Tamil Puthandu Palan: மகர ராசிக்கு 13 ஆண்டுகளுக்கு பிறகு அடித்த ஜாக்பாட்.. அதிர்ஷ்டத்தை அள்ள போறீங்க
Tamil Puthandu Palan: தமிழ் புத்தாண்டான பராபவ ஆண்டு பிறந்துள்ளது. கிருஷ்ணபட்சத்தில் துவாதசி திதியில், சதயம் நட்சத்திரத்தில் இந்தப் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த தமிழ்ப் புத்தாண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
பரிவர்த்தன யோகத்தோடு உருவாகியுள்ள இந்த தமிழ் புத்தாண்டில் பல்வேறு யோகங்கள் கண்டிப்பாக கிடைக்கும். வரும் குருப்பெயர்ச்சியின் மூலமாக குரு பகவான் உச்சமடைவதால் நடுத்தர குடும்பத்தினருக்கு பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார முன்னேற்றங்கள் நல்லவிதமாக இருக்கும். ஆக்கப்பூர்வமான நன்மைகள் கிடைக்கும் அற்புதமான ஆண்டாக இருக்கும்.

குரு பகவான் வீட்டில் புதன் பகவானும், புதன் பகவான் வீட்டில் குரு பகவானும் இருப்பதால் சரளமான வகையில் சிறப்பு, உத்தியோகத்தில் நல்ல பொறுப்பு கிடைக்கும். ஏழ்மை விலகி செல்வாக்கு அடையும் சிறந்த ஆண்டாகும். மழைப்பொழிவு நன்றாக இருக்கும். விளைச்சல் அதிகமாக இருக்கும். பசுக்கள் நிறைய பாலை கொடுக்கும். உரத் தொழிற்சாலைகள் நம் நாட்டிலேயே அதிகளவில் உற்பத்தி செய்யப்படும்.
விவசாயிகளுக்கு நிறைய சலுகைகள் கிடைக்கும். காப்பீடில் நிறைய மாற்றம் ஏற்படும். மகசூல் நன்றாக இருக்கும். அந்த வகையில், இந்த தமிழ்ப் புத்தாண்டில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மகரம் ராசி பலன்கள் (Magaram Rasi Palangal)
மகர ராசியினருக்கு இந்த தமிழ்ப் புத்தாண்டு அற்புதமான ஆண்டாக இருக்கும். 13 ஆண்டுகளுக்குப் பிறகு நல்ல யோகம் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். அதிர்ஷ்டம், வாழ்க்கையில் நிம்மதி, தேக ஆரோக்கியம் போன்றவை ஏற்படும். சனி கடந்த ஓராண்டாக நல்ல பலன்களை கொடுத்துக் கொண்டிருக்கிறது. குரு பகவான் 7 ஆம் இடமான களத்திர ஸ்தானத்துக்கு வரப் போகிறார். இதனால், குரு, சனி பகவான்கள் நன்மைகளை தரப் போகின்றன.
அனுகூலம்
ஆண்டின் இறுதியில் வரும் ராகு கேது பெயர்ச்சியும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அனைத்து கிரகங்களும் இந்தப் புத்தாண்டில் நல்ல நிலையில் இருப்பதால் நீண்ட நாட்களாக கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிலைமை ஏற்படும். வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். இதுவரை இருந்து வந்த பணப் பிரச்சனைகள் நீங்கும்.
கடன் கொடுக்கும் யோகம்
மற்றவர்களுக்கு கடன் கொடுக்கும் அளவுக்கு வாழ்க்கைத் தரம் உயர ஆரம்பிக்கும். ஜூன் மாதத்தில் இருந்து அனைத்து விதமான முன்னேற்றங்களும் ஏற்படும். ஜூன் மாதத்தில் இருந்து அற்புதமான காலகட்டமாக இருக்கும். கடந்த ஏழரை சனி காலகட்டத்தில் கடும் பாதிப்படைந்து வந்த மகர ராசியினர் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். ஏற்றத்தைப் பெறும் காலகட்டமாக இருக்கும்.
தொட்டது துலங்கும்
இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். கடன் பிரச்சனையில் இருந்து வெளிவரும் யோகம் உண்டு. வேலை நிரந்தரம் ஏற்படும். அரசு வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் யோகம் உண்டு. தொட்டது துலங்கக்கூடிய புத்தாண்டாக அமையும். தடைபட்டு வந்த அனைத்து நன்மைகளும் நடக்கும் காலகட்டம்.
வழிபாடு
எதிரிகள் மூலமாகக் கூட எதிர்பார்க்காத நன்மைகள் ஏற்படும். ஆசைப்பட்ட விஷயங்கள் எல்லாம் அடுத்தடுத்து நடக்கும் யோகம் உண்டு. நல்ல உழைப்பைப் போடுவீர்கள். உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். தன பாக்கியம் உண்டாகும். யார் உங்களைப் பற்றி சொன்னாலும் அதனை காதில் போட்டுக் கொள்ளாமல் செல்வது அமையும். சரபேஸ்வரர் வழிபாடு புத்தாண்டு அற்புதத்தை ஏற்படுத்தும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications