Tamil Puthandu Palan: தமிழ் புத்தாண்டில் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. முழு விவரம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைவரும் வரவிருக்கும் ஆண்டின் பலன்களை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள். அந்த வகையில், இந்த ஆண்டு கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் யார், என்ன மாற்றங்கள் நடக்கும்? தொழில், பணம், உடல்நலம், குடும்பம், காதல், திருமணம் போன்ற முக்கிய அம்சங்களில் ஏற்படும் முன்னேற்றம், சவால்கள் குறிதது இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். (Tamil puthandu palan 2026)
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி காலை 8.42 மணிக்கு சதயம் நட்சத்திரத்தில் தமிழ் புத்தாண்டு (சித்திரை 1) பிறந்துள்ளது. மேஷத்தில் சூரியன் வரக்கூடிய நாளே சித்திரை 1 ஆம் நாள். விசுவாவசு ஆண்டு நிறைவடைந்து பராபவ ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த ஆண்டில் 12 ராசிகளுக்கும் கிரக நிலைகளின் அடிப்படையில் பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மேஷம் ராசி பலன் (Mesham Rasi Palan)
மேஷம் ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் அற்புதமான முன்னேற்றங்கள் ஏற்படும். எப்போதும் காணப்பட்டு வந்த மன அழுத்தம் நீங்கும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை, வயிறு பிரச்சனை போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் அனைத்தும் நீங்கும். எல்லா பிரச்சனைகளில் இருந்தும் விடுபடும் காலகட்டமாக இருக்கும். ஒன்றன் பின் ஒன்றாக நன்றாக நடக்கும் காலகட்டம்.
ஏழரை சனி நடந்து கொண்டிருப்பதால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நன்மையைத் தரும். மேஷம் ராசியினருக்கு உடற்பயிற்சி மட்டுமே சிறந்த பரிகாரமாக இருக்கும். கடவுளின் அனுக்கிரகம் கிடைக்கும். சகோதர, சகோதரிகள் பகைமை மறைந்து நட்பு பாராட்டுவார்கள். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். செய்தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தெய்வத்திடம் சரணாகதி அடைவது நல்லது.
நிறைய நன்மைகள், சுபகாரியங்கள் நடக்கும் காலகட்டம். வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. உள்ளூர், வெளியூர், தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். வேலை கிடைக்கும். கெளரவம் ஏற்படும். அரசாங்க அனுகூலங்கள் ஏற்படும். உடற்பயிற்சி செய்வது மேன்மையை ஏற்படுத்தும். கத்துவது, சண்டை போடுவது, வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வழக்குகள் சார்ந்த விஷயங்களில் ஏற்றம் பெறும் யோகம் உண்டாகும்.
அரசாங்கத்தில் முக்கியமானவர்களின் ஆதரவு கிடைக்கும். அனைவரிடமும் சுமுகமான உறவு தொடரும். உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். புத்திசாலித்தனமாக முதலீடுகளைச் செய்வீர்கள். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். மேஷம் ராசியினருக்கு திருச்செந்தூர் சென்று வழிபாடு செய்து வருவது மற்றும் மகான்கள் வழிபாடு உங்களுக்கு அற்புதமான ஏற்றத்தைக் கொடுக்கும்.
சிம்மம் ராசி பலன் (Simmam Rasi Palan)
சிம்மம் ராசியினர் சனியால் அச்சப்படத் தேவையில்லை. நிறைய நன்மைகள் நடக்கும். மன அழுத்தம் இல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும். நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய அறிமுகங்களிடம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த சிக்கல் தீரும். வியாபாரத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். பொருளாதாரத்தில நல்ல முன்னேற்றண் ஏற்படும். யோக பலன்கள் அடுத்தடுத்து நடக்கும் காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கி, அதீத நன்மைகள் உண்டாகும்.
காஸ்மெடிக் சர்ஜரி போன்றவற்றை செய்வீர்கள். பற்கள் தொடர்பான பரிசோதனை, ஆயுர்வேதிக் சிகிச்சை முறைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வீர்கள். மனதிற்குப் பிடித்தவற்றை வாங்கி மகிழ்வீர்கள். தங்கம், ஆடை, ஆபரணங்கள் போன்றவற்றை வாங்கி மகிழ்வீர்கள். தேவையில்லாத கடன்களை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. வெளியில் கொடுத்திருந்த கடன்கள் திரும்பக் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும்.
தனுசு ராசி பலன் (Dhanusu Rasi Palan)
தனுசு ராசியினருக்கு அர்த்தாஷ்டமசனி நடந்து கொண்டிருக்கிறது. கால் வலி, கை வலி, கழுத்து வலி, முதுகு வலி போன்றவை வரும் என்பதால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்லது. உறவுகள் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களை சந்திப்பீர்கள். புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். துணை உங்களைத் தாங்கும் அமைப்பு உள்ளது.
தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும். புதிய தொழில் தொடங்கும் அமைப்பு உள்ளது. திடீர் அதிர்ஷ்டம் வரும். பிள்ளைகளுக்கு வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். பிள்ளைகளுக்கு அனுகூலம் ஏற்படும். புதிய வரவுகள் குடும்பத்தில் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகுகம். நல்ல வேலை ஆட்கள், முதலாளிகள் கிடைப்பார்கள். உங்களை முழுதும் நம்பும் மனிதர்கள் கிடைப்பார்கள்.
ஆசிர்வாதம் கிடைக்கும். 2 ஆம் இடத்தையும், 12 ஆம் இடத்தையும் குரு பார்க்கிறார். பணம் அபரிமிதமாக கிடைக்கும். செலவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். சந்தோஷ செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ச்சியாக வாழும் அமைப்பு உள்ளது. ஆத்ம திருப்தி அடைவீர்கள். திருக்கொள்ளிக்காடு சென்று வருவது ஏற்றத்தைக் கொடுக்கும்.
வருமானம் திருப்தியாக இருக்கும். பழைய கடன்களுக்கான வட்டிகளை செலுத்துவீர்கள். பெரிய கடன் அமைப்புகள் ஏற்படாது. தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்வீர்கள். வருமானம் தரக்கூடிய பயணங்களை மேற்கொள்வீர்கள். மன அழுத்தம் ஏற்படும். தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.
கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. தேவைகளைப் பூர்த்தி செய்யும் காலகட்டம். கடமைகளை முழு ஈடுபாட்டோடு செய்து முடிப்பீர்கள். சேமிப்பில் கவனம் அதிகரிக்கும். பழைய முதலீடுகள் மூலமாக வருமானம் வரும். பேச்சில் நிதானமும், பொறுமையும் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு.












Click it and Unblock the Notifications