Tamil Puthandu Palan: தனுசு ராசிக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் கொட்டும் பணம்.. பொற்காலம் ஆரம்பம்
Tamil Puthandu Palan: தமிழ் புத்தாண்டான பராபவ ஆண்டு பிறந்துள்ளது. கிருஷ்ணபட்சத்தில் துவாதசி திதியில், சதயம் நட்சத்திரத்தில் இந்தப் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த தமிழ்ப் புத்தாண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
பரிவர்த்தன யோகத்தோடு உருவாகியுள்ள இந்த தமிழ் புத்தாண்டில் பல்வேறு யோகங்கள் கண்டிப்பாக கிடைக்கும். வரும் குருப்பெயர்ச்சியின் மூலமாக குரு பகவான் உச்சமடைவதால் நடுத்தர குடும்பத்தினருக்கு பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார முன்னேற்றங்கள் நல்லவிதமாக இருக்கும். ஆக்கப்பூர்வமான நன்மைகள் கிடைக்கும் அற்புதமான ஆண்டாக இருக்கும்.

குரு பகவான் வீட்டில் புதன் பகவானும், புதன் பகவான் வீட்டில் குரு பகவானும் இருப்பதால் சரளமான வகையில் சிறப்பு, உத்தியோகத்தில் நல்ல பொறுப்பு கிடைக்கும். ஏழ்மை விலகி செல்வாக்கு அடையும் சிறந்த ஆண்டாகும். மழைப்பொழிவு நன்றாக இருக்கும். விளைச்சல் அதிகமாக இருக்கும். பசுக்கள் நிறைய பாலை கொடுக்கும். உரத் தொழிற்சாலைகள் நம் நாட்டிலேயே அதிகளவில் உற்பத்தி செய்யப்படும்.
விவசாயிகளுக்கு நிறைய சலுகைகள் கிடைக்கும். காப்பீடில் நிறைய மாற்றம் ஏற்படும். மகசூல் நன்றாக இருக்கும். அந்த வகையில், இந்த தமிழ்ப் புத்தாண்டில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தனுசு ராசி பலன்கள் (Dhanusu Rasi Palangal)
தனுசு ராசியினருக்கு தமிழ்ப் புத்தாண்டு எல்லா விஷயங்களிலும் வெற்றியைக் கொடுக்கும். 4 ஆம் இடத்தில் இருக்கும் சனி பகவான் சிறு சிறு தொல்லைகள் கொடுத்தாலும் அதை எதிர்த்துப் போராடும் அமைப்பு உள்ளது. குரு பார்வை இருப்பதால் நிறைய நன்மைகள் நடக்கும். குருவின் அருளால் சுக ஸ்தானம் நன்றாக இருக்கும். ஜூன் மாதத்தில் இருந்து பெரிய வெற்றிகள் கிடைக்கும்.
ராஜயோகம்
நன்மைக்காகப் போராடும் உங்கள் ராசியின் தைரிய ஸ்தானத்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. பெரிய பெரிய விஷயங்களை இலக்காக வைப்பீர்கள். கடன் வாங்கினாலும் அதை முடிக்கும் தைரியம் ஏற்படும். குரு பகவான் 7 இல் இருந்தாலும் கூட 8 ஆம் இடத்துக்குச் செல்லும்போது மிகப்பெரிய ராஜயோகம் உண்டாகும். பொன்னான ஆண்டாக இருக்கும்.
குரு பார்வை
அர்த்தாஷ்டம சனியில் நிறைய பாதிப்புகளைச் சந்தித்து வந்திருந்தாலும் குரு பலம் இருந்தது. தற்போது குரு 8 ஆம் இடத்துக்குச் செல்வதால் அச்சப்படத் தேவையில்லை. உச்சம் பெற்ற குரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. சனி பகவான் ஜூனை 31 ஆம் தேதி வக்கிரம் அடைவதால் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் மிகவும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வீடு, மனை வாங்கக்கூடிய யோகம் ஏற்படும்.
தன லாபம்
எதிர்பாராத தன லாபங்கள் கிடைக்கும். பண வரவுகள் நன்றாக இருக்கும். மிகப்பெரிய அளவில் பயணங்கள் மேற்கொள்வீர்கள், வெளிநாடு, வெளிமாநிலம் செல்லும் அமைப்பு ஏற்படும். பயணங்கள் சார்ந்த தொழில் கூட அமையும். கூடுதல் அலைச்சல், பயணங்கள், வருமானங்கள், கெளரவம் ஏற்படும். ராசிநாதன் உச்சமாக இருப்பதால் இப்போது இருப்பதிலிருந்து ஒருபடி மேல் செல்லும் அமைப்பு உள்ளது.
முன்னேற்றம்
பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடற்பயிற்சியை தவறாமல் கடைப்பிடிப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும். ராசியதிபதி குரு பகவான் நன்றாக இருப்பதால் கடந்த காலத்தில் மறைந்து வாழ்ந்திருந்தாலும் இந்த ஆண்டு வெளிச்சம் பெறக்கூடிய அமைப்பு ஏற்படும்.
வழிபாடு
ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து 40 நாட்களுக்குப் பிறகு ராசிநாதன் உச்சம் பெறுவதால் எடுத்த காரியத்தில் வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டு. பகுதி பகுதியாகக் கூடிய கிடைக்கும் நன்மைகளைப் பெறுவீர்கள். பழனி முருகப் பெருமானை வழிபாடு செய்வது உங்களுக்கு அற்புதமான ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications