Simmam Rasi Palan: சிகரம் தொடப்போகும் சிம்ம ராசி.. தொட்டதெல்லாம் ஜெயம்
கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். கார்த்திகையில் நிறைய விசேஷங்கள் நடக்கும். ஐயப்ப பக்தர்கள் லட்சக்கணக்கானோர் மாலை போடும் காலம். கார்த்திகை தீபம் வரும் மாதம். நவம்பர் 17 முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரையிலான கார்த்திகை மாதம்.

கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை தீபம் மிகவும் பிரதானமானதாகும். வீட்டில் ஒற்றைப் படையில் தீபமேற்றுவது நன்மை பயக்கும். கார்த்திகை மாதம் முழுவதும் சோமவாரம் எனும் திங்கள்கிழமை விசேஷமான காலமாகும். சிவன் கோயிலில் நடைபெறக்கூடிய சங்காபிஷேகத்தில் கலந்துகொள்வது, அபிஷேகத்தில் கலந்துகொள்வது நன்மையை ஏற்படுத்தும்.
பரிகாரம்
கடன் குறைய வேண்டும், தேக ஆரோக்கியத்தில் பலம் பெற வேண்டும் என்றால் கோயிலுக்கு பழங்கள் வாங்கிக் கொடுப்பது நன்மையை ஏற்படுத்தும். கடன் குறைய வேண்டும் என்றால் திங்கள்கிழமை தோறும் பச்சரிசி வாங்கிக் கொடுப்பது நன்மை பயக்கும். பஞ்சாங்கத்தின்படி, கார்த்திகை மாதத்தில் கன மழை பெய்யும். தமிழகம் முழுவதும் வெள்ளக் காடாக மிதக்கும் சூழ்நிலை ஏற்படும். இந்த கார்த்திகை மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிகளவிலான யோக பலன்கள் கிடைக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் நல்ல மாற்றங்ள் ஏற்படும். மன அழுத்தங்கள் தீரும். துணையுடன் உள்ளூர், வெளியூர், கடல் கடந்து பயணங்கள் போகும் யோகம் ஏற்படும்.
மனம் விட்டுப் பேசுங்க..
தெய்வ வழிபாடுகளைச் செய்து மகிழ்வீர்கள். இதுவரை இருந்து வந்த பதட்டங்கள் குறையும். தாய், தந்தை வழி உறவுகளுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். பெற்றோரிடம் வன்மம் கொள்ளாமல் மனம் விட்டுப் பேசுவது நல்லது. ரத்தத்தில் பரவும் நோய்கள், ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இன்பெக்ஷன் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது.
வழிபாடு
முருகர் வழிபாடு உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். சுப்பிரமணி புஜங்கம் கேட்பது ஆச்சரியமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும். பழைய கடன்கள் அனைத்தும் தீரும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். பழைய கடன்களை அடைக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். பெற்றோர்களுக்கு ஏற்றம் ஏற்படும். அவர்கள் உங்களைத் தாங்கி நின்று, உங்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுப்பார்கள்.
பதவி உயர்வு
ஊர், உலகத்தால் போற்றப்படுவீர்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். படிப்பு விஷயத்தில் இருந்து வந்த தடைகள் எல்லாம் பனிபோல விலகும். பெரிய அளவுக்கு பதவி உயர்வு கிடைக்கும். நல்ல யோக பலன்கள் கிடைக்கும். கணவன், மனைவிக்கு ஜென்மத்தில் கேது, 7 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் கோளார் பதிகத்தை கேட்டுக் கொண்டே இருப்பது நல்லது.
சிந்தனையில் தெளிவு
மற்றவர்கள் மேல் உள்ள கோபத்தை உங்கள் துணையின் மேல் காட்டாமல் இருப்பது நல்லது. காதல் அமைப்பிலும் கோபத்தை தவிர்ப்பது நல்லது. வேண்டியவை எல்லாம் நடக்கும் காலகட்டம். உங்கள் மேல் நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். அதிர்ஷ்டம் செய்தவர்கள் சிம்ம ராசியினர். இல்லாததை நினைத்து கவலைப்படாமல் இருப்பது நல்லது. சிந்தனையை தெளிவாக வைத்துக் கொள்வது நல்லது.












Click it and Unblock the Notifications