விருச்சிக ராசியை விரட்டும் சனி.. பெயர் கெடும் சூழல்.. கால்வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. ஜாக்கிரதை
சனி வக்ர பெயர்ச்சி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி வரை சனி வக்கிரப் பெயர்ச்சி அடைவதால் விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்க்கையில் வரப்போகும் மாற்றங்கள், கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஜூலை 2 முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சனி வக்கிரம் அடைகிறார். வக்கிரம் என்பது தன்னுடைய இயல்பை இழத்தல் என்பது பொருளாகும். இந்த காலகட்டத்தில் சனி செயலிழந்து காணப்படும். வருடகிரகங்களான குருவும், சனியும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்துக்குப் போகும்போது வக்கிரமாகும். 9 ஆம் இடத்துக்குப் போகும்போது வக்கிர நிவர்த்தியாவதும் வழக்கம்.

சனி வக்ர பெயர்ச்சி ஆகும் இந்த காலகட்டத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டிற்குரிய சனி பகவான் வக்ரம் பெறுகிறார். 3, 4க்கு உரியவர் சனி பகவான். 4 ஆம் இடத்தில் ராகு பகவான் வருவதால் நிறைய ஆண்களுக்கு கற்பில் பிரச்சனை வரும். பெண்கள் ஆண்கள் விஷயத்திலும், ஆண்கள் பெண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. மிகவும் ஜாக்கிரதையாக ஒவ்வொரு விஷயத்திலும் இருக்க வேண்டும். எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது.
பேச்சில் கவனம்
4க்கு உரியது என்பது வீடு, மாடு, மனை, கெளரவம், கற்பு, நன்னடத்தை என்பதாகும். சிறிய பிரச்சனைக்கு கூட மேலதிகாரிகளிடம் திட்டு வாங்கும் நிலை ஏற்படும். எதிர்பாலினத்தவரிடம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் பிரச்சனைகளை சந்திக்கும் அபாயம் உள்ளது. விளையாட்டாக பேசும் விஷயங்களுக்காக பிரச்சனைகளுக்கு ஆளாவீர்கள். வார்த்தையில், பேச்சில், நடத்தையில் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
வேலையில் தொய்வு
வேலைகளில் தொய்வு ஏற்படும். என்ன வேலை செய்தாலும் அதற்கான பலன்கள் கிடைக்காது. நாலரை மாத காலகட்டத்தில் முதல் ஒன்றரை மாதத்தில் அதிகளவிலான பயணங்கள் ஏற்படும். மறைமுகமான பண வரவுகள் உண்டாகும். சமையல் கலை வல்லுநர்கள், மருத்துவர்கள், ரத்தம் தொடர்பான வேலைகளில் இருப்பவர்கள், ஆன்மீகம் துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும். எதிர்பார்த்த அளவுக்கு பண வரவு இருக்காது.
எதிர்பாலினத்தவரிடம் கவனம்
வரும் இரண்டு மாதங்களில் ஆண்களால் பெண்களுக்கும், பெண்களால் ஆண்களுக்கு சிறு சிறு தொந்தரவுகள் ஏற்படும். பார்ட்னர்ஷிப்பில் சிறு பின்னடைவுகள் ஏற்படும். அதிக முதலீடுகள் தொழிலில் செய்யாமல் இருப்பது நல்லது. அடுத்த ஒன்றரை மாதத்தில் புதிய கடன்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். தொழிலுக்காக புதிய கடன்கள் வாங்குவதற்கான வாய்ப்பு வரும்.
மாணவர்கள்
வேலையில் மாற்றங்கள் ஏற்படும். உடல்நலனில் ஆரோக்கியம் செலுத்துவது நல்லது. படிக்கும் மாணவ, மாணவிகள் அதிக முயற்சியைப் போடுவது நல்லது. எந்த விஷயத்தை நீங்கள் செய்தாலும் அதில் அதீத உடல் உழைப்பு, நேரத்தை போட வேண்டியிருக்கும், புதிய கடன்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கூட்டுத் தொழிலில் கவனமாக இருப்பது நல்லது.












Click it and Unblock the Notifications