங்கடத்தில் இருந்த ராசிகள் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் பெற உள்ளன.

மகரம் ராசிக்கு சனி பகவான் மூன்றாம் இடத்துக்கு வரவுள்ளார். மூன்றாம் இடம் என்பது முயற்சி ஸ்தானம். இதற்கு முன்பு சனி பகவான் உங்களுக்கு இரண்டாம் இடத்தில் இருந்து கொண்டு உத்யோகம் மற்றும் தொழிலில் தொடர்ந்து பின்னடைவுகளை ஏற்படுத்தியிருக்கும். சனிப்பெயர்ச்சிக்கு பிறகு உங்களுக்கு உத்யோகம் மற்றும் தொழிலில் நிறைய புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
வேலை தேடிக் கொண்டிருப்போருக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாள் வசூலாகாத பணம், கடன் உங்களைத் தேடி வரும். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். பெயர், புகழ் அதிகரிக்கும். மூன்றாம் இடம் என்பது குரு பகவான் வீடு.
தனகாரகனின் வீட்டில் உங்கள் ராசியாதிபதியான சனி அமர்கிறார். இது உங்களை ராஜயோகத்துக்கு கொண்டு செல்லும். தொழில் மற்றும் உத்யோகத்தில் உச்சம் தொடுவீர்கள். தொழிலில் நீண்ட காலமாக திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். தொழில் விருத்தியாகும். உத்யோகம் குடும்பம் இரண்டிலும் அதிர்ஷ்டம் கொட்டும்.
ரிஷபம் ராசிக்கு சனி ஒன்பதாம் வீட்டுக்கு அதிபதி. பொதுவாக 2,9,11 இடங்களை மகா தன யோகம் என்பார்கள். சனி பகவான் தற்போது உங்களுக்கு 11 ஆம் இடத்துக்கு செல்வது ராஜ யோகாதிபதி அமைப்பு. அதுவும் அவர் குரு வீட்டில் இருப்பதால் அற்புதமான ராஜ யோக பலன்களை தருவார்.
பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். பரம்பரை சொத்துகளில் இருந்து தடைகள் நீங்கி அதில் நல்ல ஆதாயம் கிடைக்கும். நீண்ட காலமாக இருந்த பழைய பாக்கி வசூலாகும். அரசு மற்றும் வழக்கு சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு இருக்கும்.
துலாம் ராசிக்கு இந்தாண்டு நடைபெறவுள்ள அனைத்து கிரகங்களின் பெயர்ச்சிகளும் நன்றாக உள்ளன. சனி நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களுக்குரியவர். அவர் தற்போது குருவின் ஆறாம் வீட்டில் அமர்கிறார். நீண்ட காலமாக இருந்த கடன் பிரச்னை சரியாகும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கி உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
அடுத்த இரண்டரை வருடங்களுக்கு பொருளாதாரத்தில் ஏற்றம் இருந்து கொண்டே இருக்கும். வேலை இல்லாதோருக்கு வேலை கிடைக்கும். எட்டாம் இடத்தில் குரு, ஐந்தாம் இடத்தில் சனி இருப்பதால் தொழில் பின்னடைவு ஏற்பட்டிருக்கும். இனி தொழிலில் பெரியளவுக்கு லாபம் கிடைக்கும்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications