Tamil Puthandu Palan: உச்சம் பெற்ற குருவால் கன்னி ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. கண்டகச் சனியிலும் யோகம்
Tamil Puthandu Palan: தமிழ் புத்தாண்டான பராபவ ஆண்டு பிறந்துள்ளது. கிருஷ்ணபட்சத்தில் துவாதசி திதியில், சதயம் நட்சத்திரத்தில் இந்தப் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த தமிழ்ப் புத்தாண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
பரிவர்த்தன யோகத்தோடு உருவாகியுள்ள இந்த தமிழ் புத்தாண்டில் பல்வேறு யோகங்கள் கண்டிப்பாக கிடைக்கும். வரும் குருப்பெயர்ச்சியின் மூலமாக குரு பகவான் உச்சமடைவதால் நடுத்தர குடும்பத்தினருக்கு பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார முன்னேற்றங்கள் நல்லவிதமாக இருக்கும். ஆக்கப்பூர்வமான நன்மைகள் கிடைக்கும் அற்புதமான ஆண்டாக இருக்கும்.

குரு பகவான் வீட்டில் புதன் பகவானும், புதன் பகவான் வீட்டில் குரு பகவானும் இருப்பதால் சரளமான வகையில் சிறப்பு, உத்தியோகத்தில் நல்ல பொறுப்பு கிடைக்கும். ஏழ்மை விலகி செல்வாக்கு அடையும் சிறந்த ஆண்டாகும். மழைப்பொழிவு நன்றாக இருக்கும். விளைச்சல் அதிகமாக இருக்கும். பசுக்கள் நிறைய பாலை கொடுக்கும். உரத் தொழிற்சாலைகள் நம் நாட்டிலேயே அதிகளவில் உற்பத்தி செய்யப்படும்.
விவசாயிகளுக்கு நிறைய சலுகைகள் கிடைக்கும். காப்பீடில் நிறைய மாற்றம் ஏற்படும். மகசூல் நன்றாக இருக்கும். அந்த வகையில், இந்த தமிழ்ப் புத்தாண்டில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன்கள் (Kanni Rasi Palangal)
கன்னி ராசியினருக்கு இந்த தமிழ்ப் புத்தாண்டு ஜாக்பாட் கொடுக்கும். அந்த அளவுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கிறது. ஆண்டு தொடக்கத்திலேயே குரு பகவான் உச்சம் பெறுகிறார். கண்டகச் சனியால் ஏற்பட்டிருந்த ஆரோக்கிய குறைபாடுகள் பரிபூரணமாக நீங்கும். குருவின் நிலை மிகவும் சிறப்பாக இருப்பதாலும், சனி பகவான் ஆகஸ்ட் மாதம் வக்கிரம் அடைவதாலும் குருவும், சனியும் இணைந்து நல்ல பலன்களைக் கொடுக்கும்.
திருமண யோகம்
தொட்டவை துலங்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். லாபகரமாக இருக்கும். சட்டப் போராட்டங்களில் வெற்றி பெறும் அமைப்புள்ளது. அண்ணன், அக்காள் உறவுகள் மேம்படும். அக்காவுக்கு திருமணமாகும் யோகம் உண்டு. பொறுப்புள்ளவர்களாக இருப்பீர்கள். கவலைகளில் இருக்கக்கூடிய தம்பி, தங்கைகளுக்கு இருந்து வந்தவர்களுக்கு குடும்பம் நன்றாக இருக்கும் அமைப்பை பார்க்கக்கூடிய அமைப்புள்ளது.
லாபம் கொட்டும்
வேலை, தொழில், வியாபாரம், விவசாயம் போன்ற அமைப்புகளில் கண் முன்பே லாபங்கள் வரப்போகுது தெரியும். வருடத்தின் ஆரம்பத்தில் சிறு சிறு நெருடல் இருந்தாலும், 45 நாட்களுக்குப் பிறகு மிகப்பெரிய நன்மைகள் நடக்கும். வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த தடைக்கற்கள் எல்லாம் படிக்கற்களாக மாற்றும் காலகட்டம். ராசியதிபதி குரு பகவானின் வீட்டில் இருப்பதால் தடைபட்ட சுபகாரியங்கள் நடக்கும் யோகம் உண்டு.
சொந்த வீடு யோகம்
சொந்த வீடு வாசல் வாங்கும் அமைப்புள்ளது. சுபகாரியங்களை அடுத்தடுத்து நடத்தி காட்டுவீர்கள். விவசாய சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். 5 ஆம் வீடு சனியின் இடமாக வருவதால் எல்லா விஷயங்களையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். நண்பர்களால் சில குழப்பங்கள் ஏற்படும் அமைப்பு உள்ளது. 7 ஆம் இடத்தில் சனி இருப்பதால் சில முடிவுகளை எடுக்கும்போது நான்கு பேரிடம் ஆலோசனை கேட்டு செயல்படுத்துவது நன்மை பயக்கும்.
விடுதலை
கன்னி ராசியினருக்கு இந்தப் புத்தாண்டு விடுதலை தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். 6 ஆவது வீட்டில் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறந்துள்ளது. ஜூன் 15 ஆம் தேதியில் இருந்து கன்னி ராசியினருக்குப் பொற்காலமாக இருக்கும். வருமானம் நன்றாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்துவிட்டு உங்கள் கையில் எதுவும் இல்லாமல் இருப்பதை தவிர்ப்பது நல்லது.
வழிபாடு
பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். பண வரவிற்குப் பஞ்சம் இருக்காது. எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பிரிந்த கணவன், மனைவி மீண்டும் சேரக்கூடிய யோகம் உண்டாகும். மதுரை மீனாட்சி அம்மன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications