Sani Peyarchi: மகர ராசிக்கு சனிப்பெயர்ச்சியில் வரும் திடீர் அதிர்ஷ்டம்.. தடைகள் நீங்கும் காலம்
சனிப்பெயர்ச்சி: வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி ஜோதிடத்தில் மிகவும் பிரபலம். இந்த வருடத்தில் நடைபெறும் முக்கியமான பெயர்ச்சியாகவும் இது உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும பலன்கள, பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மகரம் [Magaram Sani peyarchi palan]
மகர ராசியினருக்கு ஏழரை சனியில் இருந்து பரிபூரண நிவர்த்தி அடைந்துள்ளீர்கள். 2 ஆம் இடத்தில் இருந்த சனி பகவான் 3 ஆம் இடத்துக்குச் சென்றுள்ளார். உங்கள் ராசிநாதனே சனி பகவான் தான். அற்புதமான காலகட்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக் குமுறல்கள், ஏழரை வருடமாக இருந்து வந்த வருத்தம், மனக் கசப்பு நீங்கும்.

திடீர் அதிர்ஷ்டம்
வண்டி வாகனத்தில் மிகுந்த கவனம் தேவை. வாக்கு ஸ்தானத்தில் ராகு இருப்பதால் குடும்பத்தில் அந்நியர் தலையீடு, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
தொழில்
நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்து வித நல்ல மாற்றங்களும் உண்டாகும். தனிப்பட்ட தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். தாய் தந்தையரை சந்திக்காமல் இருந்தவர்கள் மீண்டும் சந்திக்கும் யோகம் உண்டாகும். தாய், தந்தைக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த கஷ்டத்திற்கு நல்ல மருத்துவர்கள், மருந்துகள் கிடைக்கும் யோகம் உண்டாகும்.
மனபாரம் தீரும்
நல்ல வழிகாட்டி, நல்ல குரு கிடைப்பார்கள். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவுமுறையில் இருக்கும் மனத் தாங்கல்கள் தீரும். உங்கள் மீது அக்கறை கொண்டிருந்தவர்களுக்கும் உங்களுக்கும் இருந்து வந்த மன தாங்கல்கள் எல்லாம் தீரும். அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களை வருத்தப்படச் செய்தவர்கள் எல்லாம் உங்களை விட்டு விலகிச் செல்லும் யோகம் உண்டாகும்.
முன்னேற்றம்
காரியசித்தி மாலை தினமும் சொல்வது, கோளார் பதிகத்தை தினமும் கேட்பது விசேஷமான பலன்களை ஏற்படுத்தித் தரும். அற்புதமும், லாபமும் ஏற்படும் நல்ல காலகட்டமாக இருக்கும். அதிக பலத்தையும், சந்தோஷத்தையும் பெறக்கூடிய அற்புதமான காலகட்டம். பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். தொட்டது துலங்கும். லாபங்கள் கிடைக்கும் காலகட்டம்.
பிரச்சனைகள் தீரும்
கணவரால், அப்பா, அம்மாவால், நண்பர்களால் தொந்தரவு, வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள், நம்பிக்கை மோசடிகள், உங்கள் மீது அன்பு கொண்டிருந்தவர்களால் இருந்து வந்த பாதிப்புகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். அவர்கள் சொன்ன அவச் சொல்கள் எல்லாம் மாறிவிடும். பிள்ளையார்பட்டிக்கு சென்று வருவது, அபிஷேகம் செய்வது ஏற்றத்தைத் தரும்.
தடைகள் நீங்கும்
மாதத்தில் ஒரு சனிக்கிழமை விநாயகரையும், அனுமனையும் வழிபாடு செய்வது சகலவிதத்திலும் ஏற்றத்தை ஏற்படுத்தும். வாரத்தில் ஒருநாள் நீங்கள் பிறந்த கிழமையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விளக்கு போடும் நபர்களுக்கு தடைகள் அனைத்தும் நிவர்த்தியாகும் நல்ல காலகட்டம். பெரிய பதவி, உயர்வு, கெளரவத்தைப் பெறக்கூடிய அற்புதமான காலகட்டம்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications