Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ் புத்தாண்டு பலன்: தனுசு ராசிக்கு கொட்டிக் கொடுக்கும் குரு.. பணத்தில் நீச்சல் அடிக்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு பலன்: தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வரவுள்ளது. வரும் புத்தாண்டு புதுமைகளைத் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதுதான் அனைவருடைய ஆசையாகவும் இருக்கும். அந்த வகையில், தனுசு ராசிக்காரர்களுக்கு வரும் தமிழ் புத்தாண்டில் என்ன மாதிரியான நற்பலன்கள் கிடைக்கும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் துல்லியமாகப் பார்க்கலாம்.

தமிழ்ப் புத்தாண்டை ஏராளமான மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்தப் புத்தாண்டு மாற்றங்களைத் தரக் கூடியதாகவும், முன்னேற்றம் மிக்கதாவும் இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும். வருட கிரகங்கள் என்று சொல்லக்கூடிய குரு சனி ராகு கேதுவின் பெயர்ச்சியை வைத்துதான் இந்த புத்தாண்டு பலன்கள் கணிக்கப்படுகின்றன.

tamil-new-year-lets-take-a-look-at-the-good-benefits-and-yogas-that-dhanusu-sagittarius-people-w

புராதன காலகட்டத்தில் அப்போது வாழ்ந்த சித்தர்கள் எழுதி வைத்த பாடல்களைப் பொருத்துதான் அந்த வருடத்தின் முழு வெண்பாவும் அமையும் என்பதை பொதுப் பலன்கள் என்று கூறுவோம். அந்த அடிப்படையில் இந்த ஆண்டு விசுவாசுவ வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் இந்த வருடம் தொடங்குகிறது.

இந்த வருடத்தில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும். அதேபோல, இந்த ஆண்டு கண்டிப்பாக 12 ராசிக்காரர்களுக்கும் மகத்துவம் வாய்ந்த காலகட்டமாக இருக்கும். அந்த வகையில், தனுசு ராசியினருக்கு தமிழ்ப் புத்தாண்டில் கிடைக்கும் நல்ல பலன்கள், கிடைக்கக்கூடிய யோகங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களைப் பொருத்தவரை அர்த்தாஷ்டம சனி தொடங்கியுள்ளதால் பெரிதும் கலக்கத்தில் இருப்பீர்கள். அஷ்டம சனியின் பாதி தாக்கத்தை அனுபவிப்பார்கள். இருப்பினும் மே 11 ஆம் தேதி வரும் குருப்பெயர்ச்சியால் வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்தும். ராசிக்கு 6 ஆவது இடத்தில் இருந்த குரு 7 ஆம் இடத்துக்கு வரப்போகிறார்.

கடன் சுமைகள் தீரும்

6 இல் குரு இருந்தபோது இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் அனைத்தையும் சரிசெய்வீர்கள். பல கடன் சுமைகள், உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்ட நீங்கள் அதிலிருந்து விடுபடுவீர்கள். தொழில் நிலையாக செய்ய முடியவில்லை, முடிவை சரியாக எடுக்க முடியவில்லை என்று நினைப்பவர்களுக்கு எல்லாம் பொற்காலமாக இருக்கும். தெளிவான முடிவை எடுத்து அதில் வெற்றி காண்பீர்கள்.

இலக்கு

ராசியை குரு பார்ப்பதால் உடலில் இருந்த சோம்பல்கள் அனைத்தும் சரியாகும். ஒரு இலக்கை நிர்ணயித்தால் அதில் ஜெயிக்கக் கூடியவர்கள். ஆனால் முடிவை எடுப்பதற்குள் நிறைய தயக்கங்கள் ஏற்படும். இந்த வருடத்தில் இலக்கை நிர்ணயித்து வெற்றி காண்பீர்கள். 3 ஆவது இடத்தை குரு பார்ப்பதால் பிரிந்தவர்கள் எல்லாம் ஒன்றுகூடக் கூடிய காலகட்டமாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்து பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். விலகிய நண்பர்கள் இணையக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

