Tamil Puthandu Palan: கடக ராசிக்கு வரப்போகும் யோகம்?.. 2026 தமிழ் புத்தாண்டு பலன் முழு விவரம்!
தமிழ் புத்தாண்டு பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. தமிழ் புத்தாண்டு முன்னிட்டு அனைவரும் தங்களின் வரவிருக்கும் ஆண்டின் பலன்களை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள். அந்த வகையில், இந்த ஆண்டு கடகம் ராசியினர் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நடக்கும்? தொழில், பணம், உடல்நலம், குடும்பம், காதல், திருமணம் போன்ற முக்கிய அம்சங்களில் ஏற்படும் முன்னேற்றம், சவால்கள் குறித்தது இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி காலை 8.42 மணிக்கு சதயம் நட்சத்திரத்தில் தமிழ் புத்தாண்டு (சித்திரை 1) பிறக்கிறது. கடகத்தில் சூரியன் வரக்கூடிய நாளே சித்திரை 1 ஆம் நாள். விசுவாவசு ஆண்டு நிறைவடைந்து பராபவ ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த ஆண்டில் 12 ராசிகளுக்கும் கிரக நிலைகளின் அடிப்படையில் பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு கடகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

கடகம் ராசி பலன் (Kadagam Rasi Palan)
கடகம் ராசியினருக்கு 2 இல் கேது, 8 இல் ராகு இருப்பதால் மன அழுத்தம் ஏற்படும். வயிறில் தொந்தரவு, அசிடிட்டி, கழிவுப் பாதையில் பிரச்சனை போன்றவை வருவதற்காக வாய்ப்புள்ளது ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வயிறு தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டால் உரிய மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. சரியான நேரத்தில் பூச்சி மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அனுகூலம்
சனி அஷ்டமத்தில் இருந்து விலகி இருக்கிறது. ராகு 8 இல் இருப்பது திடீர் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். ஏப்ரல் 14 ஆம் தேதியில் இருந்து நன்மைகள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். நல்ல பொறுப்புகளுக்கு வரக்கூடிய அமைப்பு உள்ளது. பெரிய பொறுப்புகள், அதிகாரம் கிடைக்கும். ஏற்றம் ஏற்படும் காலகட்டம். உத்தியோகத்தில் அனுகூலம் காணப்படும்.
கவனம்
பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றங்கள் ஏற்படும். பிள்ளைகளுககு திருமண யோகம் உண்டாகும். அவர்களின் படிப்பு, தொழிலில் ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் புதிய வரவுகள் உண்டாகும். இடமாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம், மனை மாற்றம் ஏற்படும். முதுகு தண்டுவடத்தில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. அமரும்போது, படிக்கட்டுகளில் செல்லும்போது, குளிக்கும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கழிவுப் பாதையில் கவனம் தேவை.
ஆரோக்கியம்
நிறைய தண்ணீர் குடிப்பது நன்மை. மன அழுத்தம் கொள்ளாமல் இருப்பது நல்லது. பெரிய வெற்றிகள் ஏற்படும் காலகட்டம். பெற்றோர், பெரியோர் தேக ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருப்பது ஏற்றத்தைக் கொடுக்கும். வாகனங்கள் வங்கும் யோகம் உண்டாகும். சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடக்கும் அஷ்டலட்சுமி கடாட்சம் உண்டாகும். வார்த்தைகளில் தேன் தடவிய வார்த்தைகளைப் பயன்படுத்துவது நல்லது.
வழிபாடு
புத்திக்கூர்மை ஏற்படும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். அசையும், அசையா சொத்துகளின் சேர்க்கை ஏற்படும். புதிய உறவுகள் கிடைக்கும். உங்களைத் தேடி நல்ல செய்திகள் வந்து சேரும். ஆளுமைத் திறன் அதிகரிக்கும் காலகட்டம். பிள்ளைகள் வெளியூர், வெளிநாட்டில் உயர்கல்வி படிக்கும் அமைப்பு ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும். தொட்ட காரியங்கள் துலங்கும் அற்புதமான காலகட்டம். கடக ராசியினர் காலஹஸ்தி சென்று வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications