தமிழ் புத்தாண்டு பலன்: ரிஷப ராசிக்கு மிகப்பெரிய ஜாக்பாட்.. எல்லா பிரச்சனையும் முடிஞ்சுது

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு பலன்: தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வரவுள்ளது. வரும் புத்தாண்டு புதுமைகளைத் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதுதான் அனைவருடைய ஆசையாகவும் இருக்கும். அந்த வகையில், ரிஷப ராசிக்காரர்களுக்கு வரும் தமிழ் புத்தாண்டில் என்ன மாதிரியான நற்பலன்கள் கிடைக்கும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் துல்லியமாகப் பார்க்கலாம்.

தமிழ்ப் புத்தாண்டை ஏராளமான மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்தப் புத்தாண்டு மாற்றங்களைத் தரக் கூடியதாகவும், முன்னேற்றம் மிக்கதாகவும் இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும். வருட கிரகங்கள் என்று சொல்லக்கூடிய குரு சனி ராகு கேதுவின் பெயர்ச்சியை வைத்துதான் இந்த புத்தாண்டு பலன்கள் கணிக்கப்படுகின்றன.

tamil-new-year-lets-take-a-look-at-the-good-benefits-and-yogas-that-rishabam-taurus-people-will

புராதன காலகட்டத்தில் அப்போது வாழ்ந்த சித்தர்கள் எழுதி வைத்த பாடல்களைப் பொருத்துதான் அந்த வருடத்தின் முழு வெண்பாவும் அமையும் என்பதை பொதுப் பலன்கள் என்று கூறுவோம். அந்த அடிப்படையில் இந்த ஆண்டு விசுவாசுவ வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் இந்த வருடம் தொடங்குகிறது.

இந்த வருடத்தில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும். அதேபோல, இந்த ஆண்டு கண்டிப்பாக 12 ராசிக்காரர்களுக்கும் மகத்துவம் வாய்ந்த காலகட்டமாக இருக்கும். அந்த வகையில், ரிஷப ராசியினருக்கு தமிழ்ப் புத்தாண்டில் கிடைக்கும் நல்ல பலன்கள், கிடைக்கக்கூடிய யோகங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரிஷப ராசி பலன்

ரிஷபம்: இந்த தமிழ் புத்தாண்டில் மிகப்பெரிய நல்ல பலன்களைப் பெறுபவர்களில் ரிஷப ராசியினரும் ஒருவர். குறிப்பாக உங்களுக்கு ஜென்ம குரு விலகுகிறது. லாப ஸ்தானத்தில் சனி பகவான் வருகிறார். 5 இல் இருந்து கேது பெயர்ச்சியாகிறார். மிகப்பெரிய மாற்றங்கள் உண்டாகும். பத்தில் ஒரு பாவி இருப்பது அரசாளக் கூடிய யோகம் உண்டாகும். எனவே, இந்த புத்தாண்டில் பட்டம், பதவி, பெயர், புகழ் உண்டாகும்.

ஜென்ம குருவில் சிக்கி மன இறுக்கத்தில் வாழ்ந்து வந்திருப்பீர்கள். கடந்த இரண்டரை வருடங்களாக பல கஷ்டங்களை அனுபவித்து வந்திருப்பீர்கள். இனி தெளிவான முடிவெடுத்து பல விஷயங்களை சாதிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். 2 இல் குரு வந்திருப்பது குடும்பம், வாக்கு, தனம், கல்வி, பொருளாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும்.

பணம், தொழில்

பணத்தை சேமிக்கவே முடியவில்லை என்று நினைத்தவர்கள் அபரிமிதமாக சேமிக்கக்கூடிய யோகம் உண்டாகும். வீடு கட்டக்கூடிய பிராப்தம் உண்டு. வண்டி, வாகனங்களை மாற்றக்கூடிய வாய்ப்புள்ளது. கண்டிப்பாக இந்த வருடத்தில் இடமாற்றம் உண்டாகும். தொழிலில் நல்ல மாற்றம் வரும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளுக்கு இருந்து வந்த உடல்நலப் பிரச்சனைகள், கல்வியில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். திருமண யோகம் கூடிவரும்.

வேலைவாய்ப்பு

நேரடியாக 8 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் வழக்கு சாதகமாக முடியும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும். படிப்படியாக அதில் இருந்து வெளியில் வருவீர்கள். 10 இல் விலகக்கூடிய சனி, 10 ஆம் இடத்தில் வரும் ராகு மிகப்பெரிய பொறுப்பை உண்டாக்கி தரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு, இடமாற்றம், சேமிக்கும் யோகம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவும் அளவுக்கு உங்களுக்கு பண வரவு உண்டாகும்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயம்

வாகனப் போக்குவரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விபத்துகள் ஏற்படக்கூடிய காலகட்டமாக இருக்கும். வாகனங்களில் பழுது ஏற்படும் வாய்ப்புள்ளது. எதாவதொரு விபத்து, பழுதுகள் ஏற்படும். தாய் விஷயத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. இதில் மட்டும் கவனமாக இருந்தால் போதும் மற்ற அனைத்தும் அமோகமாக நடக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் யோகம் ஏற்படும்.

கலை நயம் சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு ஈடுபாடு அதிகமாக இருக்கும். பங்குச் சந்தை சார்ந்த முதலீடு விஷயங்களில் ஈடுபடுவது வெற்றியைத்தரும். கலைத் துறை, பேஷன் டிசைனர், மேக் அப் ஆர்டிஸ்ட், சினிமா துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும்.

மதிப்பெண்

100க்கு 98 சதவீதம் நல்ல பலன்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். குரு சனி ராகு ஆகியவற்றின் வலிமையால் நன்மை உண்டாகும். தொழிலில் சிறிய சிறிய முடிவுகளை சரியாக எடுப்பது நல்லது

பெண்கள், மாணவர்கள்

பெண்களுக்கு மகத்துவம் நிறைந்த ஆண்டாக இருக்கும். தொழில் செய்யும் பெண்களுக்கு அமோகமான காலகட்டமாக இருக்கும். நல்ல லாபம் முன்னேற்றம் ஏற்படும். திருமணத் தடைகள் அனைத்தும் நீங்கும். மறுமண யோகம் உண்டு. மனதுக்குப் பிடித்த வரன்கள் அமையும்.

வழிபாடு, பரிகாரம்

வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மன் கோயில்களுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, மஞ்சள் குங்குமம், வெத்தலை பாக்கு, மஞ்சள், சில்லறை காசுகள் போன்றவற்றை தானமாக அளிப்பது நல்ல மாற்றத்தை உண்டாக்கும். பெண் தெய்வ வழிபாடு நல்ல பலன்களைத் தரும். அம்மனுக்கு பஞ்ச தீபம் ஏற்றுவது அமோகமான பலன்களைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+