Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விருச்சிகத்துக்கு பணம் கொட்டும், கடன் தீரும்.. அள்ளி கொடுக்கும் குரு.. ஆனா 1 விஷயத்தில் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு பலன் 2025: விசுவாவசு வருடம் ஏப்ரல் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் சித்திரை மாதம், தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்த புத்தாண்டு விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஏற்றம் தரும் புத்தாண்டாக இருக்குமா, எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும், வழிபாடு முறைகள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்காலம்.

2025 ஆம் ஆண்டில் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சித்திரைப் பிறக்கவுள்ளது. தமிழ் வருடத்தில் சித்திரைப் பிறப்பு என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடைக்காடர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. தமிழ் வருடங்களின் 60 ஆண்டுகளில் 38 ஆவது ஆண்டாக வரக்கூடிய விசுவாவசு வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் இந்த வருடம் தொடங்குகிறது.

Tamil new year Viruchigam Rasi palan

இந்த ஆண்டு கண்டிப்பாக 12 ராசிக்காரர்களுக்கும் மகத்துவம் வாய்ந்த காலகட்டமாக இருக்கும். அந்த வகையில், விருச்சிகம் ராசியினருக்கு தமிழ்ப் புத்தாண்டில் கிடைக்கும் நல்ல பலன்கள், கிடைக்கக்கூடிய யோகங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விருச்சிகம் - விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு திருச்செந்தூர் முருகனிடம் சரணடைவது அமோகமான பலன்களைத் தரும். திருச்செந்தூர் முருகனுக்கு வீட்டில் தினமும் விளக்கேற்றுவது நன்மையைத் தரும். தாய் வழி, தந்தை வழி உறவு மேன்மை உடையும். உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை கூடும். சுபவிரைய பிராப்தம் ஏற்படும்.

குட் நியூஸ்

வரவுக்கு மீறிய செலவுகள் காணப்பட்டாலும் அது சந்தோஷமான செலவாக இருக்கும். தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. வயிறு, இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு மருந்து மாத்திரையை தவறிவிட்டால் பெரிய செலவுகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

பேச்சில் கவனம்

வார்த்தைகளில் அனுகூலமான அமைப்பு ஏற்படும். பொருள் விரையத்தில் இருந்து பாதுகாப்பு ஏற்படும். நீண்டநாட்களா வாங்க வேண்டும் என்று நினைத்த பொருள்கள் அனைத்தையும் வாங்கும் பிராப்தம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள், உடன் வேலை செய்பவர்களிடம் தர்க்கம் செய்யாமல் இருப்பது நல்லது.

பூமி, நிலம், வீடு

பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் இழுபறியான நிலைமை படிப்படியா மாறும் அமைப்பு ஏற்படும். தொடர்ச்சியாக காணப்பட்டிருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தி ஆகும். அனுகூலமான அமைப்பு உண்டாகும். பூமி, உத்தியோகம், நிலம், வீடு சம்பந்தப்பட்ட விஷயத்தில் இரட்டை மனநிலைமை இல்லாமல் ஒரே முடிவாக திட்டமிட்டு செய்வது பெரிய வெற்றிகளை உண்டாக்கும்.

ரகசியம் காப்பது நல்லது

ரகசியங்களை பரம ரகசியமாக வைத்துக் கொள்வது நல்லது. அது புத்திசாலித்தானமாக முடிவாகவும், அனுகூலமாகவும் இருக்கும். விருச்சிகம் ராசிக்கு மே மாதம் வரை குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் எந்தவொரு பிரச்சனையும் ஏற்படாது. அஷ்டமத்துக்கு குரு செல்வதால் நரம்புகள் பாதிப்பு, சிறுகுடல், பெருகுடல் சார்ந்த பிரச்சனை உண்டாகும்.

பதவி உயர்வு

குழந்தை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். தேவையில்லாத உறவுகள், அதனால் மனக் கசப்புகள் ஏற்படும். விரைய ஸ்தானத்தில் குரு பார்ப்பதால் கடன் பிரச்சனைகளை முடிப்பீர்கள். திடீர் கடன்களை அழிப்பார்கள். அஷ்டம ஸ்தானத்துக்கு குரு வருவதால் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. அடுத்த கட்டத்துக்கான முன்னேற்றம் உண்டாகும்.

பாம்பு கோயில் வழிபாடு

தெய்வ அனுக்கிரகம் உள்ளது. பஞ்சம ஸ்தானத்தில் குரு ராகு சேர்ந்ததால் அருமையான காலகட்டமாக இருக்கும். பாம்பு சம்பந்தப்பட்ட கோயிலுக்குச் சென்று வருவது பலவிதமான தோஷங்கள் நிவர்த்தியாகும். கர்ப்பமாவது தடைபடும். மன அமைதி இல்லாத சூழ்நிலை ஏற்படும் என்பதால் பாம்பு கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது.

பண வரவு அதிகரிக்கும்

பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சை சரியாகும். குரு பார்வையால் பல பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு உண்டாகும். பணம், தூக்கத்துக்குப் பிரச்சனை இருக்காது. பெரிய வீடுகளை கட்டுவது, பெரிய படிப்பு படிப்பது, அரபு நாடுகளுக்குச் செல்லும் யோகம் உண்டு. முதலீடுகள் அனைத்தும் லாபத்தை தரும். சுய ஒழுக்கம், கட்டுப்பாட்டில் கவனமாக இருப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் வெற்றி உண்டாகும். இரண்டு மூன்று முறை முயற்சி செய்து அலைச்சலாகி முடிக்கக் கூடிய நிலை உண்டாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+