செவ்வாய் பெயர்ச்சி 2025: மேஷம் ராசிக்கு ஜாக்பாட்.. தொழிலில் ஏற்படப்போகும் பலே மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தை பிறந்துவிட்டது. தை மாதத்தில் சுக்கிரன் மற்றும் செவ்வாய் கிரகங்களின் பெயர்ச்சி இருக்கிறது. ஒவ்வொரு கிரகத்தின் பெயர்ச்சியும் ஒவ்வொரு தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் கிரக பெயர்ச்சியால் மேஷம் ராசிக்கு ஏற்படும் பலன்களை இதில் காணலாம்.

செவ்வாய் அமைப்பு சரியாக இருந்தால் ஆரோக்கியம், உத்யோகம் அமைப்பு நன்றாக இருக்கும். சுக்கிரன் பெயர்ச்சியுடன், செவ்வாய் பெயர்ச்சி சாதகமாக இருந்தால் எவ்வளவு பெரிய பிரச்னைகள் வந்தாலும் சமாளிக்க முடியும். செவ்வாயை பூமி காரகன் மற்றும் சகோதர காரகன் என்றும் சொல்வார்கள். செவ்வாய் 3, 6, 11 ஆம் இடங்களில் நற்பயன்களை கொடுப்பார். செவ்வாயுடன் சனி சம்பந்தப்பட்டால் உலகளவு பேரழிவு ஏற்படும். நெருப்பு, மருந்து, போர் ஆகியவற்றால் பாதிப்பு ஏற்படும்.

sevvai peyarchi mesham

இந்நிலையில் செவ்வாய் கடந்த அக்டோபர் மாதம் முதல் கடகம் ராசியில் நீட்ச ஸ்தானத்தில் வக்கிரமாக இருக்கிறார். அதனால் பாதிப்புகள் அதிகமாகவே இருக்கும். செவ்வாய் ஜனவரி 21 ஆம் தேதி பின்னோக்கி நகர்ந்து மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஏப்ரல் 3 ஆம் தேதி வரை சுமார் 82 நாட்களுக்கு செவ்வாய் மிதுனம் ராசியில் இருக்கப் போகிறார்.

மேஷம் ராசிக்கு செவ்வாய் மூன்றாம் இடத்துக்கு செல்கிறார். இதனால் எதிலும் வெற்றி கிடைக்கும். வழக்கு, கடன், ஆகியவற்றில் வெற்றி கிடைக்கும். பணியில் இருந்த இழுபறி நீங்கி வெற்றி நிலை உருவாகும். உங்களின் இளைய சகோதரர் மூலம் ஆதாயம் ஏற்படும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

வக்கிர நிலையால் எதிர்மறையான பலன்கள் வரும் என்று பயப்பட தேவையில்லை. காரியங்களில் அலைச்சல் இருந்தாலும் இறுதியில் நல்லதே நடக்கும். உங்களுக்கு நற்பயன்கள் அதிகரிக்கும். வேலையில் உள்ள சட்ட சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். எட்டாம் ஸ்தான அதிபதி மூன்றாம் இடத்தில் மறைகிறார்.

இதனால் எதிரிகளால் உங்களுக்கு தொல்லை இருக்காது. குரு பகவான் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அதன் காரணமாக பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். பண வரவு திருப்தியாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிலம் சார்ந்த விஷயத்தில் நிச்சயம் வெற்றி இருக்கும்.

பூர்விக சொத்தில் இருந்து பங்கு வரும். தொழில் சம்பந்தமான உங்களின் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். நீண்ட காலமாக யோசித்த அனைத்து காரியங்களையும் செயல்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. புதிய தொழில் தொடங்குவதற்கு இது சரியான நேரம். செவ்வாய் மூன்றாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் இடத்தை பார்க்கிறார். உங்கள் முடிவுக்கு தந்தை கட்டுப்படுவார்.

இருப்பினும் தந்தையுடன் சில மனஸ்தாபங்கள் வரும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. நீண்ட காலமாக வேலை தேடி வந்தவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி வேலை அமையும். சிலருக்கு பெரு நிறுவனங்களில் உயர் பதவி கிடைக்கும். பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு பிறகு குரு வக்கிரம் நிவர்த்தியடைகிறார் அதனால் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை உயரும்.

வருவாய் அதிகரிக்கும். தொழிலில் வளர்ச்சி இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்கள் வீட்டு கதவை திட்டும். எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். நிலம் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அரசியல் மற்றும் கலைத்துறையில் இருப்பவர்களுக்கும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.

தொட்டது துலங்கி நீண்ட காலத்துக்கு பிறகு மனதில் உள்ள சஞ்சலங்கள் நீங்கி மனம் நிம்மதியடையும். கவலைகள் நீங்க அருகில் உள்ள முருகன் கோயில்களுக்கு சென்று வரலாம். தினசரி முருகன் வேல் மாறல் மகா மந்திரத்தை படிப்பதால் கவலைகள் நீங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+