தை மாத பலன் 2026: கும்ப ராசிக்கு சொத்துகளைக் குவிக்கும் யோகம்.. பண வரவு கொட்டும்
தை மாத ராசி பலன்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான் தை மாதம் மகர மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனுடைய தேர் பாதை தெற்கு திசையில் இருந்து வடக்கு திசைக்கு மாறும் மாதமே மகர மாதம். தை மாதம் பிறந்தால் வழி பிறக்கும் என்று பலர் காத்துக் கொண்டிருப்பார்கள். மகாபாரதத்தின் பிதாமகனான பீஷ்மர் இந்த தை மாதத்துக்காகவே அம்பு படுக்கையில் தன் உயிர் போவதற்காக காத்துக் கொண்டிருப்பாராம். அந்த அளவுக்கு புனிதமான மாதம்.

சூரியன் வழிபாட்டுக்கு உகந்த மாதம். சூரியனை வழிபடும் பண்டிகையே பொங்கல் பண்டிகை. சூரியன் இல்லை என்றால் இந்த உலகமே இல்லை. கேட்டை நட்சத்திரத்தில் விருச்சிக ராசியில் சித்த யோகத்தில் பொங்கல் பண்டிகை அமைந்துள்ளது. இந்த தை மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு தை மாதம் திருப்புமுனை தரும் மாதமாக இருக்கும். வக்கிரமாக இருந்த குரு பகவான் வக்கிர நிவர்த்தியாகிறார். 5 ஆம் இடத்து குரு பகவான் சொத்துகளைக் கொடுப்பார். பந்தயங்களில் வெற்றி ஏற்படும் எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். சனி பகவான் 2 ஆம் இடத்தில் வக்கிரமாக இருந்தார். தற்போது வக்கிர நிவர்த்தியாகிறார்.
லாபம் கொட்டும்
5 ஆம் இடத்தில் இருந்த குரு பகவான் 7 ஆம் பார்வையாக 11 ஆம் இடத்தைப் பார்க்கிறார். செவ்வாய், சூரியன், சுக்கிரன் ஆகியவை 11 ஆம் இடமான லாப ஸ்தானத்தில் இவ்வளவு கிரகங்கள் இருக்கும்போது லாபங்கள் அதிகரிக்கும். 11 ஆம் இடமென்பது உபஜெய ஸ்தானம். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும்.
சொத்துகள் கிடைக்கும்
நண்பர்களால் கிடைக்கக்கூடிய நல்ல விஷயங்கள் உங்களை வந்து சேரும். மாமனார் சொத்து, இடங்கள், கார், நகை போன்றவை உங்கள் கைக்கு வந்து சேரும் யோகம் உண்டாகும். ராசியிலேயே ராகு இருப்பதால் தவறான தொடர்புகள், தவறான நண்பர்கள் சேர்க்கை, தேவையில்லாத பழக்க வழக்கங்கள் உண்டாகும்.
தொழில்
வாழ்க்கையில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். செய்யும் வேலைகளில் முனைப்புடன் கவனம் செலுத்துவது நல்லது. தேவையில்லாத பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. 3, 10க்கு உடைய செவ்வாய் உச்சம் பெறுவதால் தை மாதத்திற்குப் பிறகு அற்புதமான பலன்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அனுகூலம்
ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும். சாதாரணமாக செய்யும் விஷயங்களில் கூட அசாத்தியமான லாபங்கள் கிடைக்கும். தெய்வத்தின் அருள் கிடைக்கும். குபேர சம்பத்துகள் கிடைக்கும். ராகுவைப் பொருத்தவரை திருப்பாம்புபுரம், திருநாகேஸ்வரம் செல்வது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். வீட்டின் அருகில் உள்ள புற்றுக் கோயில்களுக்கு செல்வது நன்மை பயக்கும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications