விருச்சிகத்தின் ஆட்டம் ஆரம்பம்.. இனி தொட்டதெல்லாம் தங்கமாகும்.. மிகப்பெரிய ஜாக்பாட் யோகம்
செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூன் மாதத்தில் நடைபெறும் செவ்வாய் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
செவ்வாய் என்பது நீதியை நிலைநாட்டக் கூடிய கிரகம். உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு சங்கடமான நிகழ்வுகளும் செவ்வாயால் தான் நடக்கும். எதிரிகள் தொல்லை, கொலை, கொள்ளை, வழக்கு போன்றவை நடப்பதற்கு காரணம் செவ்வாய் சாதகமற்ற சூழ்நிலையில் இருப்பதுதான். மனிதனுடைய வாழ்க்கையில் சிறைவாசத்தை நிர்ணயிப்பதும், வாகனத்தில் செல்லும்போது மற்றவர்களுடன் பிரச்சனை ஏற்படுத்துவதும் செவ்வாயே.

செவ்வாய் சில இடங்களில் விஷேசமான நற்பலன்களையும், பல இடங்களில் இருந்தால் கெடு பலன்களையும் ஏற்படுத்துவார். செவ்வாய் கடக ராசியில் நீச்ச ஸ்தானத்தில் இருந்து வெளியே வந்து சிம்ம ராசிக்கு வருகிறார். ஜூன் 6 முதல் ஜூலை 28 வரைக்கும் சிம்ம ராசியில் செவ்வாய் இருக்கப் போகிறார். ஜூலை 28 ஆம் தேதி கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாவதால் சனியின் நேர் பார்வையில் வருகிறார்.
இந்த காலகட்டத்தில் சில ராசிகளுக்கு வண்டி, வாகனங்கள் வகையில், அருவாமனை, கத்தியால் காய்கறிகளை நறுக்கும்போது கூட கவனமாக இருப்பது நல்லது. இந்த செவ்வாய் பெயர்ச்சி விருச்சிக ராசியினருக்கு என்ன விதமான பலன்களைக் கொடுக்கும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களைப் போலவே அருமையான செவ்வாய் பெயர்ச்சியாக இருக்கும். இதுவரை ஒரு பயத்துடனே இருந்து கொண்டிருந்தீர்ப்பீர்கள். பயம், தெளிவின்மை, குழப்பம், தடுமாற்றம், தவறான முடிவுகள் எடுப்பது என குழப்பத்தில் இருந்திருப்பீர்கள். அதற்கான காரணம் செவ்வாய் பகவான் நீச்ச ஸ்தானத்தில் இருந்ததுதான்.
அற்புதம் ஏற்படும்
ராசிக்கு குரு பார்வை இருந்த வரைக்கும் எந்த பிரச்சனையும் இருந்திருக்காது. மே 14 முதல் ஜூன் 6 ஆம் தேதிக்குள் அனைத்து விதமான குழப்பங்களையும் அனுபவித்திருப்பீர்கள். இனிமேல் அந்த குழப்ப நிலைகள் எல்லாம் மாறும். செவ்வாய் பகவான் 9 ஆம் இடத்தில் இருந்து 10 ஆம் இடத்துக்குப் பெயர்ச்சியாகி 4 ஆம் இடத்தை பார்ப்பதன் மூலம் ரியல் எஸ்டேட், விவசாயிகள், வீடு கட்டிக் கொடுக்கக்கூடிய நபர்கள், மைன்ஸ் தொழில் செய்பவர்கள், சுரங்கம் வைத்து செயல்படுபவர்கள், சித்தாள், மேஸ்திரி, ஜேசிபி வாகனம் வைத்து வேலை செய்பவர்களுக்கு என நிலம் சார்ந்த வேலை செய்பவர்கள் அனைவருக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
தடைகள் நீங்கும்
உத்தியோக ரீதியாக அரசாங்க ரீதியாக உங்களுக்கு இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். இனிமேல் பண வரவு அதிகரிக்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். உங்களுடைய செல்வாக்கை உயர்த்துவீர்கள். கெளரவத்தை காப்பாற்றுவீர்கள். மரியாதை உயரும். தொழில் ரீதியான முதலீடுகள் அதிகரிக்கும். சுயமாகத் தொழில் தொடங்கக்கூடிய மாற்றம் உண்டாகும்.
சொத்து சேர்க்கும் யோகம்
சொந்த வீடு வாங்கும் வாய்ப்பு உண்டாகும். 2018 முதல் பல்வேறு அவமானங்களைச் சந்தித்து வந்திருப்பீர்கள். இனிமேல் அவமானத்துக்கே அவமானத்தை கொடுப்பீர்கள். அந்த அளவு நல்ல காலகட்டமாக இருக்கும். உங்கள் ராசிக்கு 8 ஆம் இடத்தில் குரு இருப்பதால் வருமான அதிகரிப்பு ஏற்படும். தொழில் விருத்தி அடையும். திடீர் அதிர்ஷ்ட பணம் வருவதற்கான வாய்ப்புள்ளது.
பண வரவு அதிகரிக்கும்
பணப் புழக்கம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிப்பதால் சொத்து சேர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். சுபச் செலவுகள் உண்டாகும். உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் அனைத்தும் பூர்த்தி ஆகும். சொத்தை விற்க வேண்டும் என்று முயற்சிப்பவர்களுக்கு சொத்தை விற்காமலேயே பணத்தைப் புரட்டுவதற்கான தன்னம்பிக்கை நிறைந்த யோகமான மாதமாக இருக்கும். ஜூன் 6 முதல் ஜூலை 28 வரை ஏற்றமும், செல்வாக்கையும் தரக்கூடிய மாதமாக அமைந்திடக் கூடிய வாய்ப்பு உண்டாகும். இதுபோன்ற வாய்ப்பு, யோகமான காலகட்டம் வர இனி உங்களுக்கு ஓராண்டாகும். அதனால் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications