சுக்கிரன் பெயர்ச்சி 2025: பண மழையில் நனையப் போகும் கடக ராசி.. அடிச்சது ஜாக்பாட்
சென்னை: தை பிறந்தால் வழி பிறக்கும். நாளை தை மாதம் பிறக்க உள்ளது. அதைத் தொடர்ந்து வருகிற தை மாதம் 15 ஆம் தேதி (ஜனவரி 28) சுக்கிரன் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். மீனத்தில் சுக்கிரன் உச்ச பலம் அடையவுள்ளார்.
இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை பார்த்து வருகிறோம். இந்த தொகுப்பில் கடகம் ராசிக்கான பலன்களை பார்க்கவுள்ளோம்.

கடகம் ராசிக்கு சுக்கிரன் நான்காம் ஸ்தானத்துக்கு உரியவர். நான்கு என்பது சுக ஸ்தானத்தை குறிக்கும். இது லாபத்தையும் குறிக்கும். இந்நிலையில் சுக்கிரன் கடகத்துக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் அமரப் போகிறார். இதற்கு முன்பு சுக்கிரன் உங்களுக்கு எட்டாம் இடமான அஸ்டம ஸ்தானத்தில் இருந்தார்.
இது மறைவு ஸ்தானம் என்பதால் பெரியளவுக்கு நன்மைகள் ஏற்படவில்லை. கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு வந்திருக்கும். பணம் சார்ந்த விஷயத்தில் சில தொல்லைகள் இருந்தது. திருமணம் வாய்ப்பு கைக்கூடாமல் இருந்திருக்கும். இப்படி பல்வேறு பிரச்னைகளை அடுக்கிக் கொண்டே செல்லாம். அந்தப் பிரச்னைகள் எல்லாம் இனி மாறப் போகின்றன.
ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்துக்கு செல்வது நல்ல பலன்களை கொடுக்கும். அதுவும் திரிகோண நிலையில் சுப கிரகம் அமர்வது மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை தரும். உச்ச பலத்தில் அமர்ந்து மூன்றாம் இடத்தை பார்க்கிறார். இது முயற்சியை குறிக்கும். தைரியம், வீரியம் அதிகரிக்கும். எந்த முயற்சியையும் துணிந்து செய்வீர்கள். தன்னம்பிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.
கணவன் – மனைவி இடையே இருந்த பிரச்னைகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. ஏதாவது ஒரு ரூபத்தில் பணம் வந்து கொண்டே தான் இருக்கும். பாக்கியங்கள் அதிகளவில் தேடி வரும். ஒன்பதாம் இடம் தந்தைக்கும் அதிபதி. இந்த காலகட்டத்தில் தந்தை சார்ந்து இருந்த பிரச்னைகள் நீங்கும்.
தந்தையின் செல்வாக்கு உயரும். தந்தை வழியில் பல உதவிகள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நான்காம் இடமான சுக ஸ்தானம் வலுவடைய போகிறது. அதனால் சுகபோகமான வாழ்க்கை வாழ்வதற்கான அமைப்புகள் உருவாகும். நினைத்தபடி புதிய வாகனங்கள் வாங்குவதற்கான யோகம் கிடைக்கும். மாளவியா யோகம் பெறுவீர்கள். மனம் நிறைவடைவீர்கள்.
சுக்கிரன் – குரு பரிவர்த்தனையால் நல்ல பலன்கள் கிடைக்கும். நீண்ட கால கனவான சொந்த வீடு முயற்சி நிறைவேறும். சுக்கிரன் ராகுவுடன் இணைந்திருப்பதால் எதிர்பார்த்தபடி பிரம்மாண்டமாக வீடு கட்டுவீர்கள். வீட்டை புனரமைப்பதற்கான பணிகளும் செய்வீர்கள். உங்கள் தாயின் உடல்நலத்தில் முன்னேற்றம் இருக்கும். சுக பலன்கள் எல்லா வகையிலும் அதிகமாக வரும்.
காதல் அமைப்புகள் தேடி வரும். தொழிலில் லாபம் பல மடங்கு அதிகரிக்கும். வெளிநாட்டுக்கு செல்ல கூடிய பாக்கியம் உள்ளது. விசாவுக்கு காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். ஏற்றுமதி – இறக்குமதியில் நல்ல பலன்கள் கிடைக்கும். கலைத்துறையினர் நினைத்த காரியங்களை நிறைவேற்றி புகழ் அடைவார்கள். ஆன்மீக நாட்டம், பொது சேவை தொடர்பான ஆர்வம் அதிகரிக்கும்.
கடனை அடைப்பதற்கான வழிகள் உருவாகும். ஆண் – பெண் விவகாரத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆசை ஏதாவது விஷயத்தில் தூண்டி கொண்டே இருக்கும். இருப்பினும் அளவாக ஆசைப்பட்டு நிறைவாக வாழலாம். ஆசைகளை அதிகம் உருவாக்கினால் ஆபத்தும் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.












Click it and Unblock the Notifications