Mithunam Rasi Palan: 3 கிரகங்களால் மிதுன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது

Subscribe to Oneindia Tamil

செப்டம்பர் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கப் போகிறது. 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

நவக்கிரகத்தில் இருக்கும் 9 கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். இந்த செப்டம்பர் மாதத்தில் பல்வேறு கிரகங்களின் முக்கிய பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

Mithunam Monthly rasi palan Rasi palan

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதிக்குப் பிறகு அற்புதமாக இருக்கும். புதன் உச்சமாவதால் யோகமான மாதமாக இருக்கும். அம்மாவைப் பற்றிய கவலைகள் அனைத்தும் நீங்கும். முதல் 15 நாட்கள் செவ்வாய், சனி 4 ஆம் இடத்தில் இருக்கிறது. 4 இல் செவ்வாய் இருப்பதால் அம்மா, வீடு, வண்டி, வாகனம் போன்றவற்றின் கவலைகள் முதல் 15 நாட்கள் அதிகளவில் இருக்கும்.

குருவின் பார்வை

செப்டம்பர் 15 ஆம் தேதிக்குப் பிறகு 5 ஆம் இடத்துக்கு செவ்வாய் வருவது, புதன் உச்சமடைவதால் எல்லா நிலைமைகளிலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். பெரிய சோதனைகள் எதுவும் இருக்காது. 9 ஆம் இடத்தில் ராகு இருந்து பாக்கியத்தை கெடுக்கும் சூழல் இருந்தாலும், குருவின் பார்வையால் இருப்பதால் தொட்டது துலங்கக் கூடிய மாதமாக இருக்கும். உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் பலிக்கும் காலகட்டமாக இருக்கும்.

ஆன்மீக சிந்தனை

சிலருக்கு பூர்வீகம் தொடர்பான சிந்தனைகள், நினைப்புகள் அதிக அளவில் இருக்கும். சொந்த ஊருக்கு திரும்பிச் செல்லலாம் என்கிற ஆர்வம் ஏற்படும். சிலருக்கு ஆன்மீக எண்ணங்கள் கூடுதலாக இருக்கும். மாதத்தின் பிற்பகுதியில் 3 ஆம் இடத்தில் குரு, சுக்கிரன் அமர்ந்து ராகுவைப் பார்ப்பதால் ஆன்மீக யாத்திரைகள், எண்ணங்கள் அதிகரிக்கும்.

பூர்வீக சொத்து

பூர்வீக சொத்துகளைப் பிரித்துக் கொள்வது, பாகப் பிரிவு பிரச்சனை, சொத்துகளால் அண்ணன், தம்பி தகராறுகள் அனைத்தும் மாதத்தின் 20 ஆம் தேதிக்குப் பிறகு நிவர்த்தியடையக் கூடிய தன்மை உள்ளது. 9 ஆம் இடத்தை சுபர்கள் வலுத்து பார்ப்பதால் இதுவரைக்கும் கிடைக்காத பாக்கியங்கள் அனைத்தும் கிடைக்கும். பணத் தட்டுப்பாடுகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும்.

யோகம்

குழந்தைகளைப் பற்றிய கவலைகள் தீரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு இந்த வருடத்தின் இறுதியில் நிச்சயமாக திருமண யோகம் உண்டு. ராசியில் குரு இருந்து 5, 7, 9 ஆம் இடத்தைப் பார்ப்பது மிகப்பெரிய மேன்மையை ஏற்படுத்தும். கடந்த மூன்று ஆண்டுகாலமாக அஷ்டம சனி காலத்தில் கடும் பாதிப்புகளைச் சந்தித்திருப்பீர்கள். இனி 10, 15 ஆண்டுகளுக்கு அதுபோன்ற நிலைமை எதுவும் ஏற்படாது. அற்புதமான மாதமாக இந்த மாதம் அமையும். ஏற்றத்தையும், வளர்ச்சியையும் கொடுக்கும் மாதமாக இந்த மாதம் இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+