Tamil Puthandu Palan: கடக ராசிக்கு ராஜயோகத்தை தரும் புத்தாண்டு.. சனியின் அருளால் அதிர்ஷ்டம்
Tamil Puthandu Palan: தமிழ் புத்தாண்டான பராபவ ஆண்டு பிறந்துள்ளது. கிருஷ்ணபட்சத்தில் துவாதசி திதியில், சதயம் நட்சத்திரத்தில் இந்தப் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த தமிழ்ப் புத்தாண்டு கடகம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
பரிவர்த்தன யோகத்தோடு உருவாகியுள்ள இந்த தமிழ் புத்தாண்டில் பல்வேறு யோகங்கள் கண்டிப்பாக கிடைக்கும். வரும் குருப்பெயர்ச்சியின் மூலமாக குரு பகவான் உச்சமடைவதால் நடுத்தர குடும்பத்தினருக்கு பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார முன்னேற்றங்கள் நல்லவிதமாக இருக்கும். ஆக்கப்பூர்வமான நன்மைகள் கிடைக்கும் அற்புதமான ஆண்டாக இருக்கும்.

குரு பகவான் வீட்டில் புதன் பகவானும், புதன் பகவான் வீட்டில் குரு பகவானும் இருப்பதால் சரளமான வகையில் சிறப்பு, உத்தியோகத்தில் நல்ல பொறுப்பு கிடைக்கும். ஏழ்மை விலகி செல்வாக்கு அடையும் சிறந்த ஆண்டாகும். மழைப்பொழிவு நன்றாக இருக்கும். விளைச்சல் அதிகமாக இருக்கும். பசுக்கள் நிறைய பாலை கொடுக்கும். உரத் தொழிற்சாலைகள் நம் நாட்டிலேயே அதிகளவில் உற்பத்தி செய்யப்படும்.
விவசாயிகளுக்கு நிறைய சலுகைகள் கிடைக்கும். காப்பீடில் நிறைய மாற்றம் ஏற்படும். மகசூல் நன்றாக இருக்கும். அந்த வகையில், இந்த தமிழ்ப் புத்தாண்டில் கடகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கடகம் ராசி பலன்கள் (Kadagam Rasi Palangal)
கடகம் ராசியினருக்கு இந்த தமிழ்ப் புத்தாண்டு விமோசனத்தை தரும் காலகட்டமாக இருக்கும். கடகம் குரு பகவான் உச்சமாகக் கூடிய இடம். சுமை, மன குழப்பம் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். விடுதலையான உணர்வு ஏற்படும். கனவுகள் நனவாகக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். இந்த ஆண்டு இனிமையானதாக இருக்கும். யாரையும் நம்பக்கூடாது. நம் கை தான் நமக்கு உதவி என்பதை உணர்வீர்கள்.
ராஜயோகம்
மிகப்பெரிய ராஜயோகத்தை தரக்கூடிய ஆண்டாக இருக்கும். குரு பகவான் ராசிக்குள் ஜூன் மாதம் வருகிறார். குருசந்திர யோகம் ஏற்படும். யோகாதிபதி ராசிக்குள் அமருவதால் பெரிய பொறுப்புகள், பதவிகள் கிடைக்கும். ராகு கேது முன் பின் வருவதால் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வளர்ச்சி, முன்னேற்றத்தைக் கொடுக்க கூடியதாகவும், ராஜயோகத்தை கொடுக்க கூடியதாகவும் அமையும்.
சனி பலம்
சனி பகவான் 9 ஆம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் ஆண்டு முழுவதும் இருக்கிறார். ஜூன் மாதத்தில் குரு ஜென்மத்தில் வந்தாலும் சனியின் பலம் நன்றாக இருப்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. சிக்கல்கள், பாதிப்புகள் எளிமையாகத் தீரும். எந்த காரியங்களைச் செய்தாலும் அதனை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நன்மை பயக்கும்.
குருவால் அச்சம்
ஜென்மத்தில் குரு வருவதால் வருத்தப்படத் தேவையில்லை. ஆண்டு முழுவதும் சனி பகவான் நல்ல நிலைமையில இருப்பதால் அற்புதமான ஆண்டாக இருக்கும். கடந்த 3, 4 ஆண்டுகளாக கடக ராசியினர் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். இனி அந்த அமைப்புகள் எல்லாம் மாறும். துக்கம், துயரம், கவலைகளில் இருந்து வெளியில் வரும் அமைப்பு ஏற்படும்.
வழிபாடு
இழந்துபோன மரியாதையை திருப்பி பெறக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். தேவையில்லாத நட்புகளில் இருந்து விலகிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உறுதியான விஷயங்களை கையாளக்கூடிய ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். 9 கிரகங்களில் 5 கிரகங்கள் வரை உங்களுக்கு சாதமாக உள்ளது. கடந்த காலங்களில் பாதம் செய்தவர்கள் முன்னிலையில் நல்ல அமைப்போடு வாழும் சூழல் ஏற்படும். மூகாம்பிகை அம்மன் வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications