Sevvai Peyarchi: மிதுன ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பம்.. கோபம், ஆக்ரோஷம் மட்டும் வேண்டாம்
செவ்வாய் பெயர்ச்சி பலன்: 2026 ஜனவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 23 ஆம் தேதி வரையில் என 39 நாட்கள் செவ்வாய் மகரத்தில் உச்சமடைந்து சூரியன், சந்திரன் நட்சத்திரத்திலும், தனது சொந்த நட்சத்திரத்திலும் பயணித்து பலனளிக்கப் போகிறார். அந்த வகையில், இந்த செவ்வாய் பெயர்ச்சியில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
செவ்வாய் என்பது சகோதரனை குறிக்கக்கூடிய கிரகம். இடம், நிலம், வீடு, வண்டிக்கு சம்பந்தப்பட்ட கிரகம் செவ்வாய். விளையாட்டுத் துறை, மருத்துவர், சீருடைப் பணியாளர்கள், அதிகாரத்துக்குச் செல்ல என எல்லா விஷயங்களுக்கும் செவ்வாய் கிரகம் முக்கியமானதாகும். செவ்வாய் கிரகம் தற்போது மகர ராசியில் உச்சமடைந்து 30 நாட்கள் பலனைத் தரப்போகிறது. அந்த வகையில், இந்த செவ்வாய் பெயர்ச்சியில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசிக்காரர்களுக்கு 6க்கு உரியவர் செவ்வாய். கடன், நோய், வம்பு, வழக்கை குறிப்பவராகவும், லாபத்தைக் கொடுக்க கூடியவராகவும் இருக்கிறார். இந்த காலகட்டத்தில் 8 ஆம் இடத்தில் இருந்து செவ்வாய் 11 ஆம் பார்வையாக பார்ப்பதால் வலிகளைக் கொடுத்து லாபத்தைக் கொடுப்பார். திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். எதிர்பார்க்காத வகையில் நன்மைகள் கிடைக்கும்.
பணவரவு
இதுவரை வலிகள் கொடுத்துக் கொண்டிருந்த விஷயங்கள் எல்லாம் நீங்கும். பண வரவு நன்றாக இல்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இனி பணவரவு நன்றாக இருக்கும். தொழிலில் திடீர் லாபம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். வேலையே கிடைக்கவில்லை என்று கூறிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
கடன்கள் கிடைக்கும்
கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கும். கடனை நல்ல விதமாகப் பயன்படுத்துவது நன்மை பயக்கும். 6 ஆம் அதிபதி 8 இல் இருக்கிறார். கடனை வளர்க்கக் கூடிய அமைப்பும் இருப்பதால் கவனம் தேவை. நிச்சயமாக எதிர்ப்பு, பகை உண்டாகும். போராடி வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். யார் எதிரி என்பதை காண்பிக்க வைக்கும். யாரை நம்புவது என்று தெரியாமல் இருந்தவர்களுக்கு யார் எதிரி என்பதை இனம் காணக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
பயணங்கள்
ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தும் காலகட்டமாக இருக்கும். உடல்நலனில் அக்கறை காட்டுவீர்கள். ஏற்கனவே ஆரோக்கியத்தில் பாதிக்ப்பட்டவர்களுக்கு நல்ல மருத்துவம், மருத்துவர் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். வம்பு, வழக்கு, கோர்ட், கேஸ் போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். பயணங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் செல்வோர் இரவு நேர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
கவனம்
செவ்வாய் பகவான் 28 ஆம் தேதி வரை உத்திராடம் நடசத்திரத்தில் பயணிக்கப் போகிறார். இந்த காலகட்டத்தில் தகப்பன் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பது நன்மை பயக்கும். அரசு, அரசு சார்ந்த விஷயத்தில் கெட்ட பெயர் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பது நல்லது. விதிமுறைகள் சார்ந்த விஷயங்களை கடைப்பிடிப்பது நல்லது.
பண விஷயம்
ஜனவரி 29 முதல் பிப்ரவரி 14 ம் தேதி வரை திருவோணம் நட்சத்திரத்தில் பயணிப்பதால் தன வரவு உண்டாகும். பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். மூன்றாம் நபர்களை நம்பி பணம், கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். செவ்வாய், சந்திரன் சேருவதால் தாயின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. பேச்சில் கடினமில்லாமல் இருக்க வேண்டும். கோபம், ஆக்ரோஷத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. மற்றபடி அனைத்து விதமான ஏற்றங்களும் உங்களுக்கு ஏற்படும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: மீன ராசிக்கு ஜென்ம சனியிலும் ஜாக்பாட்.. அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு -
தமிழ் புத்தாண்டு பலன்: கும்ப ராசிக்கு பராபவ ஆண்டில் அதிர்ஷ்டமா?.. முழு பலன்கள் விவரம் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல்












Click it and Unblock the Notifications