Tamil Puthandu Palan: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டான பராபவ ஆண்டு பிறந்துள்ளது. கிருஷ்ணபட்சத்தில் துவாதசி திதியில், சதயம் நட்சத்திரத்தில் இந்தப் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த தமிழ்ப் புத்தாண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

பரிவர்த்தன யோகத்தோடு உருவாகியுள்ள இந்த தமிழ் புத்தாண்டில் பல்வேறு யோகங்கள் கண்டிப்பாக கிடைக்கும். வரும் குருப்பெயர்ச்சியின் மூலமாக குரு பகவான் உச்சமடைவதால் நடுத்தர குடும்பத்தினருக்கு பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார முன்னேற்றங்கள் நல்லவிதமாக இருக்கும். ஆக்கப்பூர்வமான நன்மைகள் கிடைக்கும் அற்புதமான ஆண்டாக இருக்கும்.

Tamil puthandu palan Rishabam lucky zodiac sign

குரு பகவான் வீட்டில் புதன் பகவானும், புதன் பகவான் வீட்டில் குரு பகவானும் இருப்பதால் சரளமான வகையில் சிறப்பு, உத்தியோகத்தில் நல்ல பொறுப்பு கிடைக்கும். ஏழ்மை விலகி செல்வாக்கு அடையும் சிறந்த ஆண்டாகும். மழைப்பொழிவு நன்றாக இருக்கும். விளைச்சல் அதிகமாக இருக்கும். பசுக்கள் நிறைய பாலை கொடுக்கும். உரத் தொழிற்சாலைகள் நம் நாட்டிலேயே அதிகளவில் உற்பத்தி செய்யப்படும்.

விவசாயிகளுக்கு நிறைய சலுகைகள் கிடைக்கும். காப்பீடில் நிறைய மாற்றம் ஏற்படும். மகசூல் நன்றாக இருக்கும். அந்த வகையில், இந்த தமிழ்ப் புத்தாண்டில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ரிஷப ராசி பலன்கள் (Rishabam Rasi Palangal)

ரிஷபம் ராசியினருக்கு இந்த தமிழ்ப் புத்தாண்டு அற்புதமான ஆண்டாக இருக்கும். 9 ஆம் இடமும், 11 ஆம் இடமும் வலுத்திருப்பதால் தொழில் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். எதிர்ப்பு, எதிரிகள் இல்லாத தன்மை ஏற்படும். எதிரி நண்பராகும் அமைப்பு ஏற்படும். வருமானங்கள் வரக்கூடிய காலகட்டம்.

வருமானம் பெருகும்

ரிஷப ராசிக்கு அதிபதியான சுக்கிரன் காரகத்துவம் பெற்றுள்ளதால் நல்ல சம்பாதிக்கக்கூடிய, வருமானம் பெறக்கூடிய ஆண்டாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்துவீர்கள். கடன் வாங்காத அளவுக்கு கையிருப்பு இருக்கும். கடன் என்றே சொல்லுக்கு இடமில்லாத அளவுக்கு அற்புதமான ஆண்டாக இந்த ஆண்டு அமையும்.

தன்னம்பிக்கை

ராசிக்கு சுக ஸ்தானதிபதி உச்சமாக இருப்பதால் எதையோ மறைத்தே வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என்கிற தன்மை மாறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள், சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். தாய், தந்தையை மதிக்கும் அமைப்பு ஏற்படும். சகோதரத்துவம் ஏற்படும். பொன்னான ஆண்டாக இருக்கும்.

நிரந்தர வேலை

மிகப்பெரிய யோகாதிபதியான சனி பகவான் வருடம் முழுவதும் மீன ராசியில் அமர்ந்திருப்பதால் நிரந்தர வேலை கிடைக்கும். நிரந்தர தொழில் தொடங்கி தானும் சம்பாதித்து, மற்றவர்களுக்கும் சம்பாதித்துக் கொடுக்கக்கூடிய அமைப்பு ஏற்படும். இடம் வாங்கி போட்டிருப்பவர்கள் வீடு கட்டும் யோகம் உண்டாகும். நகைகள், தங்கம் வாங்கும் அமைப்பு உள்ளது.

லாப ஸ்தானம்

ரிஷப ராசியினருக்கு சந்தோஷமான ஆண்டாக இருக்கும். ஆண்டு முழுவதும் சனி பகவான் 11 ஆம் இடமான லாப ஸ்தானத்தில் இருக்கிறார். குரு பகவானின் நிலைமையும் நன்றாக உள்ளது. வயதுக்கேற்ப நற்பலன்கள் கிடைக்கும். சிறுவயதினருக்கு ஆசைப்பட்டது கிடைக்கும். மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கான வெளிநாடு வாய்ப்பு கிடைக்கும்.

வழிபாடு

உத்தியோகத்தில் பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு நிச்சயமாக இந்த ஆண்டு பதவி உயர்வு கிடைக்கும். ஏற்றம் நிறைந்த ஆண்டாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். வாராஹி அம்மனை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+