Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு சொந்த வீடு, தொழிலில் முன்னேற்றம்.. அதிர்ஷ்டத்தை அள்ளும் நேரம்

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு பலன்: தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வரவுள்ளது. வரும் புத்தாண்டு புதுமைகளைத் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதுதான் அனைவருடைய ஆசையாகவும் இருக்கும். அந்த வகையில், கன்னி ராசிக்காரர்களுக்கு வரும் தமிழ் புத்தாண்டில் என்ன மாதிரியான நற்பலன்கள் கிடைக்கும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் துல்லியமாகப் பார்க்கலாம்.

தமிழ்ப் புத்தாண்டை ஏராளமான மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்தப் புத்தாண்டு மாற்றங்களைத் தரக் கூடியதாகவும், முன்னேற்றம் மிக்கதாகவும் இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும். வருட கிரகங்கள் என்று சொல்லக்கூடிய குரு, சனி, ராகு கேதுவின் பெயர்ச்சியை வைத்துதான் இந்த புத்தாண்டு பலன்கள் கணிக்கப்படுகின்றன.

tamil-new-year-lets-take-a-look-at-the-good-benefits-and-yogas-that-kanni-virgo-people-will-get

புராதன காலகட்டத்தில் அப்போது வாழ்ந்த சித்தர்கள் எழுதி வைத்த பாடல்களைப் பொருத்துதான் அந்த வருடத்தின் முழு வெண்பாவும் அமையும் என்பதை பொதுப் பலன்கள் என்று கூறுவோம். அந்த அடிப்படையில் இந்த ஆண்டு விசுவாசுவ வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் இந்த வருடம் தொடங்குகிறது.

இந்த வருடத்தில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும். அதேபோல, இந்த ஆண்டு கண்டிப்பாக 12 ராசிக்காரர்களுக்கும் மகத்துவம் வாய்ந்த காலகட்டமாக இருக்கும். அந்த வகையில், கன்னி ராசியினருக்கு தமிழ்ப் புத்தாண்டில் கிடைக்கும் நல்ல பலன்கள், கிடைக்கக்கூடிய யோகங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கன்னி ராசி பலன்

கன்னி: கன்னி ராசிக்காரர்கள் சுதந்திரப் பறவையாக மாறப் போகிறார்கள். கடந்த ஒன்றரை ஆண்டாக மன இறுக்கத்தோடு இருந்திருப்பார்கள். அதீத அன்பால் பிரிவு, காதல் தோல்வி, கணவன் மனைவிக்குள் சண்டை போன்ற பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள். அன்பால் பாதிக்கப்பட்ட உங்களுக்கு அனுகூலத்தை தரும் காலகட்டமாக இருக்கும். தூக்கமின்மையால் பாதிக்கப்படுவர்களுக்கு நன்றாக தூக்கம் வரும். மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மனதில் தெளிவு ஏற்படும்.

வேலையில் மாற்றம்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் கட்டாய மாற்றம் உண்டாகும். புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வெளிமாநிலத்திற்குப் போகும் வாய்ப்புள்ளது. வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வீர்கள், குரு குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்ப வாழ்க்கையில் இருந்து வந்த பல்வேறு சிக்கல்கல் தீரும். குடும்பமே இல்லை என்று தவித்து வந்தவர்களுக்கு குடும்ப அமைப்பு உண்டாகும்.

பண வரவு

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முதலீடு செய்வதற்கான யோகம் உண்டாகும். இனி புண்ணிய செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். வீடு வாங்குவது, இடம் வாங்குவது, நிலம் வாங்குவது, வீடு கட்டுவது போன்றவற்றை செய்வதற்கான யோகம் உண்டாகும். 4 ஆம் இடத்தை குரு நேரடியாக பார்ப்பதால் இந்த புத்தாண்டில் கண்டிப்பாக புதிய சொத்துகளை வாங்கும் யோகம் உண்டாகும்.

தொழில்

தொழில்களைத் தொடங்குவதற்கான யோகம் உண்டு. கனவு இல்லத்தை கட்டி முடிப்பீர்கள். அம்மாவின் மருத்துவச் செலவுகள் எல்லாம் தீரும். அம்மா வழி சார்ந்த உறவுகளில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். கண்டகச் சனி எனும் 7 இல் சனி வருவதால் காம எண்ணத்தை அதிகரிக்கும். காதல் களத்திரம் காமம் ஸ்தானம் 7. காதல் வயப்படக்கூடிய சூழல் உண்டாகும். உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவது நல்லது. இல்லையெனில் தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

கவனம்

புதிய அறிமுகங்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. யாரையும் நம்பி ஏமாறாமல் இருப்பது நல்லது. ராகு கேது விலகுவது பெரிய பலத்தை ஏற்படுத்தி தரும். நாக தோஷம் விலகுவதால் திருமணம், வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கண்டகச் சனி என்பதால் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. இல்லறத்தில் இருந்து வந்த சுணக்கங்கள் மாறும். பூர்வீகத்தில் குடிபெயர நினைப்பவர்களுக்கு சாதகமான காலகட்டம்.

எச்சரிக்கை

10 இல் குரு வருவதால் பணம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. ஏமாறுவதற்கான வாய்ப்பு, நஷ்டத்தை சந்திக்கும் வாய்ப்புள்ளது. உயரதிகாரிளிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். விட்டுக் கொடுத்து போவது நல்லது. வேலையில் மிகுந்த எச்சரிக்கை தேவை.

தெய்வ அனுக்கிரகம்

12 இல் கேது வருவதால் தெய்வாம்சம் உண்டாகும். வீட்டுக்குள் தெய்வ நடமாட்டம் உண்டாகும். தன்னைத் தானே சித்தர்களாக நினைப்பார்கள். சித்தர்கள் வழிபாட்டை மேற்கொள்வார்கள். வாழ்க்கை குறித்த அனைத்து புரிதல்களையும் உண்டாக்கும் காலகட்டமாக இருக்கும். வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கான வாய்ப்பு உண்டாகும்.

பெண்கள், மாணவர்கள்

ராகு கேது விலகுவது நல்ல பலன்களைத் தரும். பெண் பிள்ளைகளுக்கு உடல் உபாதைகள் அனைத்தும் தீரும். ஹார்மோன் இம்பேலன்ஸ் சரியாகும். மனப் பதட்டம், மன அழுத்தம் விலகும். தொழில் ஸ்தானத்தில் குரு பார்ப்பதால் புதிய தொழில் தொடங்கும் காலகட்டமாக இருக்கும். கணவனை வழிநடத்தி வெற்றி கொடி நாட்டுவீர்கள். சிக்கல்கள் அனைத்தும் மாறி ஜாக்பாட் யோகம் உண்டாகும். மாணவர்களைப் பொருத்தவரை படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டுக்குச் சென்று படிக்கும் யோகம் உண்டு

மதிப்பெண்

கன்னி ராசிக்காரர்களுக்கு ஜென்ம கேது விலகுவதால் 100க்கு 80 சதவீதம் நற்பலன்கள் கிடைக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரம்

அஷ்டமியில் பைரவ வழிபாடு நல்ல பலன்களைத் தரும். துளசி மாலை பெருமாளுக்கு சாற்றுவது, அர்ச்சனை செய்து அதிர்ஷ்டத்தை தரும். வீட்டில் பூஜைக்குப் பின்னர் துளசி தீர்த்தம் குடிப்பது நல்லது.

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+