தமிழ் புத்தாண்டு பலன்: தனுசு ராசிக்கு அள்ளி கொடுக்கும் குரு.. 2 விஷயங்களால் வரப்போகும் ஆபத்து..கவனம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் இந்த பராபவ ஆண்டில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
தனுசு (Dhanusu Rasi Palan)
தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டமத்தில் சனி, 3 ஆம் இடத்தில் ராகு, 9 இல் கேது, 8 ஆம் இடத்தில் குரு பகவானும் வைகாசிக்கு பிறகு சஞ்சரிக்க காத்திருக்கிறது. ராசிநாதன் குரு பகவான் உச்சமடைவதால் புதிய தெளிவு ஏற்படும். கடந்த காலத்தில் குழப்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த விஷயங்கள், கலக்கங்களை எல்லாம் எளிதாக கையாளும் நிறைவேற்றும் காலமாக வைகாசி மாதத்திற்குப் பிறகு இருக்கும்.

குரு பார்வை
கடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள், உறவுகளுக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் குருவின் பார்வை இருப்பதால் பரிபூரணமாக நீங்கும். நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும், வண்டி வாகனம் வாங்குவது, தொழில் தொடங்குவது, சுபகாரியங்களை செய்ய வேண்டும் என்று விரும்பியவர்களுக்கு சுக ஸ்தானத்தை குரு பார்ப்பதால் அவை எல்லாமும் நடக்கும். 12 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் விரயங்கள் எல்லாம் கட்டுக்குள் வரும்.
வெளிநாடு யோகம்
தெய்வ வழிபாட்டின் அடிப்படையில் பல விஷயங்களை சாதிக்கக்கூடிய அற்புதமான நேரமாக இருக்கும். வெளிமாநிலம், வெளிநாட்டுக்குச் சென்று வேலை செய்யக்கூடிய யோகம் உண்டாகும். புதிய உறவுகள், வரவுகள் வாழ்க்கைக்கும், தொழிலுக்கும் ஏற்றத்தை ஏற்படுத்தும். 3 இல் ராகு இருப்பதால் யாரோடு பேசினாலும் எச்சரிக்கை, நிதானத்தோடு செயல்படுவது நன்மை பயக்கும்.
கவனம்
அர்த்தாஷ்டமத்தில் சனி இருப்பதால் அம்மாவின் உடல்நலனைப் பார்த்துக் கொள்ள வேண்டும். வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது. 8 இல் குரு இருப்பதால் தேவையில்லாத சொல், பழி ஏற்படும் வாய்ப்புள்ளதால் மற்றவர்களுடன் பழகும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குருவின் பார்வை இருப்பதால் பல்வேறு பிரச்சனைகள் தீரும் காலகட்டமாக இருக்கும். சுபகாரியங்கள் எல்லாம் கூடி வரும்.
பண விஷயத்தில் கவனம்
வாக்கு ஸ்தானத்தில் குரு பகவான் பார்ப்பதால் இந்த காலகட்டத்தில் வாக்கு கொடுப்பதில், பண விஷயங்களில் கெளரம் கெடுவதற்கான வாய்ப்புள்ளது. கம்யூனிகேஷனில் கவனமாக இருக்க வேண்டும். கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். துர்க்கையின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும்.
ஆரோக்கியம்
இதயம் தொடர்பான பிரச்சனைகளில் கவனம் தேவை. மாணவர்களுக்கு படிப்பில் சில தடைகள் இருக்கும். ஆசிரியர்களை மதித்து நடந்தால் அந்த தடைகள் நிவர்த்தியாகும். காதல் கல்யாணம் கைகூடி வரும். பெண்களுக்கு அற்புதமான ஆண்டாக இருக்கும். 9 ஆம் இடத்தில் கேது இருப்பதால் தந்தை, தாயின் உடல் நிலையில் கவனம் தேவை. புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். ராமர் வழிபாடு உங்களுக்கு அற்புதமான ஏற்றத்தைக் கொடுக்கும்.
பயணம்
நிறைய பாடங்களை சொல்லிக் கொடுக்கக்கூடிய ஆண்டாக இருக்கும். நிறைய ஏமாற்றங்களைச் சந்திப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் சொத்துகள் ஏமாற்றப்படும். 2 இல் ராகு இருப்பதால் பேச்சில் கவனம் தேவை. வீட்டில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். வீட்டில் இருப்பவர்களே எதிரியாக மாறும் வாய்ப்புள்ளதால் தூர தேசங்களுக்குச் செல்வது, பயணம் மேற்கொள்வது நன்மை பயக்கும். பழனி சென்று முருகரை வழிபாடு செய்வது மன நிம்மதியைத் தரும்.












Click it and Unblock the Notifications