சுக்கிரன் பெயர்ச்சி 2025: ரிஷப ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பம்.. இதுல மட்டும் கவனமா இருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழ் மக்களின் நம்பிக்கை. தை பிறந்த சில நாட்களிலேயே சுக்கிரன் பெயர்ச்சி நடைபெற உள்ளது. சுக்கிரன் உச்சத்தில் இருந்தால் அதிர்ஷ்டம் கொட்டும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த தொகுப்பில் 2025 சுக்கிரன் பெயர்ச்சியில் ரிஷபம் ராசிக்கான பலன்களை காண உள்ளோம்.

சொசுகுசான வாழ்க்கை வாழ்வதற்கு சுக்கிரன் அமைப்பு முக்கியம். வீடு, வாகனம், ஆடம்பர பொருள்கள், திருமணம், ஜவுளி, உணவகம், விடுதி ஆகியவற்றுக்கு சுக்கிரன் தான் பிரதானம். வருகிற ஜனவரி 28 ஆம் தேதி சுக்கிரன் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். மீனம் ராசியில் உச்ச பலத்துடன் அமரப்போகிறார். குருவின் வீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் குருவும் பரிவர்த்தனை செய்கிறார்கள்.

Sukkiran Peyarchi Rishabam

ரிஷபம் ராசிக்கு சுக்கிரன் 10ஆம் இடத்தில் இருந்து 11 ஆம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கு ராகுவுடன் சுக்கிரன் உச்ச பலத்தில் அமர்கிறார். மேலும் குரு - சுக்கிரன் பரிவர்த்தனை சிறப்பான பலன்களை கொடுக்கும். ரிஷபத்துக்கு ராசி மற்றும் லக்ன அதிபதி சுக்கிரன்.

அதேபோல சுக்கிரன் ஆறாம் இடத்துக்கும் அதிபதி. பகை, நோய், கடன் ஆகியவற்றுக்கும் அந்த அமைப்பு காரணமாக உள்ளது. உங்கள் ராசிநாதனான சுக்கிரன் வலுப்பெறுவதால் உங்களின் செயல், சிந்தனையில் தெளிவு பிறக்கும். பெரிய லட்சியத்தை குறிவைத்து, அதை எளிமையாக அடைவதற்கான சூழலும் இந்த காலத்தில் உருவாகும்,

தைரியம் அதிகரிக்கும், மகிழ்ச்சி பொங்கும். தடைபட்ட ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். சமூகத்தில் உங்கள் மதிப்பு அந்தஸ்து உயரும். உங்களின் செயல்பாட்டுக்கு புகழ், பாராட்டு குவியும். கடன், நோய், எதிர்ப்பு, பகை, வம்பு, வழக்கு ஆகியவற்றில் சிக்கி தவித்தவர்கள் அதில் இருந்து விடுபடக் கூடிய காலமாக இருக்கும்.

இதுவரை எதிர்ப்பு தெரிவித்து, பகையாளியாக இருந்தவர்கள் உங்கள் நண்பர்களாக மாறுவார்கள். எதிர்ப்புகள் முற்றிலும் நீங்கும். கடனால் உங்களுக்கு இருந்த நெருக்கடி தவிடு பொடியாகி பொருளாதாரம் உயரும். உடல்நல பிரச்னையால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கும் நிவர்த்தி ஏற்பட்டு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும்.

நீண்ட காலமாக வாங்க நினைத்த வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. வாகனம் வாங்குவதற்கு இது மிகவும் சரியான காலம். உங்களின் நீண்ட நாள் கனவான சொந்த வீடு வாங்குவதற்கான முயற்சிகளும் வெற்றிகரமாக நிறைவேறும். வாடகை வீடு என்ற நிலை மாறி பிரம்மாண்ட வீட்டுக்கு அதிபதியாக மாறுவீர்கள்.

ஆடம்பர வாழ்க்கைக்கு எதிர்பார்த்த பொருள்கள் ஒவ்வொன்றாக வாங்குவீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். அந்த பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். காதல் உறவில் மகிழ்ச்சி ஏற்படும். காதல் உறவு திருமணத்தில் வெற்றிகரமாக முடியும். பொருளாதாரத்தில் எந்த குறையும் இருக்காது. உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு இருக்கும். வாய்ப்புகள் தேடி வரும்.

தொழிலில் முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த மாற்றங்களை செய்வீர்கள். பெண்கள் உற்பத்தி செய்ய கூடிய பொருள்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உணவு, விடுதி, அழகு சாதனம், ஜவுளி சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு நன்றாக இருக்கும். கலைத்துறையினருக்கு இந்த காலகட்டத்தில் புகழ், பெயரில் உச்சம் தொடுவீர்கள்.

புதிய வாய்ப்புகளால் எதிர்பாராத யோகம் கிடைக்கும். விளையாட்டுத்துறையிலும் பல்வேறு சாதனைகளை படைப்பார்கள். இருப்பவர்களுக்கு சொகுசு வாழ்க்கைக்கு எந்த குறைவும் இருக்காது. மனதில் இருந்த பாரங்கள் குறைந்து நிம்மதியான பலன்களை கொடுக்கும். நினைத்த காரியங்களில் சிறு தொய்வு கூட இல்லாமல் நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது.

இருப்பினும் ஆண் - பெண் உறவில் சற்று எச்சரிக்கையாக இருந்து கொள்வது நல்லது. இது பொது பலன்தான். இருப்பினும் உங்களின் ஜாதக அடிப்படையில் உங்களின் தசா புத்தி, கோச்சார கிரகங்களின் பலன்கள் ஆகியவற்றை பொறுத்து இதில் சின்ன சின்ன வேறுபாடுகள் இருக்கலாம். அதனால் முக்கிய முடிவுகள் எடுக்கும் முன்பு சுய ஜாதகத்தை பார்த்துக் கொள்வது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+