சொத்து வாங்கும் யோகம்

4இல் அர்த்தாஷ்டமத்தில் இருந்த ராகு இருந்தவரை கடந்த 18 மாதமாக அம்மாவுக்கு ஆகாத காலகட்டமாக இருந்திருக்கும். இனி வீட்டில் குதூகலம், அமைதியும், நிம்மதியும் பெருகும். ஒன்றரை வருடமாக இருந்த சர்ப்ப மனை தோஷம் நீங்கப் போகிறது. வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். புதிய சொத்து வாங்கக்கூடிய அமைப்பு உண்டாகும். புதிய வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். புதிய தொழிலைத் தொடங்குவதற்கான அடித்தளத்தை அமைக்கும் காலகட்டமாக இருக்கும். அதில் வெற்றியையும் காண்பீர்கள்.

திருமண யோகம்

திருமண வாழ்க்கையை எதிர்பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக திருமண யோகம் உண்டாகும். 7 இல் குரு வருவதால் காதல் யோகம் உண்டாகும். காதல் திருமணம் நடக்கும். பிரிந்த காதலர்கள் ஒன்று சேரக்கூடிய காலகட்டமாக இருக்கும். கிரெடிட் கார்டு கடன்களில் சிக்கியவர்கள் மீண்டு வருவார்கள். தேவையில்லாத முதலீடுகளில் சிக்கியவர்கள் மீண்டு வருவார்கள். மரண பயம் உங்களை விட்டு நீங்கும்.

பண வரவு அதிகரிக்கும்

9 இல் கேது வருவதால் தந்தையின் உடல்நிலையில் கவனமாக இருப்பது நல்லது. 10 இல் இருந்த கேது விலகிச் செல்வதால் புதிய பட்டத்தையும், பதவிகளையும் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். பதவி உயர்வு, புதிய வேலைவாய்ப்பு உண்டாகும். தன வரவு நிறைவாக இருக்கும், லாப ஸ்தானத்தை குரு நேரடியாக பார்ப்பதால் பண வரவுகள் அபரிமிதமாக இருக்கும். தெய்வ வழிபாடு, தூரதேச பயணம் சாதகமான அமைப்பைத் தரும். வெளிநாடு சென்று செட்டிலாகும் யோகம் உண்டாகும்.

எச்சரிக்கை

வாகனத்தில் செல்லும்போது தனுசு ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகன விபத்து, வாகன பழுது ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தாயின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை. அம்மாவிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் விஷயங்களில் முக்கிய பொறுப்புகளை பிறரிடம் கொடுக்காமல் இருப்பது நல்லது.

பெண்கள், மாணவர்கள்

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கும். முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும். போட்டித் தேர்வுகள் எழுதுபவர்களுக்கு நல்ல வேலைகள் கிடைக்கும். பெண்களுக்கு பொற்காலமாக இருக்கும். துணிச்சலோடு பல முடிவுகளை எடுத்து அந்த முடிவுகளில் வெற்றிகளைக் காண்பீர்கள். ஆடை தொடர்பான தொழில் செய்பவர்கள், மேக் அப் ஆர்டிஸ்டுகளுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய கிளைகளைத் தொடங்கும் யோகம் உண்டாகும்.

மதிப்பெண்

தனுசு ராசிக்காரர்களுக்கு 100க்கு 90 சதவீதம் நல்ல அமைப்பாக இருக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரம்

சனி பகவானை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். நல்லெண்ணெய் ஊற்றி வழிபடுவது மிகவும் நல்லது. ஒன்பது நவக்கிரகத்துக்கு அகல் தீபம் ஏற்றுவது, எள் தானம் அளிப்பது நல்லது. சனி பகவானுக்கு கருப்பு வஸ்திரம் தானமாக அளிக்கலாம். சனிக்கிழமைகளில் இந்த வழிபாடுகளை மேற்கொள்வது நல்ல பலன்களைத் தரும். சிவபெருமான் ஆலயங்களில் வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும்.

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+