சனிப்பெயர்ச்சி: ரிஷபம் ராசிக்கு ஜாக்பாட்.. புதிய அறிமுகத்தால் தொழிலில் வெற்றி.. திடீர் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி பலன்கள்: வரும் மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. 2025 ஆம் ஆண்டில் நிகழப் போகும் முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளில் சனிப் பெயர்ச்சி மிக மிக முக்கியமானதாகும். ஒரு ராசியில் அதிக காலம் பயணம் செய்யும் கிரகம் சனி பகவான். இந்த சனிப்பெயர்ச்சியில் ரிஷப ராசியினருக்கு என்ன நடக்கும், என்ன விதமான பலன்கள் கிடைக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் காணலாம்.

நீதியை நிலைநாட்டக் கூடியவர் சனி பகவான். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பாரபட்சமின்றி சுப பலன்களையும், கெடு பலன்களையும் கொடுக்கக் கூடிய நீதிமான். சனி என்றாலே பொதுவாக எல்லோருக்கு ஓர் அச்சம் ஏற்படும். கெடு பலன்களை மட்டும் கொடுக்க கூடியவர் அல்ல சனி பகவான். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களை அள்ளித் தரக் கூடியவர்.

sani-peyarchi-what-kind-of-benefits-will-get-rishabam-taurus-rasi-people-during-saturn-transit

2025 ஆம் ஆண்டில் சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். ரிஷப ராசியினருக்கு ஏழரை சனி தொடங்குகிறது. ரிஷப ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், சனியினால் ஏற்படம் போகும் மாற்றம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரிஷபம்: ரிஷப ராசியைப் பொருத்தவரை ராசியின் 11 ஆம் இடமான லாப ஸ்தானத்துக்கு சனி பகவான் வருகிறார். இது அற்புதமான காலகட்டமாக உங்களுக்கு இருக்கும். வேலை சம்பந்தமான விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். அடுத்த இரண்டரை ஆண்டு காலம் தொழில் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் செல்பவர்களுக்கு அருமையான காலகட்டமாக இருக்கும்.

புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு

வேலை விஷயத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். புதிய புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டு அதில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பல முன்னேற்றங்கள் ஏற்படும். சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு வேலைகளுக்கு காத்திருப்பவர்களுக்கு பொன்னான காலகட்டமாக இருக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும்.

பணவரவு அதிகரிக்கும்

வெளியூர் செல்ல நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு அமையும். அந்த வாய்ப்பு கடினமாக இருந்தாலும் அதனை பயன்படுத்திக் கொண்டால் வெற்றி உண்டாகும். சிறிய முயற்சி செய்தாலும் அதன் பலன் பெரியதாக கிடைக்கும். பெரிய தொகைகள் வருவதற்கான காலகட்டமாக இருக்கும். மிகுந்த செல்வாக்கு உண்டாகும். நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

நோய்கள் குணமாகும்

நண்பர்கள் மூலமாக, மூத்த நண்பர்கள் மூலமாக வேலை விஷயத்தில் நிறைய ஆலோசனைகள் கிடைக்கும். அதன் மூலம் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நாள்பட்ட நோய்கள் பூரண குணமாகும். மருந்து, மாத்திரைகளின் அளவு நிறையும். பூரண குணமடையும் காலகட்டமாக இருக்கும்.

தேவையில்லாத பழக்கம்

ராசிக்கு 11 ஆம் இடத்தில் இருக்கும் சனி மூன்றாம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பதாலும், ராசிக்கு 5 ஆம் வீட்டை பார்ப்பதாலும் சுய ஜாதகத்தில் 7, 11 ஆம் பாவம் கெட்டுப்போனவர்களுக்கு மட்டும் தேவையில்லாத உறவுகள், பழக்கம் உண்டாவதற்கான வாய்ப்பு ஏற்படும். நண்பர்கள் மூலமாக தேவையில்லாத சுமைகள் ஏற்படுவதற்கான சூழல் ஏற்படும். தேவையில்லாத கடமைகளை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

நட்பில் கவனம்

கெட்ட சகவாசங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. திடீரென பழக்கம் ஏற்பட்ட நபர்களுடன் பணப் பரிவர்த்தனை செய்வது, தொழிலில் முதலீடு செய்தால் மோசடி ஏற்படும் சூழல் உண்டாகும். கெட்ட பழக்கங்களில் சிக்குவதற்கான வாய்ப்புள்ளது. 11 ஆம் பாவத்தில் சனி இருப்பதால் சில சங்கங்கள் மூலமாக பிசினஸ் தொடர்புகள் உண்டாகும். நிறைய லாபங்கள் உண்டாவதற்கான வாய்ப்பு உள்ளது.

தொழில் தொடங்கலாம்

தொடர்புகள் அதிகரிக்கும். சனியின் 3 ஆம் பார்வை தொழிலுக்கு நிறைய நல்ல நண்பர்கள் உருவாகுவார்கள். நல்ல நண்பர்கள், கெட்ட நண்பர்கள் யார் என்பதை பார்த்து பழக வேண்டும். இலக்குகள் தள்ளிப் போவதற்கான வாய்ப்புள்ளது. சுய ஜாதகத்தில் 2, 10, 11 ஆம் பாவம் நன்றாக இருந்தால் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் தொழில் தொடங்கினால் அருமையான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். அற்புதமான காலகட்டமாக இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+