Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. பொறுமை முக்கியம் குமாரு
வார ராசி பலன்: ஆகஸ்ட் 25 முதல் 31 ஆம் தேதி வரையிலான ஆவணி 9 முதல் ஆவணி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு
அந்த வகையில், ஆகஸ்ட் 25 முதல் 31 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இந்த ஆவணி மாதத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். 24 வயதைக் கடந்தவர்கள் அனைவரும் பாதம், முதுகுவலி, மன அழுத்தம், மன குழப்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அக்கறையாக இருக்க வேண்டும். நண்பர்கள், உறவினர்கள், நல்ல வாழ்க்கை என எல்லாமே இருந்தாலும் எதுவுமே இல்லை என்பது போன்ற மனக் குழப்பத்தில் இருப்பதை தவிர்ப்பது நல்லது.
வேலையில் கவனம்
வேலை விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சூரியன் ராசியிலேயே இருப்பதால் மேலதிகாரிகள், உடன் வேலை செய்பவர்கள் தேவையில்லாத குழப்பத்தை, பதற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. வேலை, உத்தியோகம், வியாபார அபிவிருத்தி என அனைத்து நல்ல விஷயங்களும் படிப்படியாக நடக்கும்.
வாக்குவாதம் வேண்டாம்
ஆவணங்களில் கையெழுத்து போடுவதற்கு முன்பு ஒருமுறைக்கு, இருமுறை படித்து விட்டு போடுவது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம், பயணங்கள் செய்யும்போது மற்றவர்களிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. சட்டத்திற்குப் புறம்பானவர்களிடம் தொடர்பு வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இழுபறியாக இருந்த விஷயங்களை, பிரச்சனைகளை பொறுமையாக பேசி தீர்த்துக் கொள்வது நல்லது.
பொறுமை
பெரிய அளவில் முதலீடு செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. அனைத்து விதமான அஷ்டலட்சுமி கடாட்சமும் உங்களுக்கு கிடைக்கும். ஆவணி மாதத்திலேயே எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்று அவசரப்படாமல் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் கைகூடும் காலகட்டம்.
அனுகூலம்
உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பு தொடர்பான விஷயங்களில் நல்லவை நடக்கும் நேரம். பெரிய நம்பிக்கையும், சந்தோஷமும் ஏற்படும் அற்புதமான நேரம். பொறுமையைக் கடைப்பிடிப்பது, எல்லா விஷயங்களிலும் நிதானத்தைக் கடைப்பிடித்து செயல்படுவதும் நன்மை பயக்கும். பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.


Click it and Unblock the Notifications
