சனியின் கோபத்திற்கு ஆளாகும் 4 ராசிகள்.. 40 நாட்களில் என்னென்ன நடக்கப் போகுதோ?
சனி பார்வை: கர்மக்கராகனாக விளங்கும் ராசிபகவான் அதிர்ஷ்டத்தையும் சரி, துரதிர்ஷ்டத்தையும் சரி சமமாக வழங்கக் கூடியவர். இந்த முறை சனியின் கோபப் பார்வையில் சிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்
நீதிமான் என்று அழைக்கப்படக் கூடியவர் சனி பகவான். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பலன்களை சரிசமமாக தரங்கூடியவர். ஜோதிட சாஸ்திரத்தின்படி சனி பகவான் முக்கிய கிரகமாக கருதப்படுகிறது. சனி பகவான் நீதி, நேர்மை, கர்ம விணைகள் என பல விஷயங்களை மக்களுக்கு காண்பிப்பவர். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நமக்கு பலன்களை அள்ளித் தருவார்.

சனி பகவானின் கோபத்திற்கு ஆளானால் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கும் நிலைக்கு ஆளாவோம். இவரது கோபப்பார்வையில் பட்டால் வாழ்வில் இல்லாத துன்பம் துயரம் படுவோம். பொதுவாக சனி கிரகமானது ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு போவதற்கு மிகவும் தாமதமாகும். இருப்பினும் சனி பகவான் அதன் தாக்கத்தை அனைத்து ராசிகளுக்கு ஏற்படுத்தக்கூடியவர் ஆவார்.
ஒருவருடைய ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் இருப்பது என்பது மிகவும் முக்கியம். அப்படி சனி நிற்கும் நிலை சரியாக இல்லையெனில் அது அந்த ராசியினருக்கு பல முறை துரதிர்ஷ்டமாக அமையக் கூடும். ஒருவருடைய வாழ்க்கையையே புரட்டிப் போடும் வலிமை வாய்ந்த கிரகம் சனி. இந்த முறை சனி பகவானின் கோபப் பார்வையில் சில ராசிகள் இருக்கின்றனர்.
சனி பகவான் தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வருகிறார். பிப்ரவரி மாத இறுதியில் அஸ்தமிக்க உள்ளதால் இது மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தாக்கத்தால் 4 ராசிக்காரர்கள் 40 நாட்களுக்கு மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்று கூறப்படுகிறது. சனி பகவான் சஞ்சரிப்பதால் 40 நாட்கள் சில ராசிகளுக்கு 40 ராசிகளுக்கு கெட்ட காலமாக இருக்கும். அந்த வகையில், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்: சனி பகவானின் சஞ்சாரத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்களுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் அளவுக்கு பிரச்சனைகள் ஏற்படும். பெயர் கெடுவதற்கும் வாய்ப்புள்ளது. எந்த விஷயங்களை எடுத்தாலும் அதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பேசும் வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். அலுவலகத்தில் வீண் வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு செய்யும் வியாபாரம், தொழில் ரீதியான பிரச்சனைகள், சவால்ககளைச் சந்திக்கக்கூடிய காலமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உங்களை பற்றி தேவையில்லாத மற்றும் அவதூறான கருத்துகள் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்கள் நண்பர்கள், உடன் இருப்பவர்களுடனேயே சண்டைகள், மனஸ்தாபங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் சஞ்சாரத்தால் தொழில் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. கணவன், மனைவிக்கிடையே பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. பணம் சார்ந்த விஷயங்களில் இழப்புகள் உண்டாகும். குடும்பத்தில் பிரச்சனைகள், தகராறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வேலையில் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்: மகர ராசியை சேர்ந்தவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் மனப் பதற்றம், மன அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. மற்றவர்களின் குத்தும் பேச்சால் பெரிய பிரச்சனைகள் தகராறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திவிடும். தேவையில்லாத இடங்களிலும், நபர்களிடமும் கோபங்கள் ஏற்படும். 40 நாட்களுக்கு மிகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் இழப்புகளைச் சந்திக்க நேரிடும்.












Click it and Unblock the Notifications