Solar Eclipse 2026: சூரியகிரகணம் இந்தியாவில் தெரியுமா?.. பரிகாரம் செய்ய வேண்டிய ராசியினர் யார்?
Solar Eclipse 2026: 2026 ஆம் ஆண்டில் முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி 17 ஆம் தேதி அமாவாசை தினமான இன்று நடைபெறவுள்ளது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியுமா, சூரிய கிரகணம் தெரியக்கூடிய நேரம், பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள், கிரக நிலைகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம் (Suriya grahanam).
ரிங் ஆஃப் ஃபயர் [Ring of fire]
ஜோதிடத்தில் கிரகண நிகழ்வானது மிகவும் முக்கியத்துவமானதாக கருதப்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.இந்த கிரகணம் ஒரு வளைய சூரிய கிரகணமாகும். சூரியனின் மையப் பகுதி மட்டும் நிழல் பகுதியில் வரும் வகையில் சந்திரன் சூரியனை மறைப்பதால் சூரியன் ஒரு வளையல் போன்று தோன்றும். இது ரிங் ஆஃப் ஃபயர் என்று அழைக்கப்படுகிறது.

சூரிய கிரகணம் [surya grahan 2026]
பிப்ரவரி 17 ஆம் தேதி அமாவாசை தினமான இன்று இந்த வருடத்தினுடைய முதல் சூரிய கிரகணம் நடைபெறுகிறது. இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தெரியாது. அண்டார்டிகா பகுதிகளிலேயே இந்த கிரகணம் தெரியும். இந்த நேரத்தில் சூரியனை சுற்றி ஒரு சிவப்பு வளையம் தென்படும். இந்த மாதிரியான கிரகணங்கள் எப்போதாவது தான் நிகழும்.
சூரிய கிரகணம் தெரியும் நேரம்
பிப்ரவரி 17 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மேல் ரிங் ஆஃப் ஃபயர் என்று சொல்லக்கூடிய சூரியன், சந்திரன் ஆகியோர் நேர்க்கோட்டில் உள்ளனர். 2 நிமிடம் 21 நொடிகளுக்கு இந்த கிரகணம் நிகழுகிறது. இதில், சூரியனின் தாக்கம் பெரும் நெருப்பு பிழம்பாக சந்திரனை சுற்றி இருக்கும். இது மிகவும் அரிய நிகழ்வாகும். 30 வருடத்திற்கு ஒருமுறை தான் கும்பத்திற்கு சனி பகவான் வருகிறார்.
கிரக நிலைகள்
சூரியனோடு சனி சேர்கிறார் என்றாலே 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் இந்த சேர்க்கை கும்பத்தில் நடக்கும். ராகு 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் ஒரு ராசியில் இருக்கிறார். குரு பகவானுக்கு 12 வருடமாகும். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இணையக்கூடிய இந்த ராகு, சனி ஆகிய கிரகங்கள் சூரியனின் நேர்க்கோட்டில் வருகின்றன.
போதாயன அமாவாசை
ஜோதிட ரீதியாக கும்ப மாதத்தில் சூரியன் ராகுவோடு சேர்ந்திருக்கிறார். சூரியனும் சந்திரனும் நேற்று நேர்க்கோட்டில் இணைந்துள்ளனர். நேற்று மாலை சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு சந்திரன் நுழைந்துள்ளதால் இது போதாயன அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. 17 ஆம் தேதி இரவு வரை அமாவாசை திதி உள்ளது. இந்தியாவில் இந்த கிரகணம் தெரியவில்லை என்பதால் இன்றைய தினம் முன்னோர்களுக்கு திதி கொடுக்கப்படுவதில்லை.
பாதிப்புகள் ஏற்படுமா
இந்த சூரிய கிரகண காலத்தில் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. இருப்பினும் வானத்தில் நிகழக்கூடிய இந்த நிகழ்வால் கிரகணங்களின் கதிர்கள் இந்தியாவில் விழவில்லை என்றாலும், இன்றைய தினம் பிறக்கக்கூடிய குழந்தைகள்
இன்றை தினம் கிரக அமைப்பானது, சூரியன், சந்திரன், ராகு, புதன், சுக்கிரன் ஆகிய 5 கிரகங்களும் கும்பத்தில் இணைந்துள்ளனர். திருக்கணித முறைப்படி சனி பகவான் மீனத்தில் உள்ளார். ஆனால், வாக்கியப்படி சனி பகவான் கும்பத்திலேயே சேர்ந்திருப்பதால் இன்று 6 கிரக சேர்க்கை ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள 3 கிரகங்கள் மட்டுமே வெளியில் உள்ளன. மகரத்தில் செவ்வாய், குரு மிதுனத்திலும், கேது பகவான் சிம்மத்திலும் உள்ளனர்.
நட்சத்திரக்காரர்கள் பரிகாரம்
திருக்கணித முறைப்படி 4 கிரகங்கள் வெளியில் உள்ளனர். மற்ற 5 கிரகங்களின் சேர்க்கை கும்ப ராசியில் இணைந்துள்ளது. நட்சத்திரக்காரர்கள் நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டும். கிரகண காலமான இன்று அமாவாசை முடிந்து, பிப்ரவரி 18 ஆம் தேதியான நாளை காலை சூரியன் உதயமான பிறகு கோதுமை தானம் செய்வது சிறந்தது. அனைத்து நட்சத்திரக்காரர்களும் இதனை செய்வது நன்மை பயக்கும். தானியத்தை மட்டுமே தானமாக கொடுக்க வேண்டும்.
எப்படி தானம் கொடுக்க வேண்டும்
பிள்ளையார் அல்லது சிவன் கோயிலுக்குச் சென்று அங்குள்ள நவக்கிரகத்துக்கு தீபமேற்ற வேண்டும். அங்கு பூஜை செய்பவர்களிடம் சங்கல்பம் செய்து, கோதுமை தானத்தைக் கொடுக்க வேண்டும். பின்னர், நட்சத்திரத்தை சொல்லி கிரகண தோஷ நிவர்த்தி செய்யலாம். இந்தியாவில் இந்த கிரகணம் தெரியாது என்பதால் இந்தப் பரிகாரத்தை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. இருப்பினும், ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இந்தப் பரிகாரத்தை செய்யலாம்.
பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்
கர்ப்பிணிப் பெண்கள் கண்டிப்பாக இந்தப் பரிகாரத்தை செய்ய வேண்டும். குறிப்பாக, கும்ப ராசியில் பிறந்தவர்கள் என்றால் கட்டாயம் செய்வது நல்லது. இதைத் தவிர சிம்மம், கும்பம், ரிஷபம், விருச்சிக ராசியினர் கோதுமை தானியத்தை தானமாக கொடுப்பது நல்லது. பிப்ரவரி 17 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மேல் ரிங் ஆஃப் ஃபயர் என்று சொல்லக்கூடிய சூரியன், சந்திரன் ஆகியோர் நேர்க்கோட்டில் உள்ளனர். இதில், சூரியனின் தாக்கம் பெரும் நெருப்பு பிழம்பாக சந்திரனை சுற்றி இருக்கும்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications