Sevvai Peyarchi: கடக ராசிக்கு 30 நாட்களில் வரப்போகும் குட் நியூஸ்.. அள்ளிக் கொடுக்கும் செவ்வாய்
செவ்வாய் பெயர்ச்சி பலன்: 2026 ஜனவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 23 ஆம் தேதி வரையில் என 39 நாட்கள் செவ்வாய் மகரத்தில் உச்சமடைந்து சூரியன், சந்திரன் நட்சத்திரத்திலும், தனது சொந்த நட்சத்திரத்திலும் பயணித்து பலனளிக்கப் போகிறார். அந்த வகையில், இந்த செவ்வாய் பெயர்ச்சியில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
செவ்வாய் என்பது சகோதரனை குறிக்கக்கூடிய கிரகம். இடம், நிலம், வீடு, வண்டிக்கு சம்பந்தப்பட்ட கிரகம் செவ்வாய். விளையாட்டுத் துறை, மருத்துவர், சீருடைப் பணியாளர்கள், அதிகாரத்துக்குச் செல்ல என எல்லா விஷயங்களுக்கும் செவ்வாய் கிரகம் முக்கியமானதாகும். செவ்வாய் கிரகம் தற்போது மகர ராசியில் உச்சமடைந்து 30 நாட்கள் பலனைத் தரப்போகிறது. அந்த வகையில், இந்த செவ்வாய் பெயர்ச்சியில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

கடகம் ராசி பலன்
கடக ராசிக்காரர்களுக்கு மகர மனையில் உச்சம் பெற்றிருக்கும் செவ்வாய் வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி வரை மகர மனையில் உச்ச பலத்துடன் இருந்த பலனளிக்கப் போகிறது. செவ்வாய் பகவான் உங்களுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகிறது. நல்ல நல்ல செய்திகள் உங்களை வந்து சேரும். பூர்வம் புண்ணியம் பலப்படும். பூர்வீகம் சார்ந்த விஷயங்கள், கடவுள் அனுக்கிரகம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சிறப்பு பெறும்.
அதிர்ஷ்டம் கிடைக்கும்
நல்ல அதிர்ஷ்டங்கள், பதவிகள் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். அனுகூலத்தைத் தரும் அமைப்பு உள்ளது. காதல் திருமணம் செய்யும் அமைப்பு உள்ளது. காதல் மலரக்கூடிய காலகட்டமாக இருக்கும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். தடை, தாமதங்கள் அனைத்தும் நீங்கும். சுபகாரியத் தடைகள் நீங்கும்.
தொழில்
இனி தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களுக்குப் பிறகு செவ்வாய் உச்ச வலிமை பெறுவதோடு, தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழிலில், வேலையில் நல்ல மாற்றம் ஏற்படும். இடமாற்றம், பதவி உர்வுகள் கிடைக்கும் காலகட்டம். சமுதாயத்தில் உங்களுக்கு என அங்கீகாரம் கிடைக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல ஊதியம் கிடைக்கும்.
கடன் நீங்கும்
தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த கடன் அமைப்புகள் நீங்கும். அதனை அடைக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். நல்ல விஷயங்கள் நடக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். தொழில், வியாபாரம், வேலையில் நல்ல முன்னேற்றம் ஏப்படும். வரும் 28 ஆம் தேதி வரை உத்திரடாம் நட்சத்திரத்தில் செவ்வாய் பயணிப்பதால் குடும்பத்தில் தன வரவு ஏற்படும்.
பணவரவு
பணம் பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுப காரியங்கள் செய்யக்கூடிய நல்ல காலகட்டம். உங்களால் தந்தைக்கும், தந்தையால் உங்களுக்கும் நன்மை ஏற்படும். அரசாங்கத்தின் மூலமாக அனுகூலம், ஆதாயம் கிடைக்கும். பதவி உயர்வு கட்டாயம் கிடைக்கும். ஆளுமைத் தன்மை இருக்கும். அரசாங்க வேலைக்குப் போக வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படும்.
குழப்பம் நீங்கும்
சிலர் அரசியலில் நுழையக்கூடிய காலகட்டமாக இருக்கும். செவ்வாய் திருவோணம் நட்சத்திரத்தில் 29 ம் தேதி முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை பயணிப்பதால் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கக்கூடிய யோகம் ஏற்படும். மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கும். தெளிவான முடிவெடுக்கக் கூடிய தன்மை ஏற்படும். எல்லா விஷயங்களிலும் துணிச்சல் ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல காலகட்டம். இதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications