Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் கொட்டும் பணம்.. ஒரு விஷயத்தில் கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ரத்தத்தில் பரவும் தொற்று நோய் பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். யோக பலன்கள் அதிகஅளவில் ஏற்படும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது விதிமுறைகளைக் கடைப்பிடித்து பாதுகாப்பாக ஓட்டுவது நல்லது.
சுற்றுலா செல்லும் யோகம்
மன அழுத்தம் இருந்த அமைப்பு மீறி சரியான மருந்து மாத்திரைகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். விநாயகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். ராசி லக்கினத்தில் கேது இருப்பதால் வெளியூர், வெளிநாடு, இன்பச் சுற்றுலா செல்லும் யோகம் ஏற்படும். ஆன்மீகப் பிரயாணம் செய்வதற்கான யோகம் ஏற்படும்.
மகான்கள் வழிபாடு
மந்திராலய மகான், விஜயேந்திர சுவாமிகள் வழிபாடு, ஜீவ சமாதி அடைந்த சந்நியாசிகளை வழிபாடு செய்வது பெரிய மாற்றத்தை உண்டாக்கும். வக்கிரத்தில் குரு இருக்கும்போதும், புதன் வக்கிரமாக இருக்கும்போதும் நாம் எடுத்து செய்யும் காரியங்கள், நினைக்க கூடிய விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும். வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். சரியாக திட்டமிட்டால் எல்லா விஷயங்களையும் திட்டமிட்டு முடிக்கும் யோகம் உண்டாகும்.
திடீர் பண வரவு
மூன்றாம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பது பெரிய ஏற்றத்தையும், ஆனந்தத்தையும் ஏற்படுத்தும். பொறுமையாக சில காய்களை நடத்த வேண்டியதிருக்கும். மனதில் பெரிய சந்தோஷம் ஏற்படும். புதிய இன்ஸ்ட்ரூமென்ட்களை வாங்குவீர்கள். வண்டி, வாகனங்கள் புதிதாக வாங்குவீர்கள். அண்ணன், தங்கைக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும். திடீர் பண சேர்க்கை, திடீர் பண வரவு, நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும்.
பணம் வந்து சேரும்
குரு வக்கிரமடைந்து உங்களுடைய லாப ஸ்தானத்துக்கு செல்வதால் நண்பர்கள், உறவினர்கள் வாங்கிய பணங்கள் வந்து சேரும். எந்த அநீதி உங்களுக்கு நடந்ததோ அதை செய்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய நிலைமை ஏற்படும். 23 ஆம் தேதிக்குப் பிறகு அற்புதமான காலகட்டமாக இருக்கும். முயற்சிகளைக் கைவிடாமல் இருப்பது நல்லது. சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 75 சதவீதமும் நன்றாக இருக்கும்.
-
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications