சனிப்பெயர்ச்சி: விருச்சிக ராசிக்கு கைக்கொடுக்கும் முக்கிய பலன்.. அதிர்ஷ்டம் நிச்சயம்

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி பலன்கள்: வரும் மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. 2025 ஆம் ஆண்டில் நிகழப் போகும் முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளில் சனிப் பெயர்ச்சி மிக மிக முக்கியமானதாகும். ஒரு ராசியில் அதிக காலம் பயணம் செய்யும் கிரகம் சனி பகவான். இந்த சனிப்பெயர்ச்சியில் விருச்சிகம் ராசியினருக்கு என்ன நடக்கும், என்ன விதமான பலன்கள் கிடைக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் காணலாம்.

நீதியை நிலைநாட்டக் கூடியவர் சனி பகவான். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பாரபட்சமின்றி சுப பலன்களையும், கெடு பலன்களையும் கொடுக்கக் கூடிய நீதிமான். சனி என்றாலே பொதுவாக எல்லோருக்கு ஓர் அச்சம் ஏற்படும். கெடு பலன்களை மட்டும் கொடுக்க கூடியவர் அல்ல சனி பகவான். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களை அள்ளித் தரக் கூடியவர்.

Sani peyarchi Viruchigam

2025 ஆம் ஆண்டில் சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். விருச்சிகம் ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், சனியினால் ஏற்பட போகும் மாற்றம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விருச்சிகம்: விருச்சிகம் ராசிக்கு உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்துக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகவுள்ளார். அர்த்தாஷ்டம சனி விலகுகிறது. இதன் மூலம் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உற்பத்தி சார்ந்த தொழிற்சாலை நடத்துவோருக்கு இது சிறப்பான காலம். பூர்விக சொத்தில் உங்களுக்கான பாகம் வந்து சேரும்.

சகோதரருடன் இருந்த பகை நீங்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டபடுவோருக்கு இந்த காலத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் தடை விலகி இந்த காலத்தில் திருமணம் நடைபெறும். காதல் உறவு திருமணமாக மாறும். கடன் சுமை குறையும். முன்னேற்றத்துக்கான பாதையை வகுத்து கொடுக்கும்.

காரிய தடைகள் விலகும். தடைபட்ட பலன்கள் ஒவ்வொன்றாக வந்து சேரும். உத்யோகம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வாய்ப்புகள் அடுத்தடுத்து உங்கள் வீட்டு கதவை தட்டும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உங்களின் உழைப்பு மற்றும் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். வருவாய் அதிகரிக்கும். சேமிப்பில் ஆதாயம் உண்டு. வீடு, பணி சார்ந்த அமைப்புகளில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

நிலம், வீடு, வண்டி, வாகனம் உள்ளிட்ட சொத்துகள் சேரும். நீண்ட காலமாக திட்டமிட்ட புனரமைப்புப் பணிகள் இந்த காலத்தில் செய்வீர்கள். உங்களின் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். வெளியூர், வெளிநாடு பயணம் தொடர்பான பயண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆன்மிகம் சார்ந்த பயணங்களை மேற்கொள்வீர்கள்.

உங்கள் பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். நிறைய ஏமாற்றங்கள் மற்றும் நம்பிக்கை துரோகத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு மூலம் நஷ்டம் ஏற்படும். ஷேர் மார்க்கெட்டிங் மற்றும் டிரேடிங் ஆகியவற்றில் பெரிய நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே அதில் தலையிடாமல் இருப்பது நல்லது. பணியிடத்தில் நிதானம் அவசியம்.

ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஜீரணம், அல்சர் உள்ளிட்ட வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் இருக்கும். குடும்பத்திலும் மனக்கசப்பு ஏற்படும். எனவே எந்த சூழ்நிலையிலும் பொறுமையை கடைபிடிப்பது அவசியம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+