This Week Rasi Palan: சிம்ம ராசிக்கு ஆபத்து காத்திருக்கு.. அதிர்ஷ்டம் இருக்குமா?
வார ராசி பலன்: செப்டம்பர் 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. இந்த வாரத்தில் செப்டம்பர் 22 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. செப்டம்பர் 22, புரட்டாசி 6 முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரைக்கு வழிபாடு செய்யப்படும். அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி வரை நவராத்திரி விசேஷம் நடைபெறும். செப்டம்பர் 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்படுவது, கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். வண்டி, வாகனங்களில் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது சாகசம் செய்வதை தவிர்ப்பது நல்லது. ஆவேசப்பட்டு பேசுவது, கோபப்படுவது, மன அழுத்தத்துடன் இருப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
பணவரவு
துணை, காதலன் காதலி உறுதுணையா இருக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். எதிர்பார்த்த பண வரவுகள் உண்டாகும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளை எல்லாம் நிவர்த்தி செய்வீர்கள். தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்ற விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதன் மூலம் நல்ல நம்பிக்கையும் உண்டாகும். லாபத்தின் அளவு பன்மடங்காக உயரும்.
தொழிலில் முன்னேற்றம்
குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும் அமைப்பு உண்டு. மகிழ்ச்சி பெருகும். எல்லா விதத்திலும் ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். தொழிலில் இருந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். மனதில் இருந்த பாரம் குறையும். பூமி சம்பந்தப்பட்ட, தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுகூலம் காணப்படும். பெற்றோர், பெரியோர் விஷயங்களில் ஏற்றமும், அனுகூலமும் ஏற்படும்.
அனுகூலம்
பெரியவர்களின் அனுகூலத்தால் அனுசரணையாக வாழக்கூடிய அமைப்பு ஏற்படும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் படிப்படியாகக் குறையும். வார்த்தைகளில் மட்டும் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. என்ன பேசினாலும் நிதானமாக யோசித்து பேசுவது நல்லது. உங்கள் முகமே உங்களின் கோபத்தைக் காட்டிக் கொடுக்கும் என்பதால் எல்லோரிடமும் இணக்கமாகவும், பொறுமையாகவும் செல்வது நல்லது.
வழிபாடு
ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நன்மை பயக்கும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்சனைகள், சளி தொந்தரவுகள், பல் பிரச்சனைகளில் அதீத கவனமாக இருக்க வேண்டும். சனிக்கிழமை நாட்களில் தேவி வழிபாடு செய்வது குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications