Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜாவா சுந்தரேஷனாக மாறும் சிம்மம்.. தொட்டதெல்லாம் தங்கம், பணம்.. சொத்துகளைக் குவிக்கப் போறீங்க

Subscribe to Oneindia Tamil

சுக்கிரன் பெயர்ச்சி: ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் யோக பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டில் ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சுக்கிரனே எல்லா மனித உயிர்களுக்கும் காதலுக்கு காரணமாக இருப்பவர். காதலின் கிரகமாக கருதப்படும் சுக்கிர பகவான் ஜூன் 28 ஆம் தேதி மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு செல்கிறார். பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார்.

sukkiran-peyarchi-simmam-rasi-people-get-lots-of-money-benifits-during-this-sukkiran-peyarchi

திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார். அதனால் அவரை களத்திர காரகன் என்றும் கூறுவார்கள். வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள். அந்த வகையில், இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிம்ம ராசி பலன்

மகம் 1, 2, 3, 4 நட்சத்திர பாதங்கள், பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டது சிம்ம ராசி. பொதுவாக ஆளுமைத் தன்மை கொண்டவர்களாக இருப்பீர்கள். அழகாகப் பேசுபவர்களாகவும், எந்த இடத்தில் எதைப் பேச வேண்டும் என யோசித்து வெற்றி பெறக் கூடியவர்களாக இருப்பார்கள். ஒரு விஷயத்தை நினைத்துவிட்டால் அதனை செயல்படுத்தாமல் விடமாட்டார்கள். மிகுந்த தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருப்பீர்கள்.

தொழில் ஸ்தானம்

உங்கள் ராசிக்கு சுக்கிரன் 3 க்கு உரியவர். முயற்சி, தைரியம், வீரிய ஸ்தானத்தின் அதிபதி. தொழில் ஸ்தானத்தின் அதிபதியும் சுக்கிரன் தான். தற்போது 10 ஆம் இடத்தில் தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பலத்தோடு வலிமையாக வந்து அமரப் போகிறார். 10 ஆம் அதிபதி வலும்பெறும்போது தொழில் நன்றாக அமையும். தொழில் மூலம் லாபங்களைப் பெறக்கூடிய தன்மை உண்டாகும்.

வெற்றி

தன் சொந்த முயற்சி, சொந்த அறிவால் தொழில், வியாபாரம், வேலையில் வெற்றி பெறும் காலகட்டமாக இருக்கும். தொழில் நல்ல மாற்றத்தை செய்வீர்கள். தொழில் விருக்தி உண்டாகும். நல்ல தொழிலாளர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். பட்டம், பதவி, புகழ் உண்டாகும் காலகட்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நல்ல விஷயங்கள் நடக்கும். தகப்பனுடைய தொழிலை எடுத்து நடத்தும் பிராப்தம் உண்டாகும். அவர் மூலம் அனுகூலம், ஆதாயத்தைப் பெறுவீர்கள்.

தன்னம்பிக்கை அதிகரிக்கும்

நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். தைரிய, வீரியத்துடன் செயல்படுவீர்கள். தன்னம்பிக்கை உணர்வு அதிகரிக்கும். மனதளவில் சில குழப்பங்கள் ஏற்படும். அஷ்டசனி நடந்து கொண்டிருக்கிறுத. ராசியில் கேது அமர்ந்திருப்பதால் குழப்ப நிலையை ஏற்படுத்தும். தொழிலில் திருப்தியில்லாத தன்மை உண்டாகும். அலைச்சல், டென்சன் உண்டாகும் காலகட்டமாக இருக்கும். குறிப்பாக மகம் நட்சத்திரத்தினருக்கு அழுத்தம் இருக்கும். வேலையை விட்டு விடாமல் வேறு வேலையை அமைத்துக் கொண்டு விடுவது நல்லது.

சொத்துகளால் அனுகூலம்

சுக்கிர பகவான் 4 ஆம் இடம் எனும் சுக ஸ்தானத்தை பார்க்கிறார். தாய் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். தாய் வழி சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகளை சுமூகமாக தீர்ப்பீர்கள். அந்த சொத்துகள் மூலமாக அனுகூலம், ஆதாயம் கிடைக்கும் யோகம் உண்டாகும். வீட்டு ஸ்தானத்தை சுக்கிரன் பார்ப்பதால் வீடு, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

வீடு, நிலம், வாகன யோகம்

நீங்கள் நினைத்த இடத்தில் வீடு, நிலத்தை வாங்குவீர்கள். வீடுகளை புனரமைப்பீர்கள். புதிய வீடு, கட்டிய வீடு, வீடு கட்டும் யோகம், வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய வாகனங்களை மாற்றும் யோகம் வரும். உங்களுக்குப் பிடித்த புதிய வாகனத்தை வாங்கி மகிழ்வீர்கள். கார் வாங்கும் யோகம் வரும்.

குழந்தை பாக்கியம்

காதல் காரகன் சுக்கிரன் வலிமை பெறுகிறது. குழந்தை ஸ்தானத்தை குரு பார்க்கிறார். நீண்ட நாட்களாக குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். புதிய உறவுகள், நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் பெருகும். தனது கணவர், தனது மனைவி என்று புரிந்துகொள்ளும் தன்மை உண்டாகும். பொதுநல எண்ணங்கள் உருவாகும். பெண்கள் சந்தோஷமாக இருக்கும் காலகட்டமாக இருக்கும்.

லாபம்

கடல் கடந்து பயணம் செய்யும் வாய்ப்புகள் உண்டாகும். தொழில் ரீதியாக ஒரு சிலர் வெளிநாடு, வெளிமாநிலம், அந்நிய தேசக்கு பிராயணம் செய்யும் வாய்ப்பு வரும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அழகு சார்ந்த விஷயங்கள், ஜவுளித் துறை அற்புதமான லாபத்தைக் காணக் கூடிய காலகட்டமாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+