தமிழ் புத்தாண்டு பலன்: ரிஷப ராசிக்கு ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.. தொட்டதெல்லாம் தங்கமாகும் நேரம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் இந்த பராபவ ஆண்டில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு லாபத்தில் சனி பகவான் இருக்கிறார். உத்தியோகம் ரீதியாக கடந்த ஓராண்டாக நிறைய பிரச்சனைகளை சந்தித்திருப்பார்கள். லாபத்துக்கு வரக்கூடிய சனி பகவான் உங்களுக்கு மிகுந்த மேன்மையைத் தருவார். இதுநாள் வரை வேலையில் இருந்துவந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். களத்திர ஸ்தானதிபதி செவ்வாய் 11 ஆம் இடத்தில் சனியோடு சேர்ந்திருப்பதால் முதல் திருமணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாவது திருமணம் செய்யக்கூடிய யோகம் உண்டாகும்.

வெளிநாடு வாய்ப்பு
3 ஆம் இடத்திற்கு குரு பகவான் வருவதால் நிறைய சொத்துகள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். பழைய சொத்துகளை விற்று புது சொத்துகளை வாங்கக்கூடிய அமைப்பு உள்ளது. காதலை மெல்ல வெளிப்படுத்தி வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டாகும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டில் உயர்கல்வி படிக்கும் வாய்ப்பு ஏற்படும். நிதி சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லும் அமைப்பு உள்ளது. ரிஷப ராசியினர் அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனை வழிபாடு செய்வது, கிரிவலம் வருவது ஏற்றத்தை ஏற்படுத்தும்.
அனுகூலம்
ரிஷப ராசியினருக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆடி மாதத்திற்கு மேல் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பணத்தை முதலீடு செய்வது, கூட்டுத் தொழில செய்வதாக இருந்தால் ஏமாறக்கூடிய வாய்ப்புள்ளதால் பணம் சாரந்த விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கேதுவும், ராகுவும் 4, 10 இல் இருப்பதால் கவனமாக இருப்பது நன்மை பயக்கும். எல்லை தெய்வ வழிபாடு செய்வது முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
முன்னேற்றம்
பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. எளிமையாக நிறைய சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். சகோதர, சகோதரிகளை சேர்த்து முன்னேறச் செய்வது, உதவி செய்வது நன்மை பயக்கும். உங்கள் இயற்கையான சுபாவத்துக்கு மீண்டும் திரும்புவது நன்மை பயக்கும். இந்த ஆண்டில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் அதிலிருந்து மீண்டு வெற்றி பெறும் யோகம் உண்டு.
காதல் திருமணம்
ராசிக்கு 2 ஆம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். குடும்ப வாழ்க்கையில் நிம்மதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்படும். புதிய தெம்பு கிடைக்கும். நிறைய காதல் திருமணங்கள் நடக்கும் யோகம் உண்டு. உங்கள் மனதிற்குப் பிடித்த வரன் அமையும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, ஒற்றுமை ஏற்படும். தந்தையார், தந்தை வழி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வேலை, தொழிலில் கண்டிப்பாக அடுத்த ஒரு வருடத்தில் மாற்றம் ஏற்படும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும் அமைப்பு உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications