Rasi Palan This Week: சிம்ம ராசியினருக்கு புதிய நபர்களால் வரும் ஆபத்து.. வேலையில் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: அம்மனுக்குரிய மாதமான இந்த ஆடி மாதத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு விஷேசமான மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

அந்த வகையில், ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். ஏற்றம், அனுகூலம், மகிழ்ச்சியும் கிடைக்கும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் அடுத்தடுத்து வரும். இதுவரை இழுபறியாக இருந்த நிலைமைகள் அனைத்தும் படிப்படியாக மாறும். வண்டி, வாகனங்களில் இருக்கும் பழுதுகளை நீக்குவீர்கள். விரையங்கள் அதிகம் ஏற்படும் காலகட்டம் என்பதால் விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
எச்சரிக்கை
பங்குச் சந்தை விஷயங்களில் முதலீடு செய்யும்போது எச்சரிக்கை தேவை. நிலம் வாங்க வேண்டும் என்று விரும்புபவர்கள் ஆவணங்களை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்வது நல்லது. லாபமும், மகிழ்ச்சியும் ஏற்படும் காலகட்டம். உத்தியோகத்தில் சிக்கல்கள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. மன சஞ்சலம் ஏற்படும். போட்டி மனப்பான்மை, ஈகோ வருவதற்கான வாய்ப்புள்ளது.
கோபம் வேண்டாம்
மற்றவர்களைப் பற்றி தேவையில்லாதவற்றை பேசுவது, வருத்தப்படுவது, கோபப்படுவது தனிமையை ஏற்படுத்தும். எல்லா விதத்திலும் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் தேவையில்லாத குழப்பங்கள் காணப்படும். உறவுகள் விஷயத்தில், முதலீடுகளுக்கு குறைவிருக்காது. எடுத்த முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெறும் யோகம் உண்டு.
புதிய அறிமுகத்தில் கவனம்
புதிய அறிமுகத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக இருந்த பாதிப்புகளை நீக்குவதற்கான பாதிப்புகளில் வெற்றி பெறுவீர்கள். மேலதிகாரிகள், முதலாளிகளிடத்தில் மனம் விட்டுப் பேசுவது நல்லது. சிம்ம ராசியினருக்கு உத்தியோகம், வியாபாரம், தொழிலில் சிறு சிறு தடைகள் ஏற்படும். வேற்று மொழி மனிதர்களால் அதிக அளவில் ஆதாயம் கிடைக்கும்.
குடும்பம்
பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்வதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். அவர்கள் மீது நம்பிக்கை ஏற்படும். கணவன், மனைவி இருவரும் வாக்குவாதத்தை தவிர்த்து சமாதான உடன்படிக்கை செய்து கொள்வது நல்லது. இல்லையெனில் தேவையில்லாத சங்கடங்கள் ஏற்படும். குடும்பத்தில் அந்நியர் தலையீடு, மற்றவர்கள் குடும்பத்தில் நீங்கள் தலையிடுவதையோ தவிர்ப்பது நல்லது.
வழிபாடு
நவக்கிரகத்தில் இருக்கும் குரு பகவானை வியாழக்கிழமை தோறும் வழிபடுவது தன்னம்பிக்கையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். நெய் விளக்கேற்றி சுவாமி வழிபாடு செய்வது நல்லது.












Click it and Unblock the Notifications