Rasi Palan This Week: தடைகளை தகர்த்தெறியும் சிம்ம ராசி.. அதிர்ஷ்டம் கொட்டும்.. என்ஜாய்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான ஆவணி 16 முதல் ஆவணி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Weekly rasi palan Simmam Lucky zodiac signs

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.

அந்த வகையில், செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்கள் இந்த வாரம் அதிகளவு நற்பலன்கள் கிடைக்கும். உத்யோகம், தொழிலில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். உத்யோகம், தொழில், வியாபாரம், கல்வி தொடர்பாக எடுக்கும் அனைத்து முடிவுகளிலும் வெற்றி கிடைக்கும். தொழிலில் நீண்ட காலமாக திட்டமிட்ட முயற்சிகளை செய்வதற்கான காலகட்டம் இது. மனதில் இருந்த தடைகள் நீங்கும்.

தடைகள் தவிடு பொடியாகும்

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நீண்ட காலமாக திட்டமிட்ட பயணங்கள் நிறைவேறும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தடைகள் தவிடு பொடியாகும் காலம். பெற்றோர், பெரியோர் சொற்கள் படி நடப்பது நல்ல பலன்களை கொடுக்கும். அடுத்தடுத்து சுப காரியங்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வியில் ஏற்றம் காணப்படும்.

எச்சரிக்கை

யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். அரசியல் புள்ளிகள், அரசு பணியில் இருப்போர் அதிகளவு மன குழப்பங்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. உத்யோக மாற்றம் குறித்து இந்த காலத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது நல்லது. இருக்கிற உத்யோகத்தை தக்க வைத்து கொள்வது புத்திசாலித்தனம். வண்டி, வாகனத்தில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

பரிகாரம்

அஷ்டம சனி இருப்பதால் மனதில் எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். அதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். எதிலும் கோபத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் வேண்டாம். குழந்தைகள் விஷயத்திலும் அதிக கவனம் வேண்டும். உடற்பயிற்சிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுங்கள். சட்ட விரோத செயல்பாடுகள் உள்ளோரிடம் விலகியே இருங்கள். உங்கள் வீடு அருகே உள்ள விநாயகர் மற்றும் ஆஞ்சிநேயர் வழிபாடு ஏற்றத்தை கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+