தமிழ் புத்தாண்டு பலன்: அசுர வளர்ச்சி.. அடித்து ஆடப்போகும் கும்பம்
தமிழ் புத்தாண்டு பலன் 2025: விசுவாவசு வருடம் ஏப்ரல் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் சித்திரை மாதம், தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்த புத்தாண்டு கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏற்றம் தரும் புத்தாண்டாக இருக்குமா, எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும், வழிபாடு முறைகள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்காலம்.
2025 ஆம் ஆண்டில் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சித்திரைப் பிறக்கவுள்ளது. தமிழ் வருடத்தில் சித்திரைப் பிறப்பு என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடைக்காடர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. தமிழ் வருடங்களின் 60 ஆண்டுகளில் 38 ஆவது ஆண்டாக வரக்கூடிய விசுவாவசு வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் இந்த வருடம் தொடங்குகிறது.

இந்த ஆண்டு கண்டிப்பாக 12 ராசிக்காரர்களுக்கும் மகத்துவம் வாய்ந்த காலகட்டமாக இருக்கும். அந்த வகையில், கும்பம் ராசியினருக்கு தமிழ்ப் புத்தாண்டில் கிடைக்கும் நல்ல பலன்கள், கிடைக்கக்கூடிய யோகங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கும்பம் - நல்ல பலன்களை குவிக்கும் அருமையான ஆண்டாக இருக்க போகிறது. தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். ஆரோக்கியத்தில் நீண்ட காலமாக இருந்த பிரச்னைகள் குணமடையும். முதலீடுகளில் அதிகளவு லாபம் கிடைக்கும். வீடு, நிலம், நகை, ஆபரணங்கள், வண்டி, வாகனம் என்று சொத்துகள் சேரும். மனதில் நிம்மதி ஏற்படும். உங்கள் ரத்த பந்த உறவுகளுடன் இருந்த பிரச்னைகள் நிவர்த்தியாகும்.
உயர்வு
குருவின் பார்வை நன்றாக இருப்பதால் சுப காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். அடுத்தடுத்து சுப காரியங்கள் நடைபெறும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உத்யோகம் மற்றும் தொழிலில் உயர்வு காணப்படும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தொழில் விருத்தியாகி அற்புதமான பலன்களை அனுபவிக்க போகிறீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த பணியிட மாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
திறமை
புதிய முயற்சிகள் சிறப்பான வெற்றியை தரும். கூட்டுத் தொழிலில் இருந்து விலகி தனியாக தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. குரு பார்வை, ராகு அமர்வு ஆகியவற்றால் அசுர வளர்ச்சியை பெறப் போகிறீர்கள். உங்களை ஏளனம் செய்தவர்களே, உங்களின் திறமை மற்றும் வளர்ச்சியை பெற போகிறீர்கள். எதிர்பாராதளவுக்கு அதிர்ஷ்டம் கொட்டும்.
திருமணம்
பழைய பாக்கி வசூலாகும். திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமண யோகம் உண்டு. மறுமணம் முயற்சியில் இருப்போருக்கும் நல்லது நடைபெறும். காதல் உறவு திருமணத்தில் நிறைவடையும். வேற்று மொழி மனிதர்களால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். இறங்கிய அனைத்து காரியங்களில் வெற்றிகள் கிடைக்கும். வெளிநாட்டு பயணத்தால் மகிழ்ச்சி உண்டு.
கவனம்
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். வண்டி, வாகனத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாழ்க்கை துணையின் உடல் நலத்திலும் அதிக கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. முக்கியமாக வயிறு, நரம்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பண வரவு இருந்தாலும் வீண் விரயம் இருக்கும். நரசிம்மர் கோயில்களுக்கு சென்று வழிபடுவது நன்மையை தரும்.
-
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications