செவ்வாய் பெயர்ச்சி 2025: மிதுனம் ராசி கவனமாக இருக்க வேண்டிய இரண்டு விஷயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தை மாதத்தில் செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி இருக்கிறது. ஒவ்வொரு கிரகத்தின் பெயர்ச்சியும் ஒவ்வொரு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செவ்வாய் கிரக பெயர்ச்சியால் மிதுனம் ராசிக்கு ஏற்படும் பலன்களை இந்த தொகுப்பில் காணலாம்.

செவ்வாய் அமைப்பு சரியாக இருந்தால் ஆரோக்கியம், உத்யோகம் அமைப்பு நன்றாக இருக்கும். செவ்வாய் 3, 6, 11 ஆம் இடங்களில் நற்பயன்களை கொடுப்பார். பத்தாம் இடத்தில் சுமாராகவும் 1,2,4,5,7,8,9,12 ஆகிய இடங்களில் செவ்வாய் வந்தால் சற்று பின்னடைவு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

sevvai peyarchi midhunam

செவ்வாயுடன் சனி சம்பந்தப்பட்டால் உலகளவு பேரழிவு ஏற்படும். செவ்வாயுடன் சந்திரனுடன் நேர்பார்வை வரும்போதும், செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிகம் ராசியில் பயணிக்கும்போது நீட்ச பங்கம் பலன் கிடைக்கும். இந்நிலையில் செவ்வாய் கடந்த அக்டோபர் மாதம் முதல் கடகம் ராசியில் நீட்ச ஸ்தானத்தில் வக்கிரமாக இருக்கிறார்.

அதனால் பாதிப்புகள் அதிகமாகவே இருக்கும். செவ்வாய் ஜனவரி 21 ஆம் தேதி பின்னோக்கி நகர்ந்து மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஏப்ரல் 3 ஆம் தேதி வரை சுமார் 82 நாட்களுக்கு செவ்வாய் மிதுனம் ராசியில் இருக்கப் போகிறார். இது 12 ராசிகளுக்கும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது.

மிதுனம் ராசிக்கு உங்களின் ராசிக்குள்ளேயே செவ்வாய் வருகிறது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட போகின்றன. உங்களுக்கு முன் கோபம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படும். குடும்பத்தில் கணவன் - மனைவி, பெற்றோர், சகோதரர் ஆகிய உறவுகளுடன் மாற்று கருத்துகள் வந்து செல்லும். அதனால் வீண் விவாதத்தை தவிர்க்கவும்.

பணியிடத்தில் உங்களின் உயரதிகாரிகள், கீழ் பணியாற்றுவோர் ஆகியோரிடம் வீண் விவாதம் செய்து சங்கடம் ஏற்படும். அரசு உத்யோகத்தில் இருப்போர்களிடமும் கருத்து முரண்பாடு ஏற்படும். உடன் பணியாற்றுவோரிடம் வீண் விவாதத்தை தவிர்ப்பது நல்லது. பணிச்சுமை அதிகரிக்கும். பணியில் சவால்களும் அதிகமாக இருக்கும்.

முக்கியமாக நிலம் சார்ந்த தொழிலில் இருப்போருக்கு சவால்கள் அதிகரிக்கும்.உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். அதில் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது. முடிந்தவரை மருத்துவரை அணுகி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்வதன் மூலம் பாதிப்பு சற்று குறைய வாய்ப்புள்ளது. தண்ணீர் அதிகம் பருக வேண்டும். உடலுக்கு குளிர்ச்சி தரும் பழம் மற்றும் உணவுகளை சாப்பிடலாம்.

உத்யோகத்தில் நிறைய சவால்கள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் சிக்கல் ஏற்படும். உங்களின் பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். பயணங்களில் பொருட்களின் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் பதற்றம் முன் எப்போதும் இல்லாதளவுக்கு அதிகமாக இருக்கும். அதனால் எதிலும் நிதானம் அவசியம்.

நிதானம் தவிரவிட்டால் உறவுகள் மற்றும் பணியிடத்தில் அவமானத்தை சந்திக்க நேரிடும். அதேநேரத்தில் அதிக பிரச்னைகள் ஒரு கட்டத்தில் உங்களை பக்குவப்படுத்தும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். கடின முயற்சிகளால் காரியத்தில் வெற்றி உண்டாகும். பெற்றோரின் ஆதரவு நன்றாக இருக்கும்.

தியானம் மற்றும் யோகா மூலம் மனதை சமநிலையில் வைத்திருக்கலாம். மூச்சு பயிற்சி மூலம் ஆரோக்கியம் மேம்படும். கவலை நீங்குவதற்கு அருகில் உள்ள முருகன் கோயில்களுக்கு சென்று வரலாம். கந்த சஷ்டி கவசத்தை தினசரி படிப்பதால் உடலில் ஆரோக்கியம் ஏற்படுவதுடன் மனதும் சற்று நிம்மதியாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+