புலிவாகனத்தில் மகரசங்கராந்தி பிரவேசம் - யாருக்கு ராஜயோகம்... யாருக்கு நஷ்டம் தெரியுமா
காலதேவதை மகரசங்கராந்தியின் பிரவேசம் இன்னும் சில தினங்களில் நிகழ உள்ளது. 2022 ஜனவரி தொடங்கி 2023 ஜனவரி வரை என்ன பலன்கள் நடைபெறும் என்பதை தனது லட்சணங்களினால் உணர்த்துகிறார்.
சென்னை: மகரசங்கராந்தி என்னும் கால தேவதை இந்த ஆண்டு தை மாதம் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜனவரி 14,2022 வளர்பிறை துவாதசி திதி ரோகிணி நட்சத்திரம் பிராம்யம் நாமயோகம் , பாலவ கரணம் பகல் 2 மணி 29 நிமிடத்தில் ரிஷப லக்னத்தில் மகர ராசியில் பிரவேசிக்கிறார். மகரசங்கராந்தி தேவதையின் தோற்றம், உடை, வாகனம், உணவு, அணிந்திருக்கும் ஆபரணம், புஷ்பம் போன்றவற்றுக்குத் தக்கபடி தேசத்தின் அப்போதைய நன்மை தீமைகளுக்குப் பலன் கூறுவார்கள்.
தை மாதத்தில் சூரியனுக்கு பகன் என்று பெயர். தை மாதம் சூரியனை வழிபட்டவர்களுக்கு எல்லா வளங்களும், பால்பாக்கியமும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதுவரை தெற்கு திசையில் பயணித்து வந்த சூரியன், தனது பயணத்தை தைமாத பிறப்பன்று வடக்கு திசையை நோக்கி தொடங்குகிறார். இதை உத்திராயண புண்ணியகாலம் என்பர்.
உத்திராயணம் என்றால் வடக்குப்புறமான வழி என்று பொருள். இக்காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும். ஆண்டுதோறும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாதங்கள் உத்தராயணம் என்றும் ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்கள் தட்சிணாயணம் என்றும் கூறப்படுகிறது. இதில் தை மாதம் முதல்நாளை மகர சங்கராந்தி, தைப் பொங்கல் என்று கொண்டாடுகிறோம்.

மகர சங்கராந்தி பலன்கள்
ஒவ்வொரு ஆண்டுக்கும் சங்கராந்தி தேவதை என்று ஒன்று உண்டு. இதனை 'மகர சங்கராந்தி தேவதை' என்று அழைப்பார்கள். இவ்விதம் 60 வருடங்களுக்கு தனித்தனிப் பெயருடைய சங்கராந்தி தேவதைகள் உள்ளன. இந்த தேவதைகளின் தோற்றம், உடை, வாகனம், உணவு, அணிந்திருக்கும் ஆபரணம், புஷ்பம் போன்றவற்றுக்குத் தக்கபடி தேசத்தின் அப்போதைய நன்மை தீமைகளுக்குப் பலன் கூறுவார்கள். இந்த ஆண்டு மகரசங்கராந்தி பலன்கள் பற்றி பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

புலி மீது வரும் மகர சங்கராந்தி
இந்த ஆண்டு மகர சங்கராந்தியின் பெயர் மிஸ்ரா சௌக்கியம் என்று பெயர். புலி வாகனத்தில் வருவதால் மிருக பயம் இருக்கும். மக்களுக்கு இந்த ஆண்டு மிருகங்களால் தொல்லை ஏற்படும். சிவப்பு வஸ்திரம் அணிந்து வருகிறார்.

தானிய விருத்தி
ஆபரணம் - வைடூரியம் கலகம், ரோக பயம் உண்டாகும். அபிஷேகம் தயிர் செய்யப்படுவதால் எருமைகளுக்கு நாசம் ஜகத் பயம் உண்டாகும். தங்கக்குடை சூடி வருவதால் தங்கம் விலை ஏறும். பாத்திரம் - தாமிரம் விருஷ்டி சுபிட்சம் ஏற்படும். திக்கு மேற்கு திசை என்பதால் சகலவிதமான சம்பத்துக்களும் ஏற்படும். ரிஷப லக்கினம் என்பதால் சுபிட்சம் உண்டாகும்.

யாருக்கு நன்மை
கிருத்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தனநாசமும் திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம் மகம், பூரம் ஆகிய 6 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தன லாபமும் உத்திரம், ஹஸ்தம், சித்திரை ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இடமாற்றமும் ஏற்படும்.

இவர்களுக்கு நன்மை
சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை,மூலம், பூராடம்,ஆகிய 6 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஸ்தான லாபமும், உத்திராடம், திருவோணம், அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராஜகோபமும், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராஜ வெகுமானமும் மகர சங்கராந்தி பலன்களாகும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications