Sevvai Peyarchi: துலாம் ராசிக்கு தொட்டது துலங்கும் யோகம்.. இனி சிங்கம் மாதிரி வாழப் போறீங்க
செவ்வாய் பெயர்ச்சி பலன்: 2026 ஜனவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 23 ஆம் தேதி வரையில் என 39 நாட்கள் செவ்வாய் மகரத்தில் உச்சமடைந்து சூரியன், சந்திரன் நட்சத்திரத்திலும், தனது சொந்த நட்சத்திரத்திலும் பயணித்து பலனளிக்கப் போகிறார். அந்த வகையில், இந்த செவ்வாய் பெயர்ச்சியில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
செவ்வாய் என்பது சகோதரனை குறிக்கக்கூடிய கிரகம். இடம், நிலம், வீடு, வண்டிக்கு சம்பந்தப்பட்ட கிரகம் செவ்வாய். விளையாட்டுத் துறை, மருத்துவர், சீருடைப் பணியாளர்கள், அதிகாரத்துக்குச் செல்ல எல்லா விஷயங்களுக்கும் செவ்வாய் கிரகம் முக்கியமானதாகும். செவ்வாய் கிரகம் தற்போது மகர ராசியில் உச்சமடைந்து 30 நாட்கள் பலனைத் தரப்போகிறது. அந்த வகையில், இந்த செவ்வாய் பெயர்ச்சியில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசிக்காரர்களுக்கு ராசிக்கு 4 ஆம் இடமான சுக ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் உச்சமடைகிறார். நிறைய பேருக்கு குடும்பத்தை அமைத்துக் கொடுக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். ஏற்கனவே குடும்பத்தில் பிரச்சனையில் இருந்து வந்தவர்களுக்கு அந்த கருத்து மாறுபாடுகள் எல்லாம் மாறும். குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் தோன்றும்.
சொத்துகள் வாங்கும் யோகம்
உங்களுடைய பேச்சு தைரிய, வீரியத்தோடு இருக்கும். துணிச்சலாக செயல்படுவீர்கள். தன ஸ்தானத்தின் அதிபதி உச்ச பலமடைவதால் பொருளாதாரம் நன்றாக இருக்கும். பணத்தை வைத்து இடத்தை வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். இடம், வீடு, நிலம் வாங்கும் யோகத்தைக் கொடுக்கக் கூடிய அமைப்பு உள்ளது. இந்த காலகட்டம் அற்புதம் நிறைந்ததாக உங்களுக்கு இருக்கும்.
உயர்பதவி, அங்கீகாரம்
கணவன் அல்லது மனைவி மிகவும் உறுதியாக மாறுவீர்கள். கணவன், மனைவியால் அனுகூலத்தைப் பெறக்கூடிய தன்மை ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சமூகத்தில் உயர்பதவி, அங்கீகாரம் கிடைக்கக்கூடிய நிலை ஏற்படும். பெயரையும், புகழையும் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். திருமணம் நடக்கும். கூட்டுத் தொழில் செய்யக்கூடிய எண்ணங்கள் தோன்றும்.
தொட்டது துலங்கும்
கூட்டாளிகள் சுமூகமாக செல்லக்கூடிய நிலை ஏற்படும். நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். சமூகத்தில் சந்திக்கும் நபர் மூலம் அங்கீகாரம், நற்பலன்கள் கிடைக்கும். வரும் 28 ஆம் தேதி வரை செவ்வாய் உத்திராடம் நட்சத்திரத்தில் பயணிக்கும்போது பணவரவு, லாபம் கொட்டும் காலகட்டமாக இருக்கும். தொட்டது துலங்கக்கூடிய காலகட்டமாகவும், நினைத்தது நடக்கும் காலகட்டமாகவும் இருக்கும்.
அனுகூலம்
மனதில் இருக்கும் சந்தோஷத்தை வெளிப்படுத்துவீர்கள். அதிகாரம், ஆளுமை, பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றம் கிடைக்கும் யோகம் உண்டு. அரசு மூலமாக அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். அரசுத் துறையில் வேலைக்கு முயற்சி செய்யும் யோகம் உண்டு. அரசு மற்றும் அரசியல்வாதிகளால் ஆதாயம் ஏற்படும். அரசியலில் இணைவதற்கான ஈடுபாடு அதிகரிக்கும்.
கெளரவம் கிடைக்கும்
29 ஆம் தேதி முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை திருவோணம் நட்சத்திரத்தில் பயணிக்கும்போது வேலை மாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்ற திருப்பங்களை கொடுக்கக்கூடிய அமைப்பு ஏற்படும். தொழிலுக்காக சில முயற்சிகளை எடுப்பீர்கள். தொழில் சார்ந்த விஷயத்தில் உங்களுக்கு அங்கீகாரம், கெளரவம் கிடைக்கும். நல்லவை நடக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
அனுகூலம்
தாய், சொத்துகள் சார்ந்த விஷயங்கள் நன்றாக இருக்கும். பிப்ரவரி 15 ஆம் தேதிக்குப் பிறகு அவிட்டம் நட்சத்திரத்தில் பயணிக்கும்போது சொத்துகள் வாங்குவது, தன லாபம் கிடைப்பது, திருமணம் நடப்பது, வீட்டை வாடகைக்கு விடுவது, சீருடைப் பணியாளர்கள் துறையில் ஆர்வம் காட்டுவது போன்ற யோகங்கள் ஏற்படும்.
-
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications