கரிநாள்.. தை பொங்கல் நாளில் மறந்தும் இந்த விசயங்களை செய்து விடாதீர்கள்..காரியம் கெட்டுவிடுமாம்!
சென்னை: கரி நாளில் நல்ல காரியம் செய்யக்கூடாது என்று சொல்வார்கள். முன்னோர்கள் எந்த ஒரு காரியத்தையும் காரணமின்றி சொல்லி வைத்திருக்க மாற்றார்கள். சூரியனை வணங்கும் தை பொங்கல் பண்டிகை நாளில் கரி நாட்களாக பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கரி நாளில் ஏன் நல்ல காரியம் செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
சூரியனின் பயணம்: கரி நாட்கள் சூரிய சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டதாகக் கருதலாம். எனவே கரி நாட்கள் என்பதை வெறும் தமிழ் தேதிகளாக கருதாமல், சூரியனின் சஞ்சார பாதைகளாக எடுத்துக்கொள்ளலாம். கரி நாட்களைப் போன்றதே தனிய நாட்களாகும். இந்த விளக்கங்கள் தனிய நாட்களுக்கும் பொருந்தும். கரி நாட்களில் இனி நல்ல விசயங்களை செய்வதை தவிர்த்து விடுவது அனைவருக்குமே நல்லது.

நல்ல காரியம் செய்யலாமா: சந்திரனை வைத்து சந்திராஷ்டமம் எப்படி கணிக்கப்படுகிறதோ அதே போல சூரியனை அடிப்படையாக வைத்து கரிநாள் கணிக்கப்படுகிறது. சந்திராஷ்டம நாளில் நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்கின்றனர். முக்கிய முடிவுகளை எடுப்பதில்லை. அதே போல கரிநாளில் சுப காரியங்கள் செய்வதில்லை. திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் உள்பட எந்த நல்லகாரியங்களும் கரிநாளில் செய்வதில்லை.
கரிநாள் என்றால் என்ன: நமது முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக ஆராய்ந்து முடிவு செய்து வைத்திருக்கும் நாட்கள் இவை. இந்நாட்கள் வருடத்திற்கு வருடம் மாறுபடாதவை. தமிழ் மாத தேதிகளின் அடிப்படையில் இந்நாட்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். கரிநாள் என்பது ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள் என்பதே. கரிநாள் என்றால் நஞ்சு என்று பொருள்படும். அன்றைய தேதியில் சூரியக் கதிர்வீச்சின் தாக்கம் பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும்.
விஷ நாட்கள்: கரிநாள் என்றால் நஞ்சு என்று பொருள்படும். எனவே இந்த நாட்களை ஒதுக்கிவிடும்படி பஞ்சாங்கங்களும் ஜோதிடர்களும் பரிந்துரைக்கிறார்கள். கரிநாள் என்பது ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள் என்பதே. இந்த நாளை தனிய நாட்கள் என்றும் கூறுகிறார்கள். இந்த நாட்களில் நல்ல காரியங்கள் எதுவும் செய்ய மாட்டார்கள்.
டென்சன் அதிகமாகும்: சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும் பொழுது, நமது உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும், ஹார்மோன்களும் சராசரிக்கும் சற்று கூடுதலாக அதிக அளவில் தூண்டப்படுகின்றன. இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுதல், டென்ஷன் ஆதல், ஆராயாமல் உடனுக்குடன் முடிவெடுத்தல் போன்ற நிகழ்வுகளுக்கு அதிக வாய்ப்பு உண்டாகும். இது போன்ற காரணங்களால் கரி நாட்களில் சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்த்திருக்கிறார்கள்.
சூரியனின் கதிர்வீச்சு: சித்திரையில் சூரியன் மேஷம் ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கி பங்குனியில் மீனம் ராசியில் தனது சுற்றினை முடிக்கிறார். 12 ராசிகளில் சூரியன் கடந்து செல்வதை வைத்து தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுவதால் சூரியனின் கதிர்வீச்சு வேகத்தை வைத்து கரிநாள் கணக்கிடுகின்றனர். இது வானவியல் ரீதியாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நிர்ணயம் செய்யப்பட்ட நாட்கள்தான். கரிநாள் என்பது நல்ல நிகழ்வுகளைச் செய்ய ஏற்ற நாள் இல்லை என்பது ஜோதிட நம்பிக்கை.
சுப காரியம் செய்யலாமா: ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் கரிநாள் வரும். ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் இந்த இந்த தேதிகள் கரிநாட்கள் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இந்தத் தமிழ்த் தேதிகள் மாறாதனவாகும். எந்த ஒரு தமிழ் ஆண்டுக்கும் இது பொருந்தும். எடுத்துக்காட்டாக, தை மாதம் 1, 2, 3, 11, 17 ஆகிய தேதிகள் கரிநாட்களாகும். இவை மாறவே மாறாது. இந்த நாட்களில் மறந்தும் சுப காரியங்களை செய்து விடாதீர்கள். இந்த நாட்களில் நல்ல காரியம் செய்யத் தொடங்கினால் அவை தடைபடும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